• Login
Saturday, October 3, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

விமான சம்பவம் நடந்து 9 மணி நேரம் கழித்து லிங்க்ட்-இன்-ல் பதிவிட்ட துணை விமானி.. மர்மம்! | Omani co pilot al Hammami posts on LinkedIn nine hours after the flydubai flight incident

GenevaTimes by GenevaTimes
October 3, 2026
in இந்தியா
Reading Time: 2 mins read
0
விமான சம்பவம் நடந்து 9 மணி நேரம் கழித்து லிங்க்ட்-இன்-ல் பதிவிட்ட துணை விமானி.. மர்மம்! | Omani co pilot al Hammami posts on LinkedIn nine hours after the flydubai flight incident
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


International

oi-Mani Singh S

Time
Updated: Saturday, October 3, 2026, 15:05 [IST]

துபாய்: பிளைதுபாய் விமானத்தை கடத்தி, விபத்தில் சிக்க வைக்க முயன்றதாக சந்தேகிக்கப்படும் துணை விமானி குறித்த திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி வருகின்றன. விமானம் சவுதி அரேபியாவில் தரையிறங்கியதும் பாதுகாப்பு படையினரால் பிடித்து செல்லப்பட்ட அந்த துணை விமானி தற்போது ஐக்கிய அரபு அமீரகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

அவரிடம் தீவிர விசாரணை நடைபெற்று வரும் நிலையில், சம்பவம் நடைபெற்ற 9 மணி நேரம் கழித்து அவரது லிங்ட் இன் சமூக வலைத்தள பக்கத்தில் பதிவுகள் வெளியானது பல்வேறு சந்தேகங்களையும் கேள்வியையும் எழுப்பியுள்ளது. அதேபோல, அவரது எக்ஸ் மற்றும் இன்ஸ்டகிராம் பக்கத்தில் இருந்து அல்கொய்தா ஆதரவு அமைப்புடன் தொடர்புடையவர்களின் படங்கள் இடம் பெற்றதும் பின்னர் அது நீக்கப்பட்டதாகவும் சிஎன்என் செய்தி வெளியிட்டுள்ளது.

Omani co pilot al Hammami Two terror related posts on LinkedIn nine hours after the flydubai flight incident

9 மணி நேரத்துக்குப் பிறகு 2 பதிவுகள்

ஓமன் நாட்டை சேர்ந்த துணை விமானி ‘ஹமாம் அல்-ஹம்மாமி’ பெயரில் இருந்த லிங்க்ட் – இன் பக்கத்தில், அவர் ஓமன் ஏர் நிறுவனத்தில் 7 ஆண்டுகள் பணியாற்றியதாகவும், 2025 ஆம் ஆண்டு பிப்ரவரியில் அந்தப் பணியில் இருந்து விலகியதாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது. அதன்பிறகு 2025 ஆம் ஆண்டு ஜூன் மாதம் ராயல் ஏர் மரோக் நிறுவனத்தில் சேர்ந்த அவர், 2026 ஆம் ஆண்டு ஜனவரியில் அங்கிருந்து விலகியதாக குறிப்பிட்டுள்ளார்.

விஜய் வருகை.. கோவையில் நாளை போக்குவரத்து மாற்றம்.. விமான நிலையத்தில் பார்க்கிங் தடை

விஜய் வருகை.. கோவையில் நாளை போக்குவரத்து மாற்றம்.. விமான நிலையத்தில் பார்க்கிங் தடை

ஆனால், ப்ளைதுபாய் நிறுவனத்தில் பணியாற்றிய தகவலை அவர் குறிப்பிடவில்லை. இந்த லிங்க்ட்இன் கணக்கில், விமான சம்பவம் நடைபெற்ற சுமார் 9 மணி நேரத்துக்குப் பிறகு இரண்டு பதிவுகள் அடுத்தடுத்து வெளியிடப்பட்டிருந்தன. அந்தப் பதிவுகளை யார் வெளியிட்டார்கள் அல்லது அவை ஏற்கனவே திட்டமிட்டு (Scheduled) வெளியிடப்பட்டதா என்பது தெளிவாகவில்லை.

தற்கொலைப்படை தாக்குதல்

முதல் பதிவில் போயிங் 737 மேக்ஸ் விமானத்தின் விமானி அறையில் எடுக்கப்பட்ட பல்வேறு வீடியோ காட்சிகள் இடம்பெற்றிருந்தன. சவுதி அரேபியாவுக்கு திருப்பிவிடப்பட்ட பிளைதுபாய் விமானமும் போயிங் 737 மேக்ஸ் 8 ரகத்தைச் சேர்ந்தது ஆகும். விமானி அறையில் உள்ள திரையில் ‘OMA624’ என்ற விமான எண் மற்றும் ‘அக்டோபர் 11, 2023’ என்ற தேதி இருந்ததாக கூறப்படுகிறது. இது, ஓமன் ஏர் நிறுவனத்தில் அவர் பணியாற்றிய காலகட்டத்துடன் ஒத்துப்போவதாக சிஎன்என் தெரிவித்துள்ளது. OMA624 விமான எண் பொதுவாக துபாயில் இருந்து மஸ்கட்டுக்கு இயக்கப்படும் விமானத்துடன் தொடர்புடையது.

இஸ்ரேல் விமானத்தில் ஓமனை சேர்ந்தவர் விமானியாக பணியாற்றியது எப்படி? தோண்ட தோண்ட வரும் ஷாக் பின்னணி

இஸ்ரேல் விமானத்தில் ஓமனை சேர்ந்தவர் விமானியாக பணியாற்றியது எப்படி? தோண்ட தோண்ட வரும் ஷாக் பின்னணி

வீடியோவின் இறுதியில் அல் கொய்தா அமைப்பின் முன்னாள் தலைவர் அய்மான் அல் ஜவாஹிரி மற்றும் 2009 ஆம் ஆண்டு தற்கொலைப்படை தாக்குதலில் 7 அமெரிக்க சிஐஏ அதிகாரிகள் உள்பட 9 பேரை கொன்ற ஹுமாம் கலீல் அபு முலால் அல் பலாவியின் புகைப்படங்கள் இடம் பெற்றிருந்ததாகவும் தகவல்கள் கூறுகின்றன. அல் ஜவாஹிரி, ஒசாமா பின்லேடன் கொல்லப்பட்ட பின்னர் அல் கொய்தா அமைப்புக்கு தலைமை தாங்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

3 ஆயிரம் பதிவுகள் நீக்கம்

மற்றொரு பதிவில், மெக்கா, மதீனா மற்றும் ஜெருசலேம் ஆகியவை ஒளிரும் பாதை ஒன்றால் இணைக்கப்பட்டிருப்பது போன்ற ஏஐ படம் இடம் பெற்றிருந்தது. இந்த இரண்டு வீடியோக்களும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிடப்பட்டிருந்தன. எனினும் பின்னர் அது அழிக்கப்பட்டுள்ளது. அல் ஹம்மாமியின் நீக்கப்பட்ட ‘எக்ஸ்’ கணக்கில் அடிப்படைவாத கருத்துகளையும் பெண்களுக்கு எதிரான கருத்துகளையும் பதிவிட்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 2021 முதல் 2022 ஆம் ஆண்டு வரை அவரது ‘எக்ஸ்’ கணக்கில் பதிவிடப்பட்டிருந்த சுமார் 3,000 பதிவுகள் தற்போது நீக்கப்பட்டுள்ளன.

English summary

Omani co pilot al Hammami: Posts appearing on his LinkedIn profile nine hours after the incident have raised various suspicions and questions. Similarly, CNN has reported that images linked to individuals associated with an Al-Qaeda-affiliated group appeared on his X and Instagram pages before being removed.

Read More

Previous Post

ரோசி சேனாநாயக்கவின் மகன் திடீர் மரணம்

Next Post

வைபவ் சூர்யவன்ஷி புதிய சாதனை.. ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் தங்கப் பதக்கம் வென்ற இளம் இந்தியர்! | Sports News (விளையாட்டு செய்திகள்)

Next Post
வைபவ் சூர்யவன்ஷி புதிய சாதனை.. ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் தங்கப் பதக்கம் வென்ற இளம் இந்தியர்! | Sports News (விளையாட்டு செய்திகள்)

வைபவ் சூர்யவன்ஷி புதிய சாதனை.. ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் தங்கப் பதக்கம் வென்ற இளம் இந்தியர்! | Sports News (விளையாட்டு செய்திகள்)

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin