யாழில் இளைஞர் ஒருவர் தொடருந்து முன்பாக பாய்ந்து உயிரை மாய்த்துள்ளார்.
இளம் பெண்ணொருவரை கத்தியால் குத்தி கொலை செய்த பின்
அப்பெண்ணின் தாயாரை கத்தியால் குத்தி படுகாயத்திற்கு உள்ளாக்கியதை அடுத்து அவர் இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
கோவில் வீதியில் உள்ள வீடொன்றினில் அத்துமீறி குறித்த இளைஞர் நுழைந்துள்ளார்.
காவல்துறையினர் விசாரணை
இதன்போது வீட்டில் இருந்த
இளம்பெண் மீது கத்திக்குத்து தாக்குதலை மேற்கொண்டதில் குறித்த பெண் சம்பவ
இடத்திலையே உயிரிழந்துள்ளார்.
அதேவேளை குறித்த பெண்ணின் தாயார் மீதும் இளைஞன் கத்தி குத்து தாக்குதலை மேற்கொண்டுள்ளார்.

இதையடுத்து தாயார் படுகாயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில்
அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தாக்குதலை மேற்கொண்ட இளைஞன் அங்கிருந்து தப்பி சென்று அரியாலை பகுதியில்
யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த இரவு தபால் தொடருந்து முன்
பாய்ந்து உயிரை மாய்ந்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாண காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…! |
