அநுராதபுரம் நோக்கிப் பயணித்த தனியார் பேருந்து ஒன்று விபத்திற்குள்ளாகியுள்ளது.
குறித்த விபத்து சம்பவம் இன்று (07-10-2026) இடம்பெற்றுள்ளது.
திறப்பனை காவல் பிரிவிற்குட்பட்ட A09 வீதியின் கல்குலம பகுதியில் இவ்விபத்து சம்பவத்துள்ளது.
மேலதிக விசாரணை
நிகவரெட்டியவிலிருந்து அநுராதபுரம் நோக்கிப் பயணித்த தனியார் பேருந்து ஒன்று வீதியை விட்டு விலகி மரத்துடன் மோதி இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.

இந்த விபத்தில் 14 பேர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…! |

