வவுனியா மாவட்டத்தில் ஓமந்தை மருதோடை பகுதியில் அமர்ந்து மக்களுக்கு அருள்பாலிக்கும் மருதோடை கந்தசாமி கோவில் போரிற்கு பின்னர் தற்போது புனருத்தாபனம் செய்யப்பட்டு மஹாகும்பாபிஷேகம் நடைபெற்று வருகின்றது.
கும்பாபிஷேகத்தின் எண்ணைய்காப்பு சாத்தும் நிகழ்வு இன்று (08) சிறப்பு நடைபெற்றுள்ளது.
இந்த நிகழ்வில் வவுனியா உள்ளிட்ட வடக்கு மாகணத்தில் இருந்து பெருமளவான பக்தர்கள் கலந்துகொண்டு சிறப்பித்துள்ளார்கள்.
நீண்ட தொன்மை வரலாறு கொண்ட கோயிலாகவும், கதிர்காமப் பாதயாத்திரை செல்லும் முருக பக்த்தர்கள் தங்கி இளைப்பாறி செல்லும் முருக தலமாக காணப்படுவதுடன் பல புதுமைகள் நிகழ்த்தும் அற்புதம் நிறைந்த கோவில் சிறப்பான முறையில் புனரமைக்ககப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெறவுள்ளது.
நேற்று (07) கர்மாரம்ப கிரியைகள் இடம்பெற்று இன்று எண்ணைய்காப்பு சாத்தும் நிகழ்வு இடம்பெற்று நாளை (09) கும்பாபிஷேகம் நடைபெறவுள்ளது.
தொடர்ந்து 15 நாட்கள் மண்டலாபிஷேகம் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
புதுக்குடியிருப்பு விசேட நிருபர்
The post மருதோடை கந்தசாமி கோவில் எண்ணைய்காப்பு சாத்தும் நிகழ்வு appeared first on Thinakaran.


