Last Updated:
நியூசிலாந்துக்கு எதிரான டி-20 கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணியில் புவனேஸ்வர் குமார் இடம் பிடித்து வியக்க வைத்துள்ளார்.
நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி, அந்நாட்டு அணிக்கு எதிராக 5 போட்டிகளை கொண்ட டி-20 தொடரில் விளையாட உள்ளது. இதையடுத்து ஒரு நாள் மற்றும் டெஸ்ட் தொடர்களிலும் பங்கேற்க உள்ளது. இந்த நிலையில் ஷ்ரேயஸ் தலைமையில் 16 பேர் கொண்ட இந்திய அணியை பிசிசிஐ அறிவித்துள்ளது.
அதில், 4 ஆண்டுகளுக்குப் பின் வேகப்பந்துவீச்சாளர் புவனேஸ்வர் குமார் இடம் பிடித்துள்ளார். தற்போது 36 வயதாகும் இவர், கடைசியாக 2022 நவம்பர் மாதம் இந்திய அணிக்காக விளையாடினார். ஐபிஎல் கிரிக்கெட்டில் தொடர்ந்து விளையாடிய இவர், கடந்த 2 தொடர்களில் பெங்களூருவுக்காக 45 விக்கெட்டுகளை கைப்பற்றி அந்த அணி அடுத்தடுத்து மகுடம் சூட முக்கிய காரணமாக விளங்கினார். இருந்தபோதும், மீண்டும் இந்திய அணியில் இடம் கிடைக்குமா என்பது குறித்து யோசிக்கவில்லை என்று தெரிவித்தார்.
இந்த நிலையில் 2027 ஒருநாள் கிரிக்கெட் உலக கோப்பை தொடரை கருத்தில் கொண்டு தற்போது டி-20 அணியில் வாய்ப்பு வழங்கியதாக கூறப்படுகிறது. தற்போதைக்கு ஜஸ்பிரித் பும்ராவை தவிர்த்து எஞ்சிய வேகப்பந்துவீச்சாளர்கள் சொல்லிக்கொள்ளும் படி ஜொலிக்கவில்லை. எனவே, ஸ்விங் மன்னன் என அழைக்கப்படும் புவனேஸ்வர் குமார், 2027 உலகக் கோப்பையில் பும்ராவுடன் சேர்ந்து கலக்குவதற்கு பொன்னான வாய்ப்பு கிடைத்துள்ளததாக அவரது ரசிகர்கள் கருதுகின்றனர்.


