International
oi-Mani Singh S
டெல் அவிவ்: இந்தியா மட்டுமின்றி மொத்த உலகத்திற்கும் நீங்கள்தான் உண்மையான ஹீரோ. இஸ்ரேல் சுதந்திர தின நாளில் ஒளியேற்றி வைக்க வருமாறு நான் உங்களுக்கு அழைப்பு விடுக்கிறேன் என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு இந்திய விமானி ஸ்மித் மிச்சாருக்கு அழைப்பு விடுத்துள்ளார். இந்த உரையாடலின் போது விமானத்தில் என்ன நடந்தது என்பது பற்றியும் நெதன்யாகு, ஸ்மித் மச்சாரிடம் கேட்டறிந்தார்.
துபாயில் இருந்து 174 பயணிகளுடன் இஸ்ரேலின் டெல் அவிவ் நகருக்கு பிளை துபாய் நிறுவனத்திற்கு சொந்தமான விமானம் கடந்த 30 ஆம் தேதி புறப்பட்டது. விமானம் நாடு வானில் சென்று கொண்டிருந்த போது, துணை விமானியான ஹமாம் அல் ஹம்மாமி, இந்திய கேப்டன் ஸ்மித் மச்சாரை கோடாரி போன்ற சிறிய ஆயுதத்தால் தாக்கி, விமானத்தை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முயன்றார்.

இந்திய கேப்டனுக்கு பாராட்டு
விமானத்தை விபத்தில் சிக்க வைத்து தகர்க்க திட்டமிட்ட துணை விமானியின் முயற்சியை, இந்திய கேப்டன் ஸ்மித் மச்சார் முறியடித்தார். தாக்குதலில் படுகாயம் அடைந்த போதிலும் காக்பிட் அறையை திறந்து விட்டார். இதனால் விமானத்தில் இருந்த பிற பயணிகள் உடனடியாக வந்து துணை விமானி ஹமாம் அல் ஹம்மாமியை மடக்கி பிடித்து, விமானத்தை அவசரமாக சவுதி அரேபியாவில் தரையிறக்க வைத்தனர். இதனால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.
துணை விமானியின் தாக்குதலில் காயம் அடைந்த ஸ்மித் மச்சார் அபுதாபியில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். குஜராத்தை சேர்ந்த ஸ்மித் மச்சாருக்கு உலகம் முழுவதும் இருந்தும் பாராட்டுகள் குவிந்து வருகின்றன. அமெரிக்க அதிபர் டிரம்ப், இந்திய பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பாராட்டு தெரிவித்து இருந்தனர். பிரதமர் மோடி தொலைபேசியில் தொடர்பு கொண்டும் பேசியிருந்தார்.
நீங்க தான் ரியல் ஹீரோ
இந்த நிலையில், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, இந்திய விமானி ஸ்மித் மச்சாரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். அப்போது , இஸ்ரேல், இந்தியா மட்டுமின்றி மொத்த உலகத்திற்கும் நீங்கள்தான் உண்மையான ஹீரோ. இஸ்ரேல் சுதந்திர தின நாளில் ஒளியேற்றி வைக்க வருமாறு நான் உங்களுக்கு அழைப்பு விடுக்கிறேன். சுதந்திர தின நாளில் இஸ்ரேல் கொடுக்கும் மிகப்பெரிய கவுரம் இதுவாகும்.
இஸ்ரேல் குடிமக்களுக்குதான் வழக்கமாக இந்த கவுரவம் வழங்கப்படும். ஆனால் இந்த விஷயத்தில் இஸ்ரேல் நாட்டின் அனைத்து குடிமக்களும் உங்களை அன்புடன் அரவணைத்துக் கொள்வார்கள் என்று நினைக்கிறேன்” என்று கூறியுள்ளார். இந்த உரையாடலின் போது விமானத்தில் என்ன நடந்தது என்பது பற்றியும் நெதன்யாகு, ஸ்மித் மச்சாரிடம் கேட்டறிந்தார்.
விரைவில் குணமடையுங்கள்
உங்கள் துணிச்சல் மற்றும் கடினமான கால கட்டத்தில் நீங்கள் மிகவும் கூலாக நிலமையை புரிந்து கொண்டு செயல்பட்ட விதம் உண்மையாகவே என்னை வியக்க வைக்கிறது என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, நீங்கள் பல உயிர்களை காப்பாற்றியிருக்கிறீர்கள். என் சார்பாகவும், என் மனைவியின் சார்பாகவும் உங்கள் மனைவிக்கு எனது நல்வாழ்த்துகளைத் தெரிவியுங்கள். உங்களுக்கு ஒரு குடும்பம் இருப்பதையும், நீங்கள் நாடுகளின் குடும்பத்தில் ஒரு அங்கமாக இருப்பதையும் நான் அறிவேன். தயவு செய்து விரைவில் குணமடையுங்கள்” என்றார்.



