ஜனாதிபதி செயலகமானது குத்தகை அடிப்படையில் 16 மோட்டார் வாகனங்களைப் பெற்றுக்கொள்வதற்குக் திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க நாடாளுமன்றத்தில் இதனை தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர், 16 வாகனங்களை இயக்கக் குத்தகை (Operational Leasing Method) முறையில் பெற்றுக்கொள்வது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் மற்றும் டெண்டர் அறிவிப்பு ஏற்கெனவே வெளியிடப்பட்டுள்ளதாக சாமர சம்பத் தசநாயக்க சுட்டிக்காட்டினார்.
அரசாங்கத் தரப்பு
இதுவரை இந்த விடயம் தொடர்பாக உங்களுக்குத் தெரியாவிட்டால் தயவுசெய்து உடனடியாக ஆராய்ந்து நடவடிக்கை எடுங்கள் என அரசாங்கத் தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களை நோக்கி அவர் வலியுறுத்தினார்.

குறித்த டெண்டர் அறிவிப்பின்படி, ஜனாதிபதி செயலக பயன்பாட்டிற்காக சிறிய ரக எஸ்.யூ.வி (Compact SUVs) மற்றும் ஹைபிரிட் ரக ஹேட்ச்பேக் (Compact Petrol Hybrid Hatchbacks) வாகனங்கள் உள்ளிட்ட 16 மோட்டார் கார்களைக் குத்தகைக்கு எடுக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…! |

