• Login
Saturday, October 3, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

“அப்பா நாம சாககூடாது”.. விமானத்தில் அலறிய 6 வயது சிறுமி.. இந்திய விமானி உள்பட 180 பேரை காப்பாற்றியதே இவர் தான் | Dubai – Tel Aviv Flight: How 6 year old girl played a key role for saving Indian pilot and all the passengers? details here

GenevaTimes by GenevaTimes
October 3, 2026
in இந்தியா
Reading Time: 1 min read
0
“அப்பா நாம சாககூடாது”.. விமானத்தில் அலறிய 6 வயது சிறுமி.. இந்திய விமானி உள்பட 180 பேரை காப்பாற்றியதே இவர் தான் | Dubai – Tel Aviv Flight: How 6 year old girl played a key role for saving Indian pilot and all the passengers? details here
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


International

oi-Nantha Kumar R

Time
Published: Friday, October 2, 2026, 18:59 [IST]

டெல்அவிவ்: ”அப்பா நாம சாகக்கூடாது” என்று விமான கழிவறை அருகே இருந்து அலறிய 6 வயது சிறுமி. ”பைலட்டை கத்தியால் குத்துகிறார்.. பைலட்டை கத்தியால் குத்துகிறார்” என்று கத்திய சிறுமியின் தாயார். இந்த 2 அலறல் சத்தம் தான் துபாயில் இருந்து இஸ்ரேலுக்கு பயணித்த விமானத்தில் ஓமன் துணை விமானியால் கத்தியால் குத்தப்பட்ட இந்திய பைலட்டையும், மொத்த பயணிகளையும் காப்பாற்றியதோடு, விமான கடத்தலையும் தடுத்து நிறுத்தியது என்ற பரபரப்பான புதிய தகவல் வெளியாகி உள்ளது.

dubai-tel-aviv-flight-how-6-year-old-girl-played-a-key-role-for-saving-indian-pilot-and-all-the-p

துபாயில் இருந்து இஸ்ரேல் நாட்டின் டெல்அவிவ் நகருக்கு நேற்று முன்தினம் ‘ஃப்ளைதுபாய்’ என்ற நிறுவனத்துக்கு சொந்தமான FZ1073 விமானத்தை ஓமன் துணை விமானி கடத்த முயன்றார். விமானத்தில் 174 பயணிகள், 6 பணியாளர்கள் பயணித்த நிலையில் விமானத்தை கடத்தி வேகமாக தரையில் மோதி வெடிக்க செய்து அனைவரையும் கொல்வதே அவரது நோக்கமாக இருந்தது.

இதற்காக அவர் தன்னுடன் பணியில் இருந்த மும்பையை சேர்ந்த பைலட் கேப்டன் ஸ்மித் மச்சாரை கத்தியால் குத்திவிட்டு விமானத்தை வானில் இருந்து வேகமாக தரையிறக்கினார். வெறும் 90 நிமிடத்தில் இந்த விமானம் 17,400 அடி உயரத்தை குறைத்து மின்னல் வேகத்தில் பூமியை நோக்கி வந்து கொண்டிருந்தது.

இருப்பினும் கத்திக்குத்து காயத்திலும் பைலட் ஸ்மித் மச்சார், சக பயணிகள் இணைந்து இந்த விமான கடத்தலை தடுத்து பெரும் விபத்தையும் தடுத்தனர். விமானத்தில் பயணித்த 180 பேரும் தப்பிய நிலையில் ஓமன் பைலட் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் தீவிரமாக விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த சம்பவத்தில் இந்திய பைலட் ஸ்மித் மச்சார் தான் ஹீரோ. அவர் தான் கத்திக்குத்து காயத்திலும் போராடி காக்பிட் கதவை திறந்து துணை விமானியை சிறைபிடிக்க உதவினார் என்பது நமக்கு தெரியும்.

ஆனால் காக்பிட்டில் 2 பைலட்டுகள் நடுவே சண்டை நடக்கிறது என்பதை விமானத்தில் உள்ளவர்களுக்கு தெரிவிக்க உதவியது 6 வயது சிறுமி தான் என்பது பலருக்கும் தெரியாமல் உள்ளது. இந்த விமானத்தில் என்ன நடந்தது? என்பது தொடர்பாக அடுத்தடுத்து புதிய தகவல்கள் வெளியாகி வருகின்றன. அந்த வகையில் தற்போது இன்னொரு முக்கிய தகவல் கிடைத்துள்ளது.

விமானத்தில் இந்திய பைலட்டான கேப்டன் ஸ்மித் மச்சார் மட்டுமின்றி அதில் பயணித்த 180 பேரின் உயிரையும் காப்பாற்றியது 6 வயது சிறுமி தான் என்றால் உங்களால் நம்ம முடிகிறதா? ஆம் இது உண்மை தான். விமான கழிவறைக்கு சென்ற 6 வயது சிறுமி தான் விமான கடத்தலையும் தடுத்து நிறுத்தி, இந்திய பைலட் ஸ்மித் மச்சார் மற்றும் பயணிகளையும் காப்பாற்றி உள்ளார்.

அந்த சிறுமியின் பெயர் நினா மானேஷ். வயது 6. இவர் தனது பெற்றோரான தாலி மற்றும் ஸ்விகா மானேஷ் ஆகியோருடன் துபாயில் இருந்து இஸ்ரேலின் டெல்அவிவ் நகருக்கு விமானத்தில் பயணித்து கொண்டிருந்தார். இவர்கள் விமானத்தின் முன்பகுதியில் அமர்ந்து பயணித்து கொண்டிருந்தனர். விமானம் வானில் பறந்தபோது சிறுமி கழிவறைக்கு செல்ல விரும்பினார்.

தனது துணைக்கு தாய் தாலியையும் அழைத்து சென்றார். இருவரும் விமானத்தின் முன்பகுதியில் காக்பிட் அறையையொட்டி அமைந்துள்ள கழிவறையின் அருகே சென்றனர். அப்போது காக்பிட் அறையில் இருந்து அலறல் சத்தம் கேட்டது. உள்ளே பைலட்டுகள் சத்தமிட்டு சண்டையிடுவது தெரியவந்தது.

இதுபற்றி சிறுமியின் தாய் தாலி ‘இஸ்ரேல் சேனல் 12’க்கு அளித்த பேட்டியில்,, ”காக்பிட் அறை முழுவதம் ரத்தம் சிதறி கிடந்தது. மிக தீவிரமாக சண்டை நடந்து கொண்டிருந்தது. நான் விமான பணியாளர்களை அலர்ட் செய்வதற்குள் நிலைமை மோசமானது. காக்பிட் அறை கதவின் அருகே பைலட் விழுந்து கிடந்தார். அவர் மீது அமர்ந்து துணை விமானி கத்தியால் குத்தி கொண்டிருந்தார்.

நான் அதிர்ந்து போனேன். பைலட்டை கத்தியால் குத்துகிறார். பைலட்டை கத்தியால் குத்துகிறார். வந்து உதவி செய்யுங்கள் என்று கத்தினேன். பயணிகள் என்னை பார்த்தாலும் அவர்களுக்கு ஒன்றும் புரியவில்லை. அதன்பிறகு எனது கணவர் மற்றும் பிற பயணிகள் வந்து கத்திக்குத்து காயமடைந்த பைலட்டை மீட்டு, துணை விமானியை பிடித்தனர்” என்றார்.

இதுபற்றி சிறுமியின் தந்தை ஸ்விகா மானேஷ் கூறுகையில், ”என் மகள் அப்பா.. நாம எல்லாக சாகக்கூடாது என்று கத்தினார். இந்த சத்தம் தான் என்னை அவளை நோக்கி ஓடச்செய்தது. விமானம் தலைக்கீழாக கீழ்நோக்கி இறங்கியபோது என் மகள் அலறிய சத்தம் இப்போதும் என் காதில் ஒலித்து கொண்டிருக்கிறது. என் மகளின் சத்தம் கேட்டு தான் நான் உள்பட 3 பேர் காக்பிட்டு அருகே சென்றோம். அப்போது காக்பிட் கதவு பாதியளவில் திறந்து கிடந்தது. ரத்த வெள்ளத்தில் கிடந்த பைலட்டை மீட்டோம். துணை விமானியை சிறை பிடித்தோம்.

பைலட்டுக்கு சிகிச்சையளிக்க யாராவது டாக்டர் இருக்கிறீர்களா? என்று கேட்டோம். அப்போது பல் மருத்துவர் இருப்பதாக கூறினார். அவர் தான் இந்திய பைலட் கேப்டனுக்கு சிகிச்சையளித்து காப்பாற்றினார். ஆக்சிஜன் கொடுத்தார். உடலில் இருந்து கொட்டி ரத்தத்தை நிறுத்தினார். அனைத்து வகையான முதலுதவி சிகிச்சையையும் அவர் தான் அளித்தார்” என்று கூறியுள்ளார்.

இந்த சம்பவத்தில் தந்தை ஸ்விகா மானேஷ், அசாப் ராஜவன், யானிவ் ஹாயூன் என்ற 3 பயணிகள் தான் முதல ஆளாக காக்பிட்டுற்குள் சென்று இந்திய பைலட்டை மீட்டதோடு, ஓமன் பைலட்டை சிறை பிடித்து பெரும் விமான விபத்தை தடுத்தனர். அதுமட்டுமின்றி அந்த 6 வயது சிறுமி டாய்லெட் சென்றதால் தான் காக்பிட்டில் பைலட்டுகள் இடையே நடந்த சண்டைடைய சிறுமியும், அவரது தயாரும் அறிந்து கொண்டனர். இந்த சிறுமி இல்லாவிட்டால் இது பயணிகளுக்கு தாமதமாக தெரிந்திருக்கும். அதற்குள் விமானத்தில் என்ன வேண்டுமானாலும் நடந்து இருக்க வாய்ப்புள்ளது.

English summary

“Dad, we dont want to die” screamed a six-year-old girl from near the aircraft lavatory. Startling new information has emerged revealing that this very scream saved the Indian pilot-who was being stabbed with a knife by an Omani co-pilot on a flight from Dubai to Israel-as well as all the passengers, while also thwarting a hijacking attempt.

Read More

Previous Post

2027 ஐசிசி ஒருநாள் உலகக் கிண்ண போட்டி அட்டவணை வெளியீடு: இந்தியா, பாகிஸ்தான் மீண்டும் ஒரே குழுவில் மோதல் – Sri Lanka Tamil News

Next Post

கல்லூரி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை: 55 வயது விரிவுரையாளருக்கு விளக்கமறியல் – Sri Lanka Tamil News

Next Post
கல்லூரி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை: 55 வயது விரிவுரையாளருக்கு விளக்கமறியல் – Sri Lanka Tamil News

கல்லூரி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை: 55 வயது விரிவுரையாளருக்கு விளக்கமறியல் - Sri Lanka Tamil News

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin