• Login
Tuesday, October 6, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

பாய்ந்து வந்த மிசைல்.. நடுக்கடலில் இந்திய மாலுமிகள் எதிர்கொண்ட பிரச்சனை! ஹார்முஸ் ஜலசந்தியில் ஷாக் | Ship With Indian Sailors Attacked in Strait of Hormuz, India Strongly Condemns Strike

GenevaTimes by GenevaTimes
October 6, 2026
in இந்தியா
Reading Time: 1 min read
0
பாய்ந்து வந்த மிசைல்.. நடுக்கடலில் இந்திய மாலுமிகள் எதிர்கொண்ட பிரச்சனை! ஹார்முஸ் ஜலசந்தியில் ஷாக் | Ship With Indian Sailors Attacked in Strait of Hormuz, India Strongly Condemns Strike
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


International

oi-Halley Karthik

Time
Published: Tuesday, October 6, 2026, 18:49 [IST]

தெஹரான்: எப்போது ஈரான் மீது அமெரிக்காவும், இஸ்ரேலும் தாக்குதல் நடத்த தொடங்கியதோ.. அன்று முதல் ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல் போக்குவரத்துக்கு நிம்மதியாக நடக்கவில்லை. அப்படித்தான் இன்று இந்திய மாலுமிகள் பயணித்த கப்பல் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டிருக்கிறது.

ஓமன் நாட்டின் கடற்கரைக்கு பக்கத்தில், சர்வதேச கடல் வழி போக்குவரத்திற்கு மிக முக்கியமான ஹார்முஸ் ஜலசந்தியில் இந்த தாக்குதல் நடந்து இருக்கிறது. பனாமா நாட்டின் கொடியுடன் பயணித்த ‘எம்டி ஆன் பீஸ்’ என்ற வணிக கப்பல் மீது.. அடையாளம் தெரியாத ஒரு ஏவுகணை விழுந்து தாக்கியிருக்கிறது.

Strait of Hormuz

அந்த கப்பலில் மொத்தம் 19 மாலுமிகள் பயணித்திருந்தனர் அவர்களில் 17 பேர் இந்தியர்கள் ஆவார்கள். இந்த தாக்குதலில் கப்பலில் இருந்த 12 மாலுமிகள் காயமடைந்துள்ளனர். நல்வாய்ப்பாக உயிரிழப்பு ஏதும் ஏற்படவில்லை. இருப்பினும் 11 இந்தியர்கள் காயமடைந்திருக்கின்றனர்.

ஹார்முஸ் ஜலசந்தி என்பது பஞ்சாயத்துக்குரிய கடல்வழி பாதையாக இப்போது வரை நீடிக்கிறது. ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதிலிருந்து.. இந்த வழியாக பயணிக்கும் அனைத்து கப்பல்களுக்கும் அச்சுறுத்தல்கள் ஏற்பட்டிருக்கின்றன. ஈரான் ஆதரவு படைகள் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் தொடர்புடைய கப்பல்கள் மீது தொடர்ந்து தாக்குதல்களை நடத்தி வருகின்றன. இதனால் சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை அதிகரித்திருக்கிறது.

இப்படி இருக்கையில் இந்திய மாலுமிகள் பயணித்த கப்பல் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. தாக்குதல் நடந்த உடன் பக்கத்து நாடான ஓமன் நாட்டின் அதிகாரிகள் உதவியுடன் கப்பலில் இருந்த மாலுமிகள் அனைவரும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர். காயம் அடைந்த 11 இந்தியர்கள் உட்பட 12 மாலுமிகளும் தற்போது ஓமனில் உள்ள கசாப் என்ற பகுதியில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

அவர்களுக்கு தேவையான மருத்துவ உதவிகளை ஓமன் அரசு வழங்கி வருகிறது. இந்த தாக்குதலுக்கு இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் கடும் கண்டனத்தை பதிவு செய்திருக்கிறது.

ஹார்முஸ் ஜலசந்தியில் வணிக கப்பல்கள் மீது தொடர்ச்சியாக நடத்தப்படும் இந்த மாதிரியான தாக்குதல்கள் இந்தியாவின் பாதுகாப்புக்கு ஆழ்ந்த கவலையை ஏற்படுத்தியிருப்பதாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்து இருக்கிறது.

அமைதி மற்றும் நிலைத்தன்மையை கருத்தில் கொண்டு.. இந்த மாதிரியான தாக்குதல்கள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என்றும் இந்தியா வலியுறுத்தியுள்ளது. சர்வதேச நீர்வழி பாதைகளில் வணிக கப்பல்கள், மாலுமிகள் மற்றும் பொது சொத்துக்கள் மீது தாக்குதல் நடத்தப்படுவது நிறுத்தப்பட்டு.. பாதுகாப்பான கடல் சார்ந்த வணிகம் உடனடியாக மீட்டெடுக்கப்பட வேண்டும் என்றும் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் தெரிவித்துள்ளார்.

இனி வரும் நாட்களில் இதுபோன்ற தாக்குதல் நடத்தப்படக்கூடாது எனில்.. ஈரான்-அமெரிக்கா இடையே அமைதி ஏற்பட வேண்டும். இதற்காக இந்தியா மட்டும் பேசினால் போதாது.. மொத்த உலகமும் களத்தில் இறங்கி இந்த பிரச்சனையை பைசல் செய்ய வேண்டும். அப்படி நடக்குமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

English summary

Indian Sailors: Ever since the US and Israel began launching attacks on Iran, shipping traffic through the Strait of Hormuz has been far from peaceful. It is in this context that a ship carrying Indian sailors has now come under attack.

Read More

Previous Post

ஞானசாரதேரரின் காவியுடை களைவு :அரசின் நிலைப்பாடு வெளியானது

Next Post

மீண்டும் ஐடி சேவைத் துறையின் ஆதிக்கமா.. 20,000 ஜிசிசி ஊழியர்கள் திடீர் இடமாற்றம்..! | IT Services Reclaim Dominance: Over 20,000 GCC Employees Shift to TCS, HCL, and Wipro as Deals Surge

Next Post
மீண்டும் ஐடி சேவைத் துறையின் ஆதிக்கமா.. 20,000 ஜிசிசி ஊழியர்கள் திடீர் இடமாற்றம்..! | IT Services Reclaim Dominance: Over 20,000 GCC Employees Shift to TCS, HCL, and Wipro as Deals Surge

மீண்டும் ஐடி சேவைத் துறையின் ஆதிக்கமா.. 20,000 ஜிசிசி ஊழியர்கள் திடீர் இடமாற்றம்..! | IT Services Reclaim Dominance: Over 20,000 GCC Employees Shift to TCS, HCL, and Wipro as Deals Surge

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin