• Login
Saturday, October 3, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

விஜய் மல்லையா சொல்வது பொய்.. எஸ்பிஐ வங்கி கொடுத்த ரிப்போர்ட்.. தொடரும் கிங்பிஷர் பிரச்சனை! | Vijay Mallya’s Kingfisher Airlines Fraud Case: SBI Consortium Submits Report Detailing ₹8,751 Crore Pending Dues

GenevaTimes by GenevaTimes
October 3, 2026
in வணிகம்
Reading Time: 1 min read
0
விஜய் மல்லையா சொல்வது பொய்.. எஸ்பிஐ வங்கி கொடுத்த ரிப்போர்ட்.. தொடரும் கிங்பிஷர் பிரச்சனை! | Vijay Mallya’s Kingfisher Airlines Fraud Case: SBI Consortium Submits Report Detailing ₹8,751 Crore Pending Dues
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


விஜய் மல்லையா சொல்வது பொய்.. எஸ்பிஐ வங்கி கொடுத்த ரிப்போர்ட்.. தொடரும் கிங்பிஷர் பிரச்சனை!

கிங்பிஷர் ஏர்லைன்ஸ் பெயரில் 9000 ரூபாய் கடன் வாங்கிவிட்டு அதைத் திருப்பி செலுத்தாமல் இந்தியாவை விட்டு ஓடிய விஜய் மல்லையா தொடர்ந்து தான் வாங்கிய கடனை திருப்பி செலுத்திவிட்டதாகவும், வங்கிகளும், அமலாக்கத் துறையும் வாங்கிய கடனை காட்டிலும் அதிக அளவுக்கு வசூல் செய்துள்ளதால் தன் மீதான குற்றவியல் வழக்குகளை நீக்க வேண்டும் எனத் தொடர்ந்து கூறி வருகிறார், இதை நீதிமன்றத்திலும் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் கிங்பிஷர் ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்குக் கடன் வழங்கிய எஸ்பிஐ வங்கி தலைமையிலான 17 வங்கிகள் சேர்ந்த குழு மும்பை உயர் நீதிமன்றத்திற்கு முக்கியமான விளக்க அறிக்கையைச் சமர்ப்பித்துள்ளது. இந்த அறிக்கையின் படி விஜய் மல்லையா வங்கிகளுக்கு இன்னும் 8752 கோடி ரூபாய் அளவிலான தொகையைச் செலுத்த வேண்டும் எனத் தெரிவித்துள்ளது.

விஜய் மல்லையா சொல்வது பொய்.. எஸ்பிஐ வங்கி கொடுத்த ரிப்போர்ட்.. தொடரும் கிங்பிஷர் பிரச்சனை!

இது முற்றிலும் விஜய் மல்லையா சொல்வதற்கு முரணாக உள்ள நிலையில், எஸ்பிஐ தலைமையிலான வங்கி குழு உயர் நீதிமன்றத்திற்கு முறையான விளக்கம் கொடுத்துள்ளது. மும்பை உயர் நீதிமன்றத்திற்கு வங்கி தரப்பில் சமர்ப்பிக்கப்பட்ட அதிகாரப்பூர்வ அறிக்கையில் அரசு கடன் வசூல் அதிகாரி தலைமையில் இதுவரையில் 10,270 கோடி ரூபாய் வசூலிக்கப்பட்டு உள்ளது, ஆனால் இது அனைத்தும் வங்கிகள் கொடுத்த உத்தரவாதம் மட்டுமே.

அதாவது ஒரு குறிப்பிட்ட கடனை அந்த நபரோ அல்லது நிறுவனமோ சரியாகச் செலுத்தும் என்பதற்கு வங்கிகள் அளிக்கும் நிதி உத்தரவாதம் மட்டுமே. மேலும் கிங்பிஷர் ஏர்லைன்ஸ் தொடர்பாக வழக்குத் தொடுப்பதற்கு முன்பு வங்கிகள் சுமார் 544.58 கோடி ரூபாய் அளவிலான நிதியை வசூலித்துள்ளது.

அதைக் கணக்கில் கொண்டால் ஜனவரி 2026ல் விஜய் மல்லையா செலுத்த வேண்டிய தொகை 8135.63 கோடி ரூபாயாக இருந்தது, தற்போது வட்டியுடன் சேர்த்து ஆகஸ்ட் 31 நிலவரப்படி 8751.86 கோடி ரூபாயாக உள்ளது. இதில் 2019ல் இருந்து வங்கிக்கு லீகல் கட்டணம், இதர செலவுகள் சேர்க்கப்படவில்லை எனவும் விளக்கம் கொடுக்கப்பட்டு உள்ளது.

ஆனால் விஜய் மல்லையா வங்கி உத்தரவாதத்தை அடிப்படையாக வைத்துத் தான் வாங்கிய கடனை விட அதிக தொகை செலுத்திவிட்டதாகக் கூறுகிறார். இந்த விளக்கத்தைத் தொடர்ந்து இவ்வழக்கின் விசாரணை அக்டோபர் 13ஆம் தேதி விசாரணைக்கு வருகிறது.

பீர் விற்பனையில் முன்னணி நிறுவனமாக இருந்து கிங்பிஷர் பிராண்டின் முன்னாள் உரிமையாளரான விஜய் மல்லையா இந்தியாவில் ஆடம்பர விமானச் சேவை துவங்குவதற்காக கிங்பிஷர் ஏர்லைன்ஸ்-ஐ 2005ல் துவங்கினார். விஜய் மல்லையா திட்டமிட்டபடி இந்த ஏர்லையன்ஸ் மக்கள் மத்தியில் பிரபலம் அடைந்தாலும், வருவாய் ஈட்டவில்லை. இதனால் வர்த்தகத்தையும், சேவையையும் தொடர்ந்து இயக்க அதிகப்படியான கடன் வாங்கி இயக்கினார்.

அப்படி வாங்கப்பட்ட கடனை போலியான ஆவணங்கள், அதிகப்படியான மதிப்பீடு அடிப்படையில் வங்கி அதிகாரிகள் உடன் சேர்ந்து கடன் மோசடி செய்தார் விஜய் மல்லையா.

இது மட்டுமா கிங்பிஷர் ஏர்லைன்ஸ்க்கு வாங்கிய கடனை மற்ற மதுபான நிறுவனங்கள், விளையாட்டு அணிகளில் முதலீடு செய்தது, ஊழியர்கள் சம்பளத்தில் பிடித்த வரியை அரசுக்கு செலுத்தாது, ஊழியர்களுக்குச் சம்பளம் கொடுக்காதது என பல பிரச்சனைகளில் அடுத்தடுத்து சிக்கினார் விஜய் மல்லையா.

இந்த நிலையில் 2016ல் வங்கிகளும், சிபிஐ விஜய் மல்லையா சுற்றிவளைக்க முடிவு செய்த போது லண்டனுக்கு தப்பி ஓடினார். இப்படி விஜய் மல்லையா கிங்பிஷர் ஏர்லைன்ஸ் பெயரில் சுமார் 9000 கோடி ரூபாய் கடன் வாங்கியிருந்தார் இந்த விவகாரம் தான் அக்டோபர் 13ஆம் தேதி மும்பை உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது.

Share This Article

English summary

Vijay Mallya’s Kingfisher Airlines Fraud Case: SBI Consortium Submits Report Detailing ₹8,751 Crore Pending Dues

Vijay Mallya’s Kingfisher Airlines Fraud Case: SBI Consortium Submits Report Detailing ₹8,751 Crore Pending Dues — விஜய் மல்லையா சொல்வது பொய்.. எஸ்பிஐ வங்கி கொடுத்த ரிப்போர்ட்.. தொடரும் கிங்பிஷர் பிரச்சனை!

Story first published: Saturday, October 3, 2026, 11:25 [IST]

Other articles published on Oct 3, 2026

Read More

Previous Post

Ind vs Pak | 15 வயது சூர்யவன்ஷியை சீண்டிய பாகிஸ்தான் பவுலர்… உடல்மொழியால் நக்கல்.. என்ன செய்தார்? 

Next Post

சுங்கை பட்டாணி அருகே ஆற்றில் கார் பாய்ந்து விபத்து: 77 வயது முதியவரைத் தேடும் பணி தீவிரம்! | Makkal Osai

Next Post
சுங்கை பட்டாணி அருகே ஆற்றில் கார் பாய்ந்து விபத்து: 77 வயது முதியவரைத் தேடும் பணி தீவிரம்! | Makkal Osai

சுங்கை பட்டாணி அருகே ஆற்றில் கார் பாய்ந்து விபத்து: 77 வயது முதியவரைத் தேடும் பணி தீவிரம்! | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin