• Login
Sunday, October 4, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

ஓமன் பைலட் விமானத்தை மோத தேர்வு செய்த இடம் எது தெரியுமா? பலி ஆயிரத்தை தாண்டியிருக்குமாம்! பகீர் | FlyDubai flight: Oman Co Pilot planned t crash the plane into Tel Aviv’s Azrieli Towers

GenevaTimes by GenevaTimes
October 4, 2026
in இந்தியா
Reading Time: 1 min read
0
ஓமன் பைலட் விமானத்தை மோத தேர்வு செய்த இடம் எது தெரியுமா? பலி ஆயிரத்தை தாண்டியிருக்குமாம்! பகீர் | FlyDubai flight: Oman Co Pilot planned t crash the plane into Tel Aviv’s Azrieli Towers
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


International

oi-Nantha Kumar R

Time
Published: Sunday, October 4, 2026, 20:46 [IST]

துபாய்: துபாய் – டெல்அவிவ் விமானத்தை கடத்த முயன்ற ஓமன் துணை விமானி அந்த விமானத்தை டெல்அவிவ் நகரில் உள்ள உயரமான கட்டடமான அஸ்ரியேலி மையத்தின் மீது மோதி பெரும் விபத்தை ஏற்படுத்த திட்டமிட்டதாக திடுக்கிட வைக்கும் தகவல்கள் வெளியாகி உள்ளன. இது நடந்து இருந்தால் அமெரிக்காவின் இரட்டை கோபுர தாக்குதல் போன்று வரலாற்றில் இடம்பிடித்து இருக்கும். அதுமட்டுமின்றி ஆயிரத்துக்கும் அதிகமானோர் பலியாகி இருக்கலாம். இந்த அஸ்ரியேலி மையம் என்பது என்ன? டார்க்கெட்டாக அது தேர்வு செய்யப்பட்டது எப்படி? என்பது பற்றிய பகீர் தகவல் வெளியாகி உள்ளது.

flydubai-flight-oman-co-pilot-planned-t-crash-the-plane-into-tel-avivs-azrieli-towers

இந்த அஸ்ரியேலி மையம் (Azrieli Center) என்பது இஸ்ரேல் நாட்டின் டெல்அவிவ் நகரில் முக்கிய அடையாளமாக அமைந்துள்ளது. இங்கு மொத்தம் வானளவுக்கு 3 உயர்ந்த டவர்களாக கட்டடங்கள் கட்டப்பட்டுள்ளன. ஒன்று சதுரமாகவும், இன்னொன்று வட்டமாகவும், மற்றொன்று முக்கோண வடிவத்தில் கட்டப்பட்டுள்ளது. இதில் வட்டமாக கட்டப்பட்டுள்ள டவர் 187 மீட்டர் உயரம் கொண்டது. மொத்தம் 49 தளங்கள் உள்ளன. உச்சியில் ஒரு ஹெலிபேடு உள்ளது.

169 அடி உயரம் கொண்ட முக்கோண டவரில் 45 தளங்கள் உள்ளன. 154 மீட்டர் உயரம் கொண்ட சதுர டவரில் 41 தளங்கள் உள்ளன. இந்த 3 கட்டங்களிலும் வணிக வளாகங்கள், கடைகள், ஹோட்டல்கள், அலுவகலகங்கள் செயல்பட்டு வருகின்றன.

இந்த கட்டடம் டெல்அவிவ் நகரில் பெகின் சாலை மற்ம் அயலோன் சாலைக்கு இடையே அமைந்துள்ளது. பக்கத்திலேயே ஹாஷலோம் ரயில் நிலையம் உள்ளது. இதனால் உள்ளூர் மக்கள் மட்டுமின்றி வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும் அதிகளவில் இங்கு கூடுவார்கள். ஒருநாளைக்கு சராசரியாக 60 ஆயிரம் பேர் வரை இங்கு வந்து செல்வார்கள் என்று டேட்டாக்கள் சொல்கின்றன.

இதனால் இங்கு விமானம் மோதியிருந்தால் பலி எண்ணிக்கை அதிகரித்து இருக்கும். குறிப்பாக ஆயிரத்தை தாண்டி இருக்கும். விமானம் மோதும்போது இந்த 3 டவர்கள் மட்டுமின்றி அதனருகே இருக்கும் கட்டடங்களும் சிதைந்து தீப்பிடிக்கலாம் என்பதால் நிச்சயம் பலி எண்ணிக்கை ஆயிரத்தை கடந்து இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

ஏனென்றால் 2001ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 11ம் தேதி அமெரிக்காவில் அல்குவைதா பயங்கரவாதிகள் நியூயார்க் உலக வர்த்தக மையத்தின் இரட்டை கோபுரத்தின் மீது விமானத்தை மோதி தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் மொத்தம் 2,977 பேர் வரை பலியாகினர். இந்த பயங்கரவாத தாக்குதல் சம்பவம் வரலாற்றில் இன்று வரை ஆறாத வடுவாக உள்ளது.

இந்த தாக்குதல் சுருக்கமாக 9/11 என்று அழைக்கப்படுகிறது. அதேபோன்று தான் ஓமன் துணை விமானி ஹமாம் அல் ஹமாமி தாக்குதல் நடத்த திட்டமிட்டதாக கூறப்படும் நிலையில் இன்னொரு 9/11 ‘அட்டாக்’ முறியடிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

English summary

Shocking details have emerged revealing that an Omani co-pilot, who attempted to hijack a Dubai-Tel Aviv flight, had planned to crash the aircraft into the Azrieli Center-a prominent high-rise complex in Tel Aviv-thereby causing a massive disaster. Had this occurred, it would have gone down in history alongside the 9/11 attacks on the Twin Towers; furthermore, the death toll could have exceeded a thousand people. Startling information has now been revealed regarding what the Azrieli Center is and how it came to be selected as the target.

Read More

Previous Post

ஈரானிய எண்ணெய் கப்பல்களால் தர்மசங்கடத்தில் இலங்கை : சுட்டிக்காட்டும் தயான் ஜயதிலக்க

Next Post

நிலவு எந்த நாட்டிற்கு சொந்தம்? விண்வெளி வரலாற்றில் உருவாகும் புதிய அதிகாரப் போர்! | World News (உலக செய்திகள்)

Next Post
நிலவு எந்த நாட்டிற்கு சொந்தம்? விண்வெளி வரலாற்றில் உருவாகும் புதிய அதிகாரப் போர்! | World News (உலக செய்திகள்)

நிலவு எந்த நாட்டிற்கு சொந்தம்? விண்வெளி வரலாற்றில் உருவாகும் புதிய அதிகாரப் போர்! | World News (உலக செய்திகள்)

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin