• Login
Sunday, October 4, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

இப்படியும் ஒரு தாய்? 7 வயது மகளை டாக்டரிடம் அழைத்து சென்று.. 5 வருடம் கழித்து வெளிவந்த பகீர் உண்மை | What Kind of Mother Does This? Texas Mom Takes 7 Year Old Daughter to Doctor.. 5 Years Later, Truth Emerges

GenevaTimes by GenevaTimes
October 3, 2026
in இந்தியா
Reading Time: 2 mins read
0
இப்படியும் ஒரு தாய்? 7 வயது மகளை டாக்டரிடம் அழைத்து சென்று.. 5 வருடம் கழித்து வெளிவந்த பகீர் உண்மை | What Kind of Mother Does This? Texas Mom Takes 7 Year Old Daughter to Doctor.. 5 Years Later, Truth Emerges
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


International

oi-Hema Vandhana

Time
Updated: Friday, October 2, 2026, 17:29 [IST]

வாஷிங்டன்: தன்னுடைய 7 வயது குழந்தைக்கு உடம்பு சரியில்லாமல் போனதால், டாக்டரிடம் அழைத்து சென்றிருக்கிறார் பெற்ற தாய்.. டாக்டரும் குழந்தையை பரிசோதித்துள்ளார்.. ஆனால், அடுத்தடுத்த நாட்களில் குழந்தைக்கு வித்தியாசமாக சில விஷயங்கள் தெரிய ஆரம்பித்துள்ளன.. இது தொடர்பான விசாரணைதான் இப்பாது டெக்சாஸில் நடந்து கொண்டிருக்கிறது.

2019-ம் ஆண்டு நடந்த சம்பவம் இது… டெக்சாஸைச் சேர்ந்த பெண்ணின் பெயர் அலிசியா எவோன் சான்செஸ். இவருடைய 7 வயது பெண் குழந்தைக்கு உடல்நலப் பிரச்சனை ஏற்பட்டதால், டைலர் நகரில் இருந்த கென்னத் ஹேகூட் என்ற டாக்டரிடம் சான்செஸ் அழைத்து சென்றுள்ளார்.

Doctor Abuse

டெக்சாஸ் தாய்

குழந்தையை டாக்டரும் பரிசோதித்திருக்கிறார். பிறகு சிகிச்சைக்காக தொடர்ந்து தன்னிடம் வரச் சொல்லியிருக்கிறார். அதன்படியே சான்செஸ், தன்னுடைய குழந்தையை தொடர்ந்து அந்த டாக்டரிடம் அழைத்துச் சென்றிருக்கிறார். அம்மாவே தன்னை டாக்டரிடம் அழைத்துச் செல்வதால், அந்த குழந்தைக்கும் ஆரம்பத்தில் எதுவுமே சந்தேகமாக தெரியவில்லை. மெடிக்கல் டெஸ்ட் எடுப்பதற்காகத்தான் அம்மா அழைத்து வருகிறார் என்று நினைத்திருக்கிறது.

ஆனால், நாளுக்கு நாள் டாக்டரின் செயல்பாடுகள் குழந்தைக்கு வித்தியாசமாக தெரிய ஆரம்பித்திருக்கிறது. ஒரு கட்டத்தில், டாக்டர் தன்னிடம் பாலியல் ரீதியாக தவறாக நடந்து கொள்கிறார் என்பதை குழந்தை புரிந்துகொண்டிருக்கிறது.

5 ஆண்டுகள் கொடுமை

2019-ம் ஆண்டு தொடங்கி 2023-ம் ஆண்டு வரை, சுமார் 5 வருடங்களாகவே குழந்தையை அந்த டாக்டரிடம் அழைத்துச் சென்றிருக்கிறார் அலிசியா. குறைந்தது 10 முறையாவது குழந்தையை அழைத்துச் சென்றதாக கூறப்படுகிறது. அதற்குள் அந்த பெண் குழந்தைக்கும் 13 வயதாகியிருக்கிறது.

எத்தனையோ சமயம், டாக்டரிடம் போக மாட்டேன் என்று குழந்தை அழுதிருக்கிறது. டாக்டர் தன்னிடம் இப்படியெல்லாம் நடந்து கொள்கிறார் என்று அம்மாவிடம் சொல்லி கதறியிருக்கிறது… ஆனாலும் குழந்தை பயந்து அழும்போதெல்லாம், “டாக்டர்கள் இப்படித்தான் டெஸ்ட் எடுப்பார்கள்” என்று அலிசியா சொல்லியிருக்கிறார்.

இப்படியும் ஒரு தாய்?

ஆனாலும் அந்த குழந்தைக்கு அம்மாவின் பதிலில் திருப்தி இல்லை. அதனால் வேறு ஒரு பெண் டாக்டரிடம் சென்றபோது, தனக்கு நடந்த விஷயங்களை எல்லாம் சொல்லி அழுதிருக்கிறது. இதைக்கேட்டு அதிர்ந்த அந்த பெண் டாக்டர், குழந்தையை கவுன்சிலிங்குக்கு அனுப்பி வைத்திருக்கிறார். அந்த ஆலோசகரிடம் குழந்தை தனக்கு நடந்த அனைத்து விஷயங்களையும் சொல்லியிருக்கிறது. அதன்பிறகுதான் பல ஆண்டுகளாக நடந்ததாக கூறப்படும் இந்த சம்பவம் இப்போது வெளியில் வந்திருக்கிறது.

இந்த தகவல் அதிகாரிகளுக்கு சென்ற பிறகு, சான்செஸ் மீது வழக்கு பதிவு செய்து, அவரை கைது செய்துள்ளனர். 14 வயதுக்குட்பட்ட குழந்தையை தொடர்ந்து பாலியல் வன்கொடுமை செய்ததாக அவர் மீது குற்றச்சாட்டு உள்ளது.

மகளின் காதலருடன் உடலுறவு.. கர்ப்பிணி மகளின் சிசுவை வெளியே எடுத்து கொன்ற தாய்! கொடூரம்

மகளின் காதலருடன் உடலுறவு.. கர்ப்பிணி மகளின் சிசுவை வெளியே எடுத்து கொன்ற தாய்! கொடூரம்

டாக்டர் தந்த ட்விஸ்ட்

இதில் ட்விஸ்ட் என்னவென்றால், இந்த வழக்கில் தொடர்புடைய டாக்டர் ஹேகூட் இப்போது ஜெயிலில் இருக்கிறாராம்.. காரணம், ஏற்கனவே ஒரு பாலியல் புகாரில் டாக்டர் சிக்கியிருக்கிறார். 2 பெண் நோயாளிகளை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக அவர் குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளார். அதில் ஒரு பச்சிளம் குழந்தையும் அடக்கம். இதற்காக டாக்டருக்கு 8 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டு, இப்போது சிறையில் இருக்கிறார். வாழ்நாள் முழுவதும் பாலியல் குற்றவாளியாக பதிவு செய்யவும் அவருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

இப்படிப்பட்ட சூழலில், சான்செஸ் மீதான குற்றச்சாட்டு நீதிமன்றத்தில் நிரூபிக்கப்பட்டால், அவருக்கு 99 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை அல்லது ஆயுள் தண்டனை கிடைக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

English summary

What Kind of Mother Does This? Texas Mom Takes 7 Year Old Daughter to Doctor.. 5 Years Later, Truth Emerges

Read More

Previous Post

மின்னல் தாக்கி கிறிஸ்தவ மதகுரு பலி

Next Post

ஆவணங்கள் இல்லாத குடியேறிகளை வேலைக்கு அமர்த்தும் முதலாளிகளுக்கு சைஃபுதீன் எச்சரிக்கை. – Malaysiakini

Next Post

ஆவணங்கள் இல்லாத குடியேறிகளை வேலைக்கு அமர்த்தும் முதலாளிகளுக்கு சைஃபுதீன் எச்சரிக்கை. – Malaysiakini

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin