• Login
Sunday, October 4, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home உலகம்

போர்கால எரிபொருள் நெருக்கடி: 100 மில்லியன் பேரல் அவசரகால டீசலை சந்தையில் இறக்கும் G7 நாடுகள்! | World News (உலக செய்திகள்)

GenevaTimes by GenevaTimes
October 4, 2026
in உலகம்
Reading Time: 1 min read
0
போர்கால எரிபொருள் நெருக்கடி: 100 மில்லியன் பேரல் அவசரகால டீசலை சந்தையில் இறக்கும் G7 நாடுகள்! | World News (உலக செய்திகள்)
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:Oct 04, 2026 4:08 PM IST

ஜி7 நாடுகளுக்கு இடையே எரிசக்தி ஏற்றுமதி கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டாம் என்றும் பிற நாடுகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

News18
News18

ஹார்முஸ் நீரிணை பகுதியில் ஏற்பட்டுள்ள எரிபொருள் நெருக்கடியால் விலை உயர்வைக் கட்டுப்படுத்தும் விதமாக, G7 கூட்டமைப்பு நாடுகள் மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் இணைந்து தங்களின் அவசரகால இருப்பிலிருந்து 100 மில்லியன் பேரல் டீசலை சந்தையில் விடுவிக்க ஒப்புக்கொண்டுள்ளன.

ஜி7 கூட்டமைப்பில் உள்ள அமெரிக்கா, பிரான்ஸ், கனடா, ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான் மற்றும் பிரிட்டன் ஆகிய நாடுகள், ஐரோப்பிய ஒன்றியத்துடன் இணைந்து இந்த முடிவை எடுத்துள்ளன. சர்வதேச ஆற்றல் முகமையின் (IEA) ஒருங்கிணைப்பில் இந்த டீசல் விடுவிப்பு உடனடியாகத் தொடங்கி, அடுத்த 4 மாதங்களுக்குத் தொடரும்.

இதில் முதல் 20 நாட்களுக்குள்ளேயே குறிப்பிடத்தக்க அளவு டீசல் சந்தைக்குக் கொண்டுவரப்படும் என்று கூட்டு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தேவைப்பட்டால் கூடுதல் டீசலை விடுவிப்பது குறித்து வரும் நாட்களில் மீண்டும் ஆலோசிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் வரவிருக்கும் நவம்பர் இடைக்காலத் தேர்தலுக்கு முன்னதாக, விண்ணை முட்டும் எரிபொருள் விலையைக் குறைக்க வேண்டும் என்ற அரசியல் அழுத்தம் டொனால்ட் டிரம்ப் நிர்வாகத்திற்கு அதிகரித்துள்ளது. டீசல் ஏற்றுமதிக்கு அமெரிக்கா தடை விதிப்பதைத் தவிர்க்க வேண்டுமென்றால், ஐரோப்பிய நாடுகள் தங்கள் கைவசம் உள்ள டீசல் இருப்பை உடனடியாக சந்தையில் விடுவிக்க வேண்டும் என்று டிரம்ப் நிர்வாகம் தொடர் அழுத்தம் கொடுத்து வந்தது.

இதன் விளைவாகவே ஜி7 நாடுகள் இந்த முடிவிற்கு உடன்பட்டுள்ளன என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், ஜி7 நாடுகளுக்கு இடையே எரிசக்தி ஏற்றுமதி கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டாம் என்றும் பிற நாடுகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

ஹார்முஸ் நீரிணைப் பகுதியில் ஏற்பட்டுள்ள தடைகள், ஈரான் போர் சூழல் மற்றும் உக்ரைன் நாட்டின் தாக்குதலால் ரஷ்யாவின் சுத்திகரிப்பு நிலையங்கள் பாதிக்கப்பட்டது ஆகியவை உலகளவில் கடுமையான டீசல் தட்டுப்பாட்டை உருவாக்கியுள்ளன.

அமெரிக்காவில் செப்டம்பர் மாதத்தில் டீசல் விலை இதுவரை இல்லாத அளவை எட்டிய நிலையில், வெள்ளிக்கிழமையன்றும் ஒரு கேலன் டீசல் சராசரியாக 6.37 டாலராக நீடித்தது.

முன்னதாக கடந்த மார்ச் மாதத்தில், ஈரான் போரினால் ஏற்பட்ட விநியோகப் பாதிப்பைச் சமாளிக்க 400 மில்லியன் பேரல் கச்சா எண்ணெய் மற்றும் சுத்திகரிக்கப்பட்ட எரிபொருட்களைச் சந்தையில் விடுவிக்க சர்வதேச ஆற்றல் முகமை உறுதியளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Read More

Previous Post

ஜன்னல் வழியாக வீட்டுக்குள் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடு! படுகாயமடைந்த நபர் வைத்தியசாலையில் அனுமதி – Sri Lanka Tamil News

Next Post

இரண்டாவது பாலியல் துன்புறுத்தல் புகாரைத் தொடர்ந்து தன்முனைப்பு பேச்சாளர் மீண்டும் கைது

Next Post
இரண்டாவது பாலியல் துன்புறுத்தல் புகாரைத் தொடர்ந்து  தன்முனைப்பு பேச்சாளர் மீண்டும் கைது

இரண்டாவது பாலியல் துன்புறுத்தல் புகாரைத் தொடர்ந்து தன்முனைப்பு பேச்சாளர் மீண்டும் கைது

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin