• Login
Sunday, October 4, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

2027 உலகக்கோப்பை திட்டம் இதுதான்.. சீனியர் வீரர்களின் ஓய்வு குறித்த கேள்விகளுக்கு கில் வைத்த முற்றுப்புள்ளி! | கிரிக்கெட் செய்திகள்

GenevaTimes by GenevaTimes
October 4, 2026
in விளையாட்டு
Reading Time: 1 min read
0
2027 உலகக்கோப்பை திட்டம் இதுதான்.. சீனியர் வீரர்களின் ஓய்வு குறித்த கேள்விகளுக்கு கில் வைத்த முற்றுப்புள்ளி! | கிரிக்கெட் செய்திகள்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:Oct 04, 2026 4:01 PM IST

இந்திய அணி அடுத்ததாக சுமார் ஒரு மாத இடைவெளிக்குப் பிறகு நியூசிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் பங்கேற்க உள்ளது.

News18
News18

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான ஒருநாள் தொடருக்குப் பிறகு, இந்திய அணியின் மூத்த வீரர்களான விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மாவின் எதிர்காலம் குறித்து எழும்பிய கேள்விகளுக்கு இந்திய ஒருநாள் அணியின் கேப்டன் சுப்மன் கில் கடுமையான பதிலடியைக் கொடுத்துள்ளார்.

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான 3-வது ஒருநாள் போட்டி நேற்று சண்டிகரில் நிறைவடைந்த பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த இந்திய கேப்டன் சுப்மன் கில்லிடம், 37 வயதாகும் விராட் கோலி மற்றும் 39 வயதாகும் ரோஹித் சர்மாவின் தற்போதைய ஆட்டத் திறன் மற்றும் எதிர்காலம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்குப் பதிலளித்த கில், இரு மூத்த வீரர்களின் சிறப்பான ஆட்டத்தையும் அவர்களின் பங்களிப்பையும் வெகுவாகப் பாராட்டி, விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.

இதுகுறித்து அவர் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது-

இந்தத் தொடரில் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி இருவரும் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளனர். முதல் ஒருநாள் போட்டியில் விராட் கோலி ஆட்டமிழக்காமல் சதம் விளாசினார். இரண்டாவது ஒருநாள் போட்டியில் ரோஹித் சர்மா சதம் அடித்தார். மேலும் மூன்றாவது போட்டியில் 92 ரன்கள் எடுத்து சதம் அடிக்கும் வாய்ப்பை நூலிழையில் இழந்தார்.

கடந்த 4 இன்னிங்ஸ்களில் ரோஹித் 3 சதங்களை நெருங்கியுள்ளார்.  விராட் கோலி சிறப்பாக பேட்டிங் செய்து வருகிறார். வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் கே.எல். ராகுலும் அணிக்குத் தேவையானப் பங்களிப்பை வழங்கி வருகிறார் என்று பதில் அளித்தார்.

கோலி மற்றும் ரோஹித் ஆகியோருக்கு ஓய்வு அளித்து புதிய இளம் வீரர்களுக்கு வாய்ப்பளிக்கலாமே என்று கிளம்பிய பேச்சுகளையும் கில் திட்டவட்டமாக நிராகரித்தார். “தற்போது ஒருநாள் போட்டிகளின் எண்ணிக்கை மிகவும் குறைவாகவே உள்ளது. எனவே பரிசோதனைகள் செய்வதற்கு போதிய நேரமில்லை. 2027 ஒருநாள் உலகக்கோப்பையில் எந்தக் கூட்டணியுடன் விளையாட திட்டமிட்டுள்ளோமோ, அதே கூட்டணியை வைத்து இப்போதிருந்தே தொடர்ந்து விளையாடுவதே சரியாக இருக்கும்” என்று கேப்டன் கில் தெளிவுபடுத்தினார்.

இந்திய அணி அடுத்ததாக சுமார் ஒரு மாத இடைவெளிக்குப் பிறகு நியூசிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் பங்கேற்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

Read More

Previous Post

10 ஆண்டுகால முயற்சிக்குப் பலன்.. இயற்கை வாழ்விடத்துக்குத் திரும்பிய 2 கானமயில்கள்! | India News (இந்தியா செய்திகள்)

Next Post

ஜன்னல் வழியாக வீட்டுக்குள் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடு! படுகாயமடைந்த நபர் வைத்தியசாலையில் அனுமதி – Sri Lanka Tamil News

Next Post
ஜன்னல் வழியாக வீட்டுக்குள் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடு! படுகாயமடைந்த நபர் வைத்தியசாலையில் அனுமதி – Sri Lanka Tamil News

ஜன்னல் வழியாக வீட்டுக்குள் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடு! படுகாயமடைந்த நபர் வைத்தியசாலையில் அனுமதி - Sri Lanka Tamil News

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin