• Login
Wednesday, October 7, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

பெரிய பஞ்சம் வரப்போகுது! விஜய் அரசுக்கு காத்திருக்கும் நெருக்கடி! டெல்டாவிலிருந்து நேரடி ரிப்போர்ட்! | Public Discontent Against Vijay Government Over Rice Price Rise! OneIndia Tamil Live Report From Delta

GenevaTimes by GenevaTimes
October 7, 2026
in இந்தியா
Reading Time: 3 mins read
0
பெரிய பஞ்சம் வரப்போகுது! விஜய் அரசுக்கு காத்திருக்கும் நெருக்கடி! டெல்டாவிலிருந்து நேரடி ரிப்போர்ட்! | Public Discontent Against Vijay Government Over Rice Price Rise! OneIndia Tamil Live Report From Delta
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Tamilnadu

oi-Halley Karthik

Time
Published: Wednesday, October 7, 2026, 22:49 [IST]

திருவாரூர்: முதலமைச்சர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றி கழகம் ஆட்சிப்பொறுப்பேற்று நான்கு மாதங்கள் நிறைவடைந்திருக்கும் நிலையில்? தற்போது இந்த அரசு மிகப் பெரிய நெருக்கடியை எதிர்கொண்டிருக்கிறது. தமிழ்நாடு முழுவதும் அரிசி விலை கடுமையாக உயர்ந்திருப்பது அரசுக்கு பின்னடைவை ஏற்படுத்தியிருக்கிறது. குறிப்பாக டெல்டா மாவட்டங்களில் அரிசி விலை உயர்வு மக்களை பெரிய அளவில் பாதித்திருக்கிறது.

டெல்டா மாவட்டங்களில் இருந்துதான் தமிழ்நாடு முழுவதற்கும், வெளிநாடுகளுக்கும் அரிசி உற்பத்தி செய்து ஏற்றுமதி செய்யப்படுகிறது. ஆனால், இங்குள்ள மக்களாலேயே இந்த அரிசியை வாங்கி பயன்படுத்த முடியாத அளவுக்கு விலைவாசி உயர்வு பாதிப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Vijay Government

களத்திலிருந்து நேரடி ரிப்போர்ட்

மக்கள் எந்த அளவுக்கு பாதிப்படைந்திருக்கிறார்கள் என்பது குறித்து ஒன் இந்தியா தமிழ் நேரடியாக களத்தில் இறங்கி விசாரித்தது. திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் நடத்தப்பட்ட நேரடி கள ஆய்வில் மக்கள் தங்கள் கருத்துக்களை பகிர்ந்துக்கொண்டிருக்கின்றனர்.

அவர்கள் கூறியதாவது, “நாங்க ஒவ்வொரு மாசமும் 26 கிலோ சிப்பம் எடுப்போம். ஆனா கடந்த மூனு மாதத்தில் மட்டும் அரிசி விலை மூட்டைக்கு 200லிருந்து 300, 400 ரூபாய் வரைக்கும் ஏறி இருக்கு. அதனால நாங்க மூட்டையா எடுக்காம ஐந்து கிலோ பத்து கிலோவா தனித்தனியா வாங்கிட்டு இருக்கோம்.

Vijay Government

முன்னாடி மாதிரி வாங்க முடியல

ஒரு நாளைக்கு கூலியே ரூ.300 தான். ஆனா அரிசி வாங்கவே 70-லிருந்து 100 ரூபாய் வரைக்கும் செலவாகுது அப்படின்னா.. அந்த கூலியை வைத்து எப்படி குடும்பத்தை நடத்துவது? மூணு மாசத்துக்கு முன்னாடி வரைக்கும் கிலோ 65 ரூபாய், 70 ரூபாய் வித்துக்கிட்டு இருந்த அரிசி.. இன்னைக்கு கிலோ 85-90 ரூபாய் வரைக்கும் ரேட் ஏறிடுச்சு. எங்களால் அதை வாங்கி பயன்படுத்த முடியல. போற போக்க பாத்தா ரேஷன் அரிசி தான் சாப்பிடுவோம் போல. அந்த அளவுக்கு ரேட் எகிறி இருக்கு” என்று முதியவர் கூறியிருக்கிறார்.

நான் விஜய் ஆதவாளர்தான்!

மற்றொருவர் பேசுகையில், “நான் தவெக ஆதரவாளர்தான். விஜய் முதலமைச்சராக ஆகணும்னு ஆசைப்பட்ட ஆள் தான். ஆனா அரிசி விலை உயர்வு எங்க குடும்பத்தையும் ரொம்பவே பாதிச்சிருக்கு. நாங்க கர்நாடகா பொன்னி அரிசி தான் வாங்கறோம். இன்னிக்கி இந்த அரிசியோட ரேட்டு மூட்டைக்கு 400 ரூபாய் வரைக்கும் அதிகமா இருக்கு. அரிசி என்பது அத்தியாவசிய தேவை. அன்றாட வாழ்வாதாரத்துக்கு ரொம்ப முக்கியமானது. இதோட விலை உயர்வு எல்லா தரப்பு மக்களையும் பாதிக்கும். அதனால அரசு உடனடியா இந்த விஷயத்துல தலையிட்டு அரிசி விலை உயர்வை கட்டுக்குள் கொண்டு வரணும் கேட்டுக்குறோம்” என்று கூறியுள்ளார்.

Vijay Government

அரிசி விலை மட்டுமா?

தையல் தொழிலாளர் கூறுகையில், “அரிசி மட்டுமில்லாமல்.. சமையல் எண்ணெய், சீனி, பருப்பு, வெல்லம் இப்படி மற்ற பொருட்களோட ரேட் தீபாவளி நெருங்குற நேரத்துல ஏறியிருக்கு. இந்த விலைவாசி உயர்வு எங்களை ரொம்பவே பாதிச்சிருக்கு.

என் கடைக்கு பக்கத்துல தான் அரிசி கடை இருக்கு. தெரிஞ்சவங்க என்றதுனால மூட்டைக்கு ரூ.50 குறைச்சு கொடுப்பாங்க. ஆனா, ரெண்டு மாசத்துக்கு முன்னாடி வாங்குன அரிசி மூட்டைக்கும்.. இப்ப வாங்குற அரிசி மூட்டைக்கும் ரேட்டு ரூ.300 வரைக்கும் அதிகமா இருக்கு. அரிசி, பருப்பு விலை ஒரு பக்கம் உயரது அப்படின்னாலும்.. இன்னொரு பக்கம் மின்வெட்டு பிரச்சினை ரொம்பவே எங்களை பாதிச்சிருக்கு.

Vijay Government

போன மாசத்துல 20 தேதிக்கு மேல ஒரு முறை முன்னறிவிப்பே இல்லாம ஒரு நாள் முழுக்க கரண்ட் கட் பண்ணாங்க. இப்போ மறுபடியும் இன்னைக்கு அறிவிக்கப்பட்ட மின்வெட்டு இருக்கு. இப்படி ஒன்னு போனா இன்னொன்னு மக்கள் பெரிய நெருக்கடியில் சிக்கி இருக்காங்க. அரசு இதை எல்லாம் சரி செய்ய உறுதியான நடவடிக்கை எடுக்கணும்” என்று கூறுகிறார்.

புலம்பும் வியாபாரிகள்

அரிசி கடைக்காரர்கள் விற்பனையாளர்கள் பேசும்போது, “நாங்க ஒரு முறை மொத்தமா 25 மூட்டை அரிசி வாங்கி வச்சு வியாபாரம் பண்றவங்க. ஆனா அடுத்த முறை வாங்க போகும்போது.. ரேட்ட அப்படியே கூடி இருக்கு. இங்க வந்து வித்தா.. மக்கள் எங்கள கேள்வி கேக்குறாங்க. நேத்து விலைக்கு இன்னைக்கு விலைக்கும் ஏன் இந்த வித்தியாசம்னு கேக்குறாங்க. குறையுமான்னு கேக்குறாங்க. விலை உயர்ந்தாலும் எங்களுக்கு வியாபாரம் ஆகுது. ஆனா.. முன்னாடி 20 மூட்ட அளவுக்கு நடந்த வியாபாரம், இன்னிக்கு 8 முட்டை 10 மூட்டை அளவுக்கு குறைந்து தான் நடக்குது. அரிசி விலை உயர்வால் சாமானிய மக்கள் எல்லாம் ரொம்ப பெரிய அளவுக்கு பாதிக்கப்படுறாங்க. மக்களுடைய கவலைகளை அரசு கவனத்தில் எடுத்துக்கணும். எடுத்து ஒரு தீர்வு சொல்லணும்” என்று கூறுகின்றனர்.

Vijay Government

நிம்மதியில்லாத விவசாயிகள்

விவசாயிகள் கூறுகையில், “ஆத்துல தண்ணி திறந்து விட்டிருக்காங்க. ஆனா இப்ப வரைக்கும் வயலுக்கு தண்ணி ஏறல. வாய்க்காலில் தண்ணீர் வரல. கடைமடை வரைக்கும் தண்ணி போகல. நாங்க போர் தண்ணியை நம்பி தான் விவசாயம் பண்ணிட்டு இருக்கோம். இப்பவே 400 அடிக்கு கீழ தண்ணி போயாச்சு. அடுத்த வருஷம் எல்லாம் 600 அடிக்கு போயும் தண்ணி கிடைக்காதுன்னு நினைக்கிறேன். விவசாயிகளோட நிலைமை இப்படித்தான் இருக்கு. இதெல்லாம் சேர்ந்துதான் அரிசி விலை உயர்வை கொண்டு வந்திருக்கு. எனவே இந்த பிரச்சனைகள் எல்லாம் அரசு ஒழுங்குப்படுத்தி விலைவாசி உயர்வ கட்டுப்படுத்தணும்” என வலியுறுத்தியுள்ளனர்.

English summary

Public Discontent Against Vijay Government: Four months into the tenure of the Tamilaga Vetri Kazhagam government led by Chief Minister Vijay, the administration is currently facing a major crisis. The sharp rise in rice prices across Tamil Nadu has dealt a setback to the government; the hike has significantly affected the public, particularly in the Delta districts.

Read More

Previous Post

16 புதிய வானங்களை குத்தகைக்கு எடுக்கும் ஜனாதிபதி செயலகம்!

Next Post

வெனிசுலாவில் அடுத்தடுத்து வரும் எண்ணெய் கப்பல்.. டெலிவரி இடம் எது தெரியுமா..? | Venezuela Crude Oil Shipments to India Surge 2x in October: Every Single Tanker Headed to Ambani’s Gujarat Sikka Port

Next Post
வெனிசுலாவில் அடுத்தடுத்து வரும் எண்ணெய் கப்பல்.. டெலிவரி இடம் எது தெரியுமா..? | Venezuela Crude Oil Shipments to India Surge 2x in October: Every Single Tanker Headed to Ambani’s Gujarat Sikka Port

வெனிசுலாவில் அடுத்தடுத்து வரும் எண்ணெய் கப்பல்.. டெலிவரி இடம் எது தெரியுமா..? | Venezuela Crude Oil Shipments to India Surge 2x in October: Every Single Tanker Headed to Ambani's Gujarat Sikka Port

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin