தமிழ்த் திரையுலகில் அஜித்–விஜய் இருவரும் நீண்டகாலமாக போட்டி நடிகர்களாக ரசிகர்களால் பார்க்கப்பட்டு வருகின்றனர். இருவரும் ஆரம்பகாலத்தில் ‘ராஜாவின் பார்வையிலே’ திரைப்படத்தில் இணைந்து நடித்தனர். பின்னர் ‘நேருக்கு நேர்’ படத்திலும் நடிக்கத் தேர்வாகியிருந்த நிலையில், அஜித் விலகியதால் அவருக்குப் பதிலாக சூர்யா நடித்தார்.
இந்நிலையில், விஜய் அரசியலில் கவனம் செலுத்தி வரும் நிலையில், அஜித் நடிப்புடன் கார் பந்தயத்திலும் அதிக ஈடுபாடு காட்டி வருகிறார்.
சமீபத்தில் லண்டனில் நடைபெற்ற கார் பந்தய நிகழ்வொன்றில் விஜய் பங்கேற்று போட்டியை ஆரம்பித்து வைத்ததுடன், அஜித்தின் பந்தயக் காரில் அமர்ந்து அவருடன் பயணித்த காட்சிகளும் சமூக வலைத்தளங்களில் கவனம் பெற்றன.
இதற்கிடையில், விஜய் குறித்து அஜித் பேசிய பழைய பேட்டி ஒன்று தற்போது மீண்டும் வைரலாகி வருகிறது.
அந்தப் பேட்டியில் அஜித், “எந்தத் துறையாக இருந்தாலும் இருவருக்குள்ளும் போட்டி இருக்கும்; பொறாமையும் இருக்கும். அப்படித்தான் எனக்கும் விஜய்க்கும் இடையே இருக்கிறது. அதே நேரத்தில், தனிப்பட்ட முறையில் பாதிக்கும் அளவுக்கு எங்களுக்குள் எதுவும் இல்லை. நாங்கள் எதிரிகள் கிடையாது” என்று தெரிவித்திருந்தார்.
மேலும், இருவரும் தனித்தனியாக நடிப்பதன் மூலம் ஆயிரக்கணக்கானோருக்கு வேலைவாய்ப்பு கிடைப்பதாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.
அஜித்தின் இந்தப் பழைய கருத்துகள் அடங்கிய வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பகிரப்பட்டு வருகிறது.


