Last Updated:
அரசு நடத்தும் யோகா வகுப்புகள் தான் முதியோர் மத்தியில் படு ஹிட் அடித்துள்ளது.
சீனாவில் அரசே உருவாக்கியுள்ள முதியோருக்கான குறைந்த விலை உணவு விடுதி அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
சீனாவில் சிறந்த சுகாதார கட்டமைப்பு காரணமாக அந்நாட்டு மக்களின் ஆயுட்காலம் உயர்ந்து வருகிறது. அதே நேரத்தில் முதியோரின் எண்ணிக்கையும் கணிசமாக அதிகரித்து வருகிறது. பணி நிமித்தமாக குழந்தைகள் வேறு நகரங்களுக்குச் செல்வது மற்றும் குடும்பப் பிரச்சனை காரணமாக முதியோர் தனியாக வசிப்பது சீனாவில் அதிகரித்துள்ளது என்று கூறப்படுகிறது.
குறிப்பாக, தலைநகர் பெய்ஜிங்கில் முதியோரின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. இதனை கருத்தில் கொண்டு சீன அரசு ஒரு ஹாட்லைன் எண்ணை அறிவித்து, அதில் தொடர்பு கொள்ளும் முதியோர்களுக்கு தேவையான உதவிகளை உடனுக்குடன் செய்து வருகிறது. நம்மூர் அம்மா உணவகங்கள் போல் மிக மிகக் குறைந்த விலையில் உணவுகளை விற்பனை செய்து வருகிறது.


