• Login
Saturday, October 3, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

இலங்கை அருகே 20 ஈரானிய எண்ணெய் கப்பல்கள்! தாயகம் திரும்புவதிலும் கடும் சிக்கல் – பின்னணி என்ன? – Sri Lanka Tamil News

GenevaTimes by GenevaTimes
October 2, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
இலங்கை அருகே 20 ஈரானிய எண்ணெய் கப்பல்கள்! தாயகம் திரும்புவதிலும் கடும் சிக்கல் – பின்னணி என்ன? – Sri Lanka Tamil News
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


செய்திகள்
/
கொழும்பு
/
இலங்கை அருகே 20 ஈரானிய எண்ணெய் கப்பல்கள்! தாயகம் திரும்புவதிலும் கடும் சிக்கல் – பின்னணி என்ன?

அமெரிக்காவின் பொருளாதாரத் தடைகளால் நாடு திரும்ப முடியாமல் இலங்கையின் தென்மேற்கு கடற்பரப்புக்கு அப்பால் உணவு, நீரின்றி முடங்கிக் கிடக்கும் 20 ஈரானிய எண்ணெய் தாங்கிக் கப்பல்கள் குறித்து வோல் ஸ்ட்ரீட் ஜேர்னல் தகவல் வெளியிட்டுள்ளது.


ஈரானின் எண்ணெய் வர்த்தகத்தை இலக்கு வைத்து அமெரிக்கா முன்னெடுத்து வரும் கடுமையான பொருளாதார அழுத்தங்களுக்கு மத்தியில், இலங்கையின் தென்மேற்கு கடற்பரப்பிலிருந்து சுமார் 15 மைல் தொலைவில் சுமார் 20 ஈரானிய எண்ணெய் தாங்கிக் கப்பல்கள் உணவு, எரிபொருள் மற்றும் குடிநீர் தட்டுப்பாட்டுடன் நங்கூரமிட்டுள்ளதாக ‘வோல் ஸ்ட்ரீட் ஜேர்னல்’ (The Wall Street Journal) செய்தி வெளியிட்டுள்ளது.

அமெரிக்காவின் தடைகளுக்கு உட்பட்ட ஈரானிய எண்ணெயை பிரதானமாக சீனாவுக்கு விநியோகித்துவிட்டுத் திரும்பிய குறித்த கப்பல்கள், தற்போது இயந்திரங்களை இயங்கவிடாமல் நடுக்கடலில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. 

கடந்த ஜூலை மாதம் முதல் ஹோர்முஸ் நீரிணையில் அமெரிக்கா விதித்துள்ள தடைகளைத் தொடர்ந்து, ஈரான் மற்றும் ஈரானுடன் தொடர்புடைய பல கப்பல்கள், இலங்கை மற்றும் மலேசியாவை அண்டிய கடற்பரப்பில் முடங்கிக் கிடக்கின்றன.

இலங்கைக்கு அருகிலுள்ள கடற்பரப்பில் பயணிக்கும் அல்லது நங்கூரமிட்டுள்ள ஈரானிய கப்பல்கள் உள்ளிட்ட அனைத்து சர்வதேசக் கப்பல்களும் தீவிர கண்காணிப்புக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகவும், அவை அனைத்தும் இலங்கையின் எல்லைக்குட்பட்ட பிராந்திய கடல் எல்லைக்கு அப்பாற்பட்ட சர்வதேச கடற்பரப்பிலேயே உள்ளதாகவும் இலங்கை அதிகாரிகள் ஏற்கெனவே தெளிவுபடுத்தியுள்ளனர். 

ஈரானிய கப்பல்கள் உட்பட சுமார் 47 வெளிநாட்டுக் கப்பல்கள் அப்பகுதியில் அடையாளம் காணப்பட்டிருந்ததாகவும், அவை அனைத்தும் சர்வதேச கடற்பரப்பிலேயே இயங்கி வருவதாகவும் வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் கடந்த செப்டெம்பர் மாதம் நாடாளுமன்றத்தில் குறிப்பிட்டிருந்தார்.

ஈரான் மீதான அழுத்தங்களை அதிகரிப்பதற்காக ட்ரம்ப் நிர்வாகம் அந்நாட்டின் மீது மேலதிக பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளதுடன், அந்நாட்டுடன் வர்த்தகத்தில் ஈடுபடும் நாடுகள் மற்றும் சர்வதேச நிறுவனங்களுக்கும் கடுமையான எச்சரிக்கைகளை விடுத்துள்ளது. ஈரானின் தடைசெய்யப்பட்ட எண்ணெய் ஏற்றுமதியையும் கப்பல் போக்குவரத்து வலையமைப்பையும் முடக்கும் நோக்கில் வாஷிங்டன் முன்னெடுத்து வரும் விரிவான நடவடிக்கைகளின் நேரடி விளைவே இதுவென வோல் ஸ்ட்ரீட் ஜேர்னல் மேலும் விவரித்துள்ளது.

சரக்குகளை இறக்கிய பின்னர் அமெரிக்காவின் முற்றுகை மற்றும் தடைகள் காரணமாக தமது தாய்நாட்டு துறைமுகங்களுக்குத் திரும்ப முடியாமல், ஆசிய கடற்பரப்பில் செயலற்ற நிலையில் நங்கூரமிட்டுள்ள ஈரானுடன் தொடர்புடைய கப்பல்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. 
இலங்கை மற்றும் மலேசியாவை அண்டிய கடல் எல்லைகளில் ஏராளமான ஈரானிய எண்ணெய் கப்பல்கள் நீண்ட நாட்களாகக் காத்திருப்பதாகவும், வெறுமையாகத் திரும்பும் கப்பல்கள் தாய்நாடு செல்வதில் கடுமையான சவால்களை எதிர்கொண்டுள்ளதாகவும் சர்வதேச செய்தி நிறுவனமான ரொய்ட்டர்ஸும் முன்னதாக செய்தி வெளியிட்டிருந்தது.

Read More

Previous Post

“மது இல்லாத தமிழகம்” சவுமியா அன்புமணியின் புதிய இயக்கம் தொடக்கம் | Makkal Osai

Next Post

யூதர்களை கொல்லணும்.. இஸ்ரேல் விமானத்தை ஓமன் துணை விமானி கடத்த முயன்றது ஏன்? பின்னணியில் பாலஸ்தீனம் | Dubai – Tel Aviv flight: Oman pilot talked about killingjews in his social media post

Next Post
யூதர்களை கொல்லணும்.. இஸ்ரேல் விமானத்தை ஓமன் துணை விமானி கடத்த முயன்றது ஏன்? பின்னணியில் பாலஸ்தீனம் | Dubai – Tel Aviv flight: Oman pilot talked about killingjews in his social media post

யூதர்களை கொல்லணும்.. இஸ்ரேல் விமானத்தை ஓமன் துணை விமானி கடத்த முயன்றது ஏன்? பின்னணியில் பாலஸ்தீனம் | Dubai - Tel Aviv flight: Oman pilot talked about killingjews in his social media post

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin