Last Updated:
திபெத் மற்றும் நேபாளத்தின் நிலப்பரப்பானது பூமிக்கு அடியில் உள்ள இந்திய மற்றும் யுரேசிய டெக்டோனிக் தகடுகள் உரசிக்கொள்ளும் பெரும் புவியியல் பிளவுக் கோட்டின் மீது அமைந்துள்ளது.
சீனாவில் தொலைதூர இமையலைப் பகுதியான திபெத்தில் இன்று அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 3.6 ஆகப் பதிவாகி உள்ளதாக தேசிய நில அதிர்வு மையம் (என்சிஎஸ்) தெரிவித்துள்ளது.
இந்திய நேரப்படி சனிக்கிழமை அதிகாலை காலை திபெத்தின் நிலப்பரப்பில் இருந்து சுமார் 15 கி.மீட்டர் ஆழத்தில் 3.6 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக தேசிய நில அதிர்வு ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலநடுக்கத்தால் இதுவரை பொருட்சேதமோ, உயிர்ச்சேதமோ ஏற்பட்டதாக எந்த தகவலும் வெளியாகவில்லை. பொதுவாக ஆழமற்ற நிலநடுக்கங்கள் ஆழமான நிலநடுக்கங்களை விட அதிக ஆபத்தானவை. ஏனெனில், ஆழமற்ற நிலநடுக்கங்களில் இருந்து வரும் நில அதிர்வு அலைகள் மேற்பரப்பை அடைய குறைந்த தூரமே பயணிக்கின்றன. இதன் விளைவாக, தரை அதிர்வு வலுவாக இருப்பதோடு, அதிக கட்டமைப்பு சேதங்களும், அதிக உயிரிழப்புகளும் ஏற்படுகின்றன.
திபெத் மற்றும் நேபாளத்தின் நிலப்பரப்பானது பூமிக்கு அடியில் உள்ள இந்திய மற்றும் யுரேசிய டெக்டோனிக் தகடுகள் உரசிக்கொள்ளும் பெரும் புவியியல் பிளவுக் கோட்டின் மீது அமைந்துள்ளது. இதனால், இவ்விரு நாடுகளிலும் எப்போது வேண்டுமானாலும் நிலநடுக்கம் ஏற்படும் என்ற அபாயமுள்ளது குறிப்பிடத்தக்கது.


