அஹுங்கல்ல காவல்துறை பிரிவிற்குட்பட்ட கல்வெஹெர பகுதியில் வீடொன்றில் இருந்த நபர் ஒருவரை இலக்கு வைத்து துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த நபர் தற்போது சிகிச்சைக்காக பலப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
இவ்வாறு துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்தவர் அஹுங்கல்ல, கல்வெஹெர பகுதியைச் சேர்ந்த 74 வயதுடைய நபர் என தெரிவிக்கப்படுகின்றது.
காவல்துறையினர் விசாரணை
இத்துப்பாக்கிச் சூட்டிற்கு கைத்துப்பாக்கி (பிஸ்டல்) பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என காவல்துறையினர் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

மேலும், வீட்டின் ஜன்னல் வழியாக துப்பாக்கியை நீட்டி இத்துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாக தற்போதைய விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
சந்தேகநபர்களைக் கைது செய்வதற்காக அஹுங்கல்ல காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…! |

