• Login
Saturday, October 3, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

ஆசிய விளையாட்டு 2026: மலேசியாவை வீழ்த்தி இந்திய ஆடவர் ஹாக்கி அணி தங்கம் வென்று சாதனை! | Other Games News (பிற விளையாட்டு செய்திகள்)

GenevaTimes by GenevaTimes
October 3, 2026
in விளையாட்டு
Reading Time: 1 min read
0
ஆசிய விளையாட்டு 2026: மலேசியாவை வீழ்த்தி இந்திய ஆடவர் ஹாக்கி அணி தங்கம் வென்று சாதனை! | Other Games News (பிற விளையாட்டு செய்திகள்)
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:Oct 03, 2026 7:11 PM IST

தங்கப் பதக்கம் வென்றதன் மூலம் ஆசிய சாம்பியனாக உருவெடுத்துள்ள இந்திய ஹாக்கி அணி, 2028 ஒலிம்பிக் போட்டிக்கான தகுதியையும் நேரடியாகப் பெற்று சாதனை படைத்துள்ளது.

இந்திய அணி
இந்திய அணி

2026 ஆசிய விளையாட்டுப் போட்டியில், மலேசியாவை 5-1 என்ற கோல் கணக்கில் அபாரமாக வீழ்த்தி இந்திய ஆடவர் ஹாக்கி அணி தங்கம் வென்று வரலாற்றுச் சாதனை படைத்துள்ளது. இதன் மூலம் 2028 லாஸ் ஏஞ்சலஸ் ஒலிம்பிக் போட்டிகளுக்கு இந்திய அணி நேரடியாகத் தகுதி பெற்றுள்ளது.

மலேசியாவிற்கு எதிரான இறுதிப்போட்டியில் இந்திய அணி தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்தியது. போட்டியின் 11-வது நிமிடத்தில் இந்திய அணியின் கேப்டன் ஹர்மன்பிரீத் சிங் பெனால்டி கார்னர் வாய்ப்பைப் பயன்படுத்தி முதல் கோல் அடித்தார். இருப்பினும், அடுத்த இரண்டு நிமிடங்களிலேயே (13-வது நிமிடம்) மலேசியாவின் ஷாலோம் சில்வேரியஸ் ஒரு கோல் அடித்து போட்டியை 1-1 என சமன் செய்தார்.

இரண்டாவது கால்பகுதியில், ஜூக்ராஜ் சிங் பெனால்டி கார்னர் மூலம் கோல் அடித்து இந்தியாவை 2-1 என முன்னிலை பெறச் செய்தார். தொடர்ந்து மூன்றாவது கால்பகுதியில், ஹர்திக் சிங் மற்றொரு பெனால்டி கார்னர் கோல் அடித்து இந்தியாவின் முன்னிலையை பலப்படுத்தினார். கடைசி மற்றும் நான்காவது கால்பகுதியில் இந்திய வீரர்கள் அபாரமாக விளையாடி மலேசியாவிற்கு எந்த வாய்ப்பையும் வழங்கவில்லை. ஷீலாநந்த் லக்ரா, அபிஷேக் மற்றும் மீண்டும் ஒரு பெனால்டி கார்னர் மூலம் ஹர்மன்பிரீத் சிங் ஆகியோர் கோல் அடிக்க, இந்தியா 5-1 என்ற கணக்கில் தங்கப் பதக்கத்தைக் கைப்பற்றியது.

இந்தப் போட்டியில் இந்திய அணி 54% பந்தை தனது கட்டுப்பாட்டில் வைத்து முழு ஆதிக்கத்தை வெளிப்படுத்தியது. மலேசியா அணிக்கு 3 பெனால்டி கார்னர் வாய்ப்புகள் மட்டுமே கிடைத்த நிலையில், இந்திய அணி 14 பெனால்டி கார்னர் வாய்ப்புகளைப் பெற்று தங்களின் தாக்குதல் ஆட்டத்தை நிரூபித்தது.

இந்தத் தொடர் முழுவதும் தோல்வியே சந்திக்காமல் இந்திய அணி கம்பீரமாகப் பயணத்தை நிறைவு செய்துள்ளது. லீக் சுற்றுகளில் இந்தோனேசியாவை 13–1, இலங்கையை 16–1, தென்கொரியாவை 8–2, ஜப்பானை 2–0 மற்றும் வங்காளதேசத்தை 10–0 என்ற கணக்கில் வீழ்த்தியது.

பாகிஸ்தானுக்கு எதிரான விறுவிறுப்பான அரைஇறுதிப் போட்டியில் 4–3 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.இந்த நிலையில் இறுதிப் போட்டியில் மலேசியாவை 5–1 என வீழ்த்தி தங்கப் பதக்கத்தைத் தக்கவைத்துக் கொண்டது.

தங்கப் பதக்கம் வென்றதன் மூலம் ஆசிய சாம்பியனாக உருவெடுத்துள்ள இந்திய ஹாக்கி அணி, 2028 ஒலிம்பிக் போட்டிக்கான தகுதியையும் நேரடியாகப் பெற்று சாதனை படைத்துள்ளது.

Read More

Previous Post

போதைப்பொருள் கடத்தல் மன்னன் நவ்ப்ரீத் சிங் கைது.. இந்திய முகமைகளுக்கு அமித் ஷா பாராட்டு! | India News (இந்தியா செய்திகள்)

Next Post

ஊழியர்களை 4 வகைகளாகப் பிரிக்கும் AI.. அப்போ நீங்க எந்த வகை..? | AI Divides Employees into 4 Categories — Which One Are You? – PwC Report Warns

Next Post
ஊழியர்களை 4 வகைகளாகப் பிரிக்கும் AI.. அப்போ நீங்க எந்த வகை..? | AI Divides Employees into 4 Categories — Which One Are You? – PwC Report Warns

ஊழியர்களை 4 வகைகளாகப் பிரிக்கும் AI.. அப்போ நீங்க எந்த வகை..? | AI Divides Employees into 4 Categories — Which One Are You? - PwC Report Warns

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin