• Login
Saturday, October 3, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

ரோடு செட் ஆகாது.. தாராபுரத்திற்கு நாளை ஹெலிகாப்டர் மூலம் வருகை தரும் முதலமைச்சர் விஜய்! | CM Vijay to Fly to Coimbatore Tomorrow; Helipad Being Prepared for Dharapuram Visit

GenevaTimes by GenevaTimes
October 3, 2026
in இந்தியா
Reading Time: 1 min read
0
ரோடு செட் ஆகாது.. தாராபுரத்திற்கு நாளை ஹெலிகாப்டர் மூலம் வருகை தரும் முதலமைச்சர் விஜய்! | CM Vijay to Fly to Coimbatore Tomorrow; Helipad Being Prepared for Dharapuram Visit
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Tamilnadu

oi-Vignesh Selvaraj

Time
Updated: Saturday, October 3, 2026, 14:26 [IST]

தாராபுரம்: முதலமைச்சர் விஜய் வருகைக்காக, தாராபுரம் – உடுமலை சாலையில் உள்ள மாருதி நகரில் ஹெலிபேட் தயாராகி வருகிறது. நாளை விமானம் மூலம் கோவை செல்லும் விஜய், அங்கிருந்து ஹெலிகாப்டரில் தாராபுரம் செல்ல உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

dharapuram vijay tvk dharapuram by election

மதுராந்தகம், தாராபுரம் ஆகிய இரு சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் அக். 6 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், அரசியல் கட்சிகள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. மதுராந்தகத்தில் முதல்வர் விஜய் வெள்ளிக்கிழமை வாக்கு சேகரித்த நிலையில், மதுராந்தகத்தில் இன்று திமுக தலைவர் மு.க. ஸ்டாலினும், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியும் வாக்கு சேகரிக்க உள்ளனர்.

அதேபோல், தாராபுரத்தில் மு.க. ஸ்டாலினும் எடப்பாடி பழனிசாமியும் வெள்ளிக்கிழமை பிரச்சாரத்தில் ஈடுபட்ட நிலையில், முதல்வர் விஜய் நாளை (அக்டோபர் 4) தாராபுரம் செல்கிறார். தாராபுரத்தில் ஏற்கெனவே தவெக தலைவரும் முதல்வருமான விஜய் பிரசாரம் மேற்கொண்ட நிலையில், நாளை ரோடு ஷோ செல்கிறார் விஜய்.

நாளை காலை சென்னை நீலாங்கரையில் உள்ள தனது வீட்டில் இருந்து காரில் கிளம்பி, சென்னை விமான நிலையம் சென்றடைந்து அங்கிருந்து தனி விமானம் மூலம் கோவை விமான நிலையம் செல்லும் முதல்வர் விஜய், தாராபுரம் சென்று அங்கு 23 இடங்களில் வாக்கு முதல்வர் விஜய் சேகரிக்கவுள்ளார் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

கோவை விமான நிலையத்தில் இருந்து சிட்ரா, காமராஜபுரம், சிங்காநல்லூர், ஒண்டிபுதுார் வழியாக பைபாஸ் சாலையை அடைந்து தாராபுரம் செல்வார் என எதிர்பார்க்கப்பட்டது. முதல்வர் செல்லவிருக்கும் இந்த வழித்தடம் குறுகலாக இருப்பதாலும், நாளை விடுமுறை நாள் என்பதாலும் அதிகளவில் கூட்டம் கூடுவதற்கு வாய்ப்புகள் இருப்பதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

மேலும், முதல்வர் விஜய் வருகையையொட்டி, பாதுகாப்பு காரணங்களுக்காக கோவையில் ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுள்ள சிவப்பு மண்டலப் பகுதிகளுடன் கொடிசியா பகுதி, பீளமேடு, சிட்ரா, நேரு நகர், ஹோப் காலேஜ், எஸ்.ஐ.ஹெச்.எஸ். காலனி, ஒண்டிப்புதூர், சிங்காநல்லூர், இருகூர், சின்னியம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளும் தற்காலிக சிவப்பு மண்டலங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன.

அதேபோல, கோவை மாவட்ட காவல் எல்லைக்கு உள்பட்ட கரியாம்பாளையம் சந்திப்பு, நீலாம்பூர் புறக்காவல் நிலையம், சிந்தாமணிப்புதூர் சந்திப்பு, சூலூர் பேருந்து நிலையம், காங்கேயம்பாளையம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் ட்ரோன்கள் மற்றும் இதர ஆளில்லா வான்வழி ஊர்திகளை பறக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்தச் சூழலில், பாதுகாப்பு ஏற்பாடுகள் கருதி, கோவையில் இருந்து ஹெலிகாப்டரில் புறப்பட்டு தாராபுரம் செல்ல முதல்வர் விஜய் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தாராபுரத்தில் மாருதி நகர் பகுதியில் ஹெலிபேட் தளம் தயார் செய்யப்பட்டுள்ளதாகவும், அங்கு சென்று இறங்கும் விஜய், அங்கிருந்து பிரச்சார வாகனத்தில் மூலனூர் வரை சுமார் 30 கி.மீ தொலைவுக்கு ரோடு ஷோ செல்ல உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தாராபுரத்தில் முதல்வரின் ரோடு ஷோவுக்காக சுமார் 2,000 போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மேலும், முதல்வரின் வருகையால் புறநகர்ப் பகுதிகள், பிரதான சாலைகள், குடியிருப்புப் பகுதிகளில் உள்ள சாலைகளின் இருபுறமும் தடுப்புகள் அமைக்கும் பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

English summary

A helipad is being prepared at Dharapuram-Udumalpet road for Chief Minister Vijay’s visit. Reports indicate that Vijay will fly to Coimbatore tomorrow and travel from there to Dharapuram by helicopter.

Read More

Previous Post

மலையக மக்களை இழிவுபடுத்திய முகநூல் பதிவு: ஜீவன் எம்.பியின் அதிரடி நடவடிக்கை

Next Post

PM Kisan | பி.எம். கிசான் 24-வது தவணை.. மத்திய அரசு முக்கிய அறிவிப்பு.. விவசாயிகள் உடனே இத பண்ணுங்க! | வணிகம் போட்டோகேலரி

Next Post
PM Kisan | பி.எம். கிசான் 24-வது தவணை.. மத்திய அரசு முக்கிய அறிவிப்பு.. விவசாயிகள் உடனே இத பண்ணுங்க! | வணிகம் போட்டோகேலரி

PM Kisan | பி.எம். கிசான் 24-வது தவணை.. மத்திய அரசு முக்கிய அறிவிப்பு.. விவசாயிகள் உடனே இத பண்ணுங்க! | வணிகம் போட்டோகேலரி

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin