• Login
Saturday, October 3, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

இஸ்ரேல் விமானத்தில் ஓமனை சேர்ந்தவர் விமானியாக பணியாற்றியது எப்படி? தோண்ட தோண்ட வரும் ஷாக் பின்னணி | Omani Pilot Flying Israel-Bound Flydubai Flight Had No Second Nationality Shocking Details Emerge

GenevaTimes by GenevaTimes
October 3, 2026
in இந்தியா
Reading Time: 2 mins read
0
இஸ்ரேல் விமானத்தில் ஓமனை சேர்ந்தவர் விமானியாக பணியாற்றியது எப்படி? தோண்ட தோண்ட வரும் ஷாக் பின்னணி | Omani Pilot Flying Israel-Bound Flydubai Flight Had No Second Nationality Shocking Details Emerge
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


International

oi-Mani Singh S

Time
Updated: Saturday, October 3, 2026, 12:26 [IST]

டெல் அவிவ்: துபாயில் இருந்து இஸ்ரேலுக்கு 174 பயணிகளுடன் சென்ற விமானத்தை தரையில் மோத வைக்க நினைத்த, துணை விமானி ஹமாம் அல் ஹம்மாமி ஓமன் நாட்டின் குடியுரிமையை மட்டுமே கொண்டிருப்பதாகவும், அவருக்கு இரட்டை குடியுரிமை இல்லை என்றும் விசாரணை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் இஸ்ரேல் விமானத்தில் ஓமனை சேர்ந்தவர் விமானியாக பணியாற்றியது எப்படி என்ற கேள்வி எழுந்துள்ளது.

இஸ்ரேல் செல்லும் விமானத்தில் பணியாற்றும் விமானிகள், இஸ்ரேல் நாட்டுடன் தூதரக உறவுகள் வைத்துள்ள நாடுகளின் குடியுரிமை பெற்றவராக இருக்க வேண்டும் என்ற இயக்க ஒப்பந்தம் இருந்த போதிலும், ஓமன் நாட்டை சேர்ந்த ஹாமாமி, துபாய் டூ டெல் அவிவ் செல்லும் விமானத்தில் பணியாற்றியது எப்படி என்ற கேள்வி எழுந்துள்ளது.

Omani Pilot Flying Israel-Bound Flydubai Flight Had No Second Nationality Shocking Details Emerge

இரட்டை குடியுரிமை இல்லை

துபாயில் இருந்து இஸ்ரேலின் டெல் அவிவ் நகருக்குச் சென்ற பிளைதுபாய் விமானத்தை தரையில் மோத வைத்து அசம்பாவிதத்தை நிகழ்த்த திட்டமிட்டதாக சந்தேகிக்கப்படும் ஓமன் நாட்டு துணை விமானியிடம் தொடர் விசாரணை நடைபெற்று வருகிறது. விசாரணையில் துணை விமானி குறித்து பல்வேறு அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி வருகின்றன. முதலில் அவரது பெயர் விவரங்கள் வெளியிடப்படாமல் இருந்த நிலையில் தற்போது வெளியிடப்பட்டு இருக்கிறது.

அவர் ஓமனை சேர்ந்தவர் என்பதும் அவரது பெயர் ஹமாம் அல் ஹம்மாமி என்பது தெரியவந்துள்ளது. யூதர்களான இஸ்ரேலியர்களை கொல்ல வேண்டும் என்பதில் அல் ஹம்மாமி உறுதியாக இருந்ததாகவும்.. இது அவருடைய சமூக வலைத்தள பக்கத்தின் மூலம் உறுதியானதாகவும் தகவல்கள் வெளியாகின. தற்போது அவரிடம் இரட்டை குடியுரிமை இல்லை என்ற தகவலும் தெரியவந்துள்ளது.

Code 7500! சட்டென உயரத்தை குறைத்த துபாய் விமானம்! நடுவானில் சிக்கிய 180 உயிர்கள்! உச்சக்கட்ட பதற்றம்

Code 7500! சட்டென உயரத்தை குறைத்த துபாய் விமானம்! நடுவானில் சிக்கிய 180 உயிர்கள்! உச்சக்கட்ட பதற்றம்

எப்படி பணியாற்ற முடிந்தது?

இது குறித்து ‘தி ஜெருசலேம் போஸ்ட்’ வெளியிட்டுள்ள செய்தியில், துணை விமானி ஹமாம் அல் ஹம்மாமி ஓமன் நாட்டின் குடியுரிமையை மட்டுமே வைத்து இருந்தாராம். அவரிடம் இரட்டை குடியுரிமை இல்லை என்பது விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. இஸ்ரேலுக்கும் ஓமனுக்கும் இடையே அதிகாரப்பூர்வ தூதரக உறவுகள் இல்லை. ஓமன் நாட்டினர் இஸ்ரேலுக்குச் செல்ல விசா பெற வேண்டியது அவசியம்.

இதே போன்று பிளைதுபாய் நிறுவனத்தின் இயக்க ஒப்பந்தத்தின்படி, இஸ்ரேலுடன் தூதரக உறவு கொண்ட நாடுகளின் குடியுரிமையைப் பெற்றவர்கள் தான் விமானிகளாக இருக்க வேண்டும் என்று இஸ்ரேல் போக்குவரத்து அமைச்சகம் ஏற்கனவே தெரிவித்து உள்ளது. இப்படி இருக்கும் போது, இரட்டை குடியிரிமை இல்லாமல் எப்படி இவரால் டெல் அவிவ் டூ துபாய் செல்லும் விமானத்தில் பணியாற்ற முடிந்தது என்ற கேள்வி எழுந்துள்ளது.

துணை விமானி குறித்த பின்னணி

ஏற்கனவே ஓமன் நாட்டு துணை விமானியின் பின்னணி குறித்து இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, “அந்த விமானி இஸ்லாமிய அடிப்படைவாதக் கருத்துகளால் பயங்கரவாத எண்ணம் கொண்டவர் என்றும், அவர் தற்கொலை எண்ணம் கொண்டிருந்ததாகவும் கூறியிருந்தார். அதே நேரத்தில் அவருக்கு ஈரானுடன் தொடர்பு உள்ளதா? என்பதை தற்போதே உறுதி செய்ய முடியாது என்றும் கூறியிருந்தார்.

தெளிவாகும் உண்மை.. ஓமன் பைலட்டை அனுப்பியது யார்? பகீர் கிளப்பிய இஸ்ரேல் பிரதமர் - வார்னிங்

தெளிவாகும் உண்மை.. ஓமன் பைலட்டை அனுப்பியது யார்? பகீர் கிளப்பிய இஸ்ரேல் பிரதமர் – வார்னிங்

ஒமன் நாட்டை சேர்ந்த துணை விமானி குறித்து தோண்ட தோண்ட அதிர்ச்சிகர தகவல்கள் வெளியாகி வருவது சர்வதேச அளவில் பெரும் பரப்பை ஏற்படுத்தியுள்ளது. தற்போது ஐக்கிய அரபு அமீரகம் வசம் அவர் ஒப்படைக்கப்பட்டு இருக்கும் நிலையில், அவரிடம் நடத்தப்படும் விசாரணையின் முடிவில் மேலும் பல அதிர்ச்சிகர காரணங்கள் வெளிவரும் என்று கூறப்படுகிறது.

English summary

Omani Pilot: An investigation report has revealed that Hamam Al-Hammami—the co-pilot who attempted to crash a flight carrying 174 passengers from Dubai to Israel—held only Omani citizenship and did not possess dual citizenship. This has raised questions regarding how an Omani national came to serve as a pilot on an Israeli flight.

Read More

Previous Post

அனோஜனை விடுவிக்கக் கோரி ஜனாதிபதிக்கு மனு

Next Post

Ind vs Pak | 15 வயது சூர்யவன்ஷியை சீண்டிய பாகிஸ்தான் பவுலர்… உடல்மொழியால் நக்கல்.. என்ன செய்தார்? 

Next Post
Ind vs Pak | 15 வயது சூர்யவன்ஷியை சீண்டிய பாகிஸ்தான் பவுலர்… உடல்மொழியால் நக்கல்.. என்ன செய்தார்? 

Ind vs Pak | 15 வயது சூர்யவன்ஷியை சீண்டிய பாகிஸ்தான் பவுலர்… உடல்மொழியால் நக்கல்.. என்ன செய்தார்? 

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin