• Login
Friday, October 2, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

ரூ. 1,700 க்கு டிமிக்கி கொடுத்த நிர்வாகம்: வெவரலியில் வேலைநிறுத்தம்

GenevaTimes by GenevaTimes
October 2, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
ரூ. 1,700 க்கு டிமிக்கி கொடுத்த நிர்வாகம்: வெவரலியில் வேலைநிறுத்தம்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter



 எஸ். கௌசல்யா


அக்கரப்பத்தனை பெருந்தோட்ட யாக்கத்திற்குட்பட்ட வெவரலி தோட்டத்தைச் சேர்ந்த போட்மோர், மோனிங்டன் மேற்பிரிவு, மோனிங்டன் கீழ்ப்பிரிவு மற்றும் ஆடலி ஆகிய தோட்டங்களைச் சேர்ந்த சுமார் 600 தொழிலாளர்கள், வெள்ளிக்கிழமை (02) காலை முதல் தோட்ட நிர்வாகத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.


கடந்த காலங்களில் தொழிலாளர்களுக்கு நாளாந்தம் ரூ. 1,700 சம்பளம் எவ்விதப் பிரச்சினைகளுமின்றி வழங்கப்பட்டு வந்ததாகவும், தற்போது வெள்ளிக்கிழமை மற்றும் சனிக்கிழமைகளில் பணிபுரியும் தொழிலாளர்களுக்குக் கைகாசாகச் சம்பளம் வழங்கப்படுவதுடன், ஒரு கிலோகிராம் கொழுந்துக்கு ரூ. 90 என்ற அடிப்படையில் சம்பளம் வழங்கப்படும் எனத் தோட்ட நிர்வாகம் அறிவித்துள்ளதாகவும் தொழிலாளர்கள் தெரிவிக்கின்றனர்.


இவ்வாறு சம்பளம் வழங்கப்படும் பட்சத்தில், அரசாங்கத்தினால் வழங்கப்படும் ரூ. 200 கொடுப்பனவு தங்களுக்குக் கிடைக்காமல் போகும் எனவும் தொழிலாளர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.


மேலும், தோட்டப் பகுதிகள் முறையாகப் பராமரிக்கப்படாததன் காரணமாகப் பல பகுதிகள் காடாகிவிட்டதால், தொழிலாளர்களால் உரிய முறையில் தொழில் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.


எனவே, தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டிய அனைத்துச் சம்பளம் மற்றும் சலுகைகளைத் தோட்ட நிர்வாகம் முறையாக வழங்க வேண்டும் என வலியுறுத்தி, இந்த வேலைநிறுத்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருவதாகத் தொழிலாளர்கள் தெரிவிக்கின்றனர்.


இதேவேளை, வெவரலி மற்றும் போட்மோர் தோட்டங்களைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் தேயிலைத் தொழிற்சாலைக்கு முன்பாக இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சுமார் மூன்று மணி நேரம் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தைத் தொடர்ந்து, தோட்ட நிர்வாகத்திற்கும் தொழிற்சங்கப் பிரதிநிதிகளுக்கும் இடையில் பேச்சுவார்த்தை இடம்பெற்றது.


எனினும், பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படாத நிலையில், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.




Read More

Previous Post

கழிப்பறைக் கதவை வேறு நபர் தட்டியதால் அம்பலமான விபரீதம்: முதலாளியின் 18 வயது மகளைப் பாலியல் பலாத்காரம் செய்த 71 வயது உணவக ஊழியர் கைது! | Makkal Osai

Next Post

தேசத்துக்கு தொடர்ந்து உத்வேகம் அளிக்கும் சாஸ்திரியின் எளிமை, அர்ப்பணிப்பு: பிரதமர் மோடி | India News (இந்தியா செய்திகள்)

Next Post
தேசத்துக்கு தொடர்ந்து உத்வேகம் அளிக்கும் சாஸ்திரியின் எளிமை, அர்ப்பணிப்பு: பிரதமர் மோடி | India News (இந்தியா செய்திகள்)

தேசத்துக்கு தொடர்ந்து உத்வேகம் அளிக்கும் சாஸ்திரியின் எளிமை, அர்ப்பணிப்பு: பிரதமர் மோடி | India News (இந்தியா செய்திகள்)

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin