• Login
Friday, October 2, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

அன்பில் மகேஸ் வழக்கில் 1,000 கோடி ஆதாரம்.. அவர் சகோதரி வாங்கிய 2 பள்ளி.. போட்டுடைத்த ஆதவ் அர்ஜுனா | Anbil Mahesh case 1,000 crore evidence out said Minister Aadhav Arjuna

GenevaTimes by GenevaTimes
October 2, 2026
in இந்தியா
Reading Time: 1 min read
0
அன்பில் மகேஸ் வழக்கில் 1,000 கோடி ஆதாரம்.. அவர் சகோதரி வாங்கிய 2 பள்ளி.. போட்டுடைத்த ஆதவ் அர்ஜுனா | Anbil Mahesh case 1,000 crore evidence out said Minister Aadhav Arjuna
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Tamilnadu

oi-Pavithra Mani

Time
Published: Friday, October 2, 2026, 8:56 [IST]

மதுராந்தகம்: மதுராந்கம், தாராபுரம் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வருகிற 6 ஆம் தேதி நடைபெறவுள்ளது. தவெக, திமுக, அதிமுக, கம்யூனிஸ்ட்கள், நாம் தமிழர் என 5 முனை போட்டி நிலவுகிறது. தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. அரசியல் கட்சி தலைவர்கள் பிரச்சாரம் தீவிரமடைந்துள்ளது. இந்நிலையில் அன்பில் மகேஸ் மீது வழக்கில் 1,000 கோடி ரூபாய்க்கான ஆவணங்கள் வெளியாகியுள்ளதாக ஆதவ் அர்ஜுனா கூறியுள்ளார்.

மதுராந்தகத்தில் தவெக கூட்டணி பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் பேசிய அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, “மதச்சார்பற்ற சமூக நீதி வெற்றி கூட்டணியின் முதல் மாநாடு வெற்றி பெற்றுள்ளது. ஊழலற்ற ஆட்சியை வழங்குவது சாதாரணமல்ல. இந்த மேடையில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் உள்ளார். தமிழகம் முழுவதும் எத்தனை பள்ளிகள் உள்ளன. திமுக முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி மீது பொய்யான வழக்கு போட்டுள்ளோம் என்று சொல்கிறார்கள்.

Aadhav Arjuna Anbil Mahesh

ரூ.1,000 கோடிக்கான ஆவணங்கள்

எல்லாவற்றுக்கும் தகுந்த ஆதாரம் இருக்கிறது. கிட்டத்தட்ட ரூ.1,000 கோடிக்கணக்கான ஆவணங்கள் வெளியில் வந்துள்ளன. அந்த பணம் எல்லாம் எங்கே போயுள்ளது. அரசக்குமார் மட்டுமல்ல, அன்பில் மகேஸின் சகோதரி 2 பள்ளிகளை வாங்கியுள்ளார். பல்லாவரத்தில் ரூ.400 கோடி மதிப்பிலான பள்ளியை கைப்பற்றியுள்ளனர். நிர்வாகத்தில் இருந்தவர்களுக்கு பணத்தை கொடுத்து வெளியே அனுப்பி, ஒரு பள்ளியையே மாற்றியுள்ளனர். இப்படி நம் ஆட்சியில் நடக்குமா. ராஜ்மோகன் செய்ய முடியுமா.

இப்படி அனைத்து துறைகளிலும் தவறு நடந்துள்ளது. இவற்றை எதிர்க்கும் தலைவரை மக்கள் முதலமைச்சராக உருவாக்கியுள்ளனர். வெற்றி பயணம் மதுராந்தகத்தில் இருந்து, அடுத்த 25 வருடங்கள் தவெக, காங்கிரஸ், விசிக, ஐயுஎம்எல் உள்ளிட்ட பல கட்சிகள் பயணிக்கும். தேர்தல் அரசியலில் இனி திமுக எந்த காலத்திலும் வெற்றி முடியாது. இத்தனை நாட்கள் அவர்கள் ஆட்சி செய்ததை நாம் எல்லாம் வேடிக்கை மட்டுமே பார்த்தோம்.

பாஜகவுக்கு இடம் கொடுக்க வேண்டாம்

கம்யூனிஸ்ட் தோழர்களே நீங்களும் அமைச்சரவையில் இணையுங்கள். கொள்கை ரீதியாக நமக்குள் எந்த வேறுபாடும் இல்லை. நமக்குள் விமர்சனங்கள் இருக்கலாம். மாறி மாறி திட்டலாம். 2029 தேர்தலில் பாஜகவுக்கு இடம் கொடுத்துவிட வேண்டாம். கம்யூனிஸ்ட் தோழர்களை திட்டுவது எங்கள் நோக்கமில்லை. 2029 தேர்தலில் மதவாத சக்திகளுக்கு இடம் கொடுக்க கூடாது என்றால் நம் கூட்டணியை இன்னும் வெற்றி கூட்டணியாக மாற்ற வேண்டும்.

ஒரு விஷயத்தை இப்படி செய்யுங்கள் என்று கம்யூனிஸ்ட்கள் முதலமைச்சரிடம் முறையிட்டனர். உடனே அதை நிறைவேற்றினார். என்றைக்கும் அவர் மக்களுக்கு எதிரான திட்டத்தை கொண்டு வரமாட்டார். பரந்தூர் விமான நிலையத்துக்கு எதிராக கம்யூனிஸ்ட்கள் போராடினார்களா. அவர்கள் போரடியதற்கு திமுக என்ன செய்தது. எந்த போராட்டமும் இல்லாமல் நம் முதலமைச்சர் ஒரு பைலில் அதை தூக்கி வீசினார்.

25 வருடங்கள் பயணம்

முதலமைச்சர் யார் பக்கம் நிற்கிறார் என தெரிந்து கொள்ளுங்கள். ஒரு அரசாணை தெரியாமல் வந்துவிட்டது. அடுத்த அரைமணி நேரத்தில் அது ரத்து செய்யப்பட்டது. தவறை சுட்டிக்காட்டினால் மாற்றி கொள்வதில் அவருக்கு எந்த ஈகோவும் இல்லை. இப்படி ஒரு முதலமைச்சர் நமக்கு கிடைத்துள்ளார். அடுத்த 25 வருட தேர்தல் வரலாற்றில், 5 சட்டமன்ற தேர்தல், 5 நாடாளுமன்ற தேர்தல், 5 உள்ளாட்சி தேர்தலில் இந்த கூட்டணி தொடரும்” என்றார்.

English summary

Minister Aadhav Arjuna said, DMK former Minister Anbil Mahesh case 1,000 crore evidence out now. his sister buy 2 schools.

Read More

Previous Post

வவுனியாவில் துயரம் – மின்னல் தாக்கி 20 வயது இளைஞன் பலி

Next Post

தலதா மாளிகை உள்ளிட்ட விகாரைகளுக்கு வட்ஸ்அப்பில் குண்டு மிரட்டல் – 21 வயது இளைஞன் விளக்கமறியலில்! – Sri Lanka Tamil News

Next Post
தலதா மாளிகை உள்ளிட்ட விகாரைகளுக்கு வட்ஸ்அப்பில் குண்டு மிரட்டல் – 21 வயது இளைஞன் விளக்கமறியலில்! – Sri Lanka Tamil News

தலதா மாளிகை உள்ளிட்ட விகாரைகளுக்கு வட்ஸ்அப்பில் குண்டு மிரட்டல் – 21 வயது இளைஞன் விளக்கமறியலில்! - Sri Lanka Tamil News

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin