• Login
Friday, October 2, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

ஊட்டி ரத்த தான முகாமில்.. சாதி விவரங்கள் சேகரிப்பு! அதிர்ச்சியில் மாணவர்கள்! | Caste Details Collected at Ooty Blood Donation Camp! Students Shocked!

GenevaTimes by GenevaTimes
October 2, 2026
in இந்தியா
Reading Time: 1 min read
0
ஊட்டி ரத்த தான முகாமில்.. சாதி விவரங்கள் சேகரிப்பு! அதிர்ச்சியில் மாணவர்கள்! | Caste Details Collected at Ooty Blood Donation Camp! Students Shocked!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Tamilnadu

oi-Halley Karthik

Time
Updated: Thursday, October 1, 2026, 17:54 [IST]

ஊட்டி: நேற்றைய தினம் ஊட்டி அரசு கலைக் கல்லூரியில் நடந்த ரத்ததான முகாமின்போது மாணவர்களிடம் சாதி விவரங்களை சேகரித்ததாக புகார்கள் எழுந்திருக்கிறது. ரத்த தானம் செய்வதே சாதியை மீறிய வரவேற்கத்தக்க நடவடிக்கைதான். அதிலும் வந்து சாதி விவரங்களை கேட்டிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.

ஒரு காலத்தில் ரத்த தானம் குறித்து பொதுமக்களுக்கு பெரிய அளவில் விழிப்புணர்வு இல்லை. ஆனால், இப்போது விழிப்புணர்வு ஏற்பட்டிருக்கிறது. ஏராளமான இளைஞர்களும் இளம்பெண்களும் சாதி, மதம், பாலினம் கடந்து ரத்த தானம் செய்ய முன் வந்திருக்கின்றனர்.

Ooty Blood Donation

ஊட்டி அரசு கலைக் கல்லூரியில் இப்படித்தான் நேற்று ரத்த தான முகாம் நடந்தது. முகாமின் தொடக்கத்தில் உதகை அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை வழங்கிய அதிகாரப்பூர் பதிவேட்டில் மட்டுமே மாணவர்கள் தங்களது விவரங்களை பதிவு செய்தனர். வழக்கமாக ரத்ததானம் நிகழ்ச்சியை ஒருங்கிணைப்பவர்கள் இப்படி படிவத்தை கொடுத்து தகவல்களை பதிவு செய்ய கேட்பார்கள். காரணம் அடுத்த முறை ஏதாவது எமெர்ஜென்சி எனில் இந்த விவரங்களை பார்த்து போன் செய்து அழைக்கதான்.

ஆனால், முகாம் தொடங்கிய பிறகு மத்திய அரசின் இளைஞர் நலன் விவகாரங்கள் மற்றும் விளையாட்டு அமைச்சகத்தின் கீழ் இயங்கும் ‘மேரா யுவா பாரத்’ அமைப்பின் நீலகிரி மாவட்ட ஒருங்கிணைப்பாளரான எஸ். ரஞ்சித்குமார் மாணவர்களுக்கு தனியாக ஒரு படிவத்தை கொடுத்து நிரப்ப கூறியிருக்கிறார்.

ஆனால் அந்த படிவத்தில் ரத்த தானம் செய்யும் மாணவர்கள் தங்களது சாதி பின்னணியை குறிப்பிட தனிப்பிரிவு ஒன்று இருந்தது. அதில் ரத்த தானம் செய்பவர்கள் SC/ST/OBC அல்லது பொதுப்பிரிவு ஆகியவற்றுள் எந்த பிரிவை சேர்ந்தவர்கள் என்ற விவரங்கள் கேட்கப்பட்டிருந்தன. ரத்த தானம் செய்ய வந்த மாணவர்கள் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். மேலும் சாதி விவரம் கேட்கப்பட்ட அந்த படிவத்தை அவர்கள் தங்களது மொபைல் போன்களில் வீடியோவாகவும் பதிவு செய்து சோஷியல் மீடியாவில் போஸ்ட் செய்திருக்கின்றனர். இந்த வீடியோ தற்போது விவாதங்களை கிளப்பியிருக்கிறது.

இந்த சம்பவம் தொடர்பாக கல்லூரி முதல்வர் ஜே.எபநேசர் நீலகிரி மாவட்ட போலீசாரிடம் எழுத்துப்பூர்வமாக புகார் அளித்துள்ளார். அந்த புகாரில் ரத்ததான முகாமில் சாதி விவரங்களை சேகரித்தது கல்லூரியை தவறாக வழிநடததும் செயல் என்றும், எனவே இந்த செயலில் ஈடுபட்ட ஒருங்கிணைப்பாளர் எஸ்.ரஞ்சித்குமார் மீது மாவட்ட போலீசார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

மேரா யுவா பாரத் அமைப்பின் பின்னணி

கடந்த 2023ம் ஆண்டு அக்.31ம் தேதி இந்த அமைப்பு பிரதமர் நரேந்திர மோடியால் தொடங்கி வைக்கப்பட்டிருந்தது. இளைஞர்களிடம் தலைமைப் பண்புகளை வளர்ப்பதற்கான பயிற்சிகளை வழங்கவும், ரத்ததான முகாம்கள், தூய்மை பணிகள், சுற்றுச்சூழல் விழிப்புணர்வு மற்றும் பேரிடர் மேலாண்மை போன்ற சமூக நலப்பணிகளில் இளைஞர்களை தன்னார்வலராக ஈடுபடுத்தவும் இந்த அமைப்பு செயல்படுவதாக சொல்லப்படுகிறது. ஆனால், சாதிய விவரங்களை கேட்பதன் மூலம் இளைஞர்களை எந்த பாதையில் இந்த அமைப்பு வழிநடத்த இருக்கிறது? என்கிற கேள்வியை பல்வேறு தரப்பினரும் எழுப்பியிருக்கின்றனர்.

English summary

Ooty Blood Donation: Complaints have arisen regarding the collection of caste details from students during a blood donation camp held yesterday at the Government Arts College in Ooty. Blood donation is, in itself, a commendable act that transcends caste barriers; however, the fact that caste details were sought during the event has sparked a controversy.

Read More

Previous Post

வெள்ளப்பெருக்கால் மெராயா த.ம.வி.,க்கு இன்று விடுமுறை

Next Post

உயர்ந்தது சிலிண்டர் விலை: 10 மாதங்களில் சிலிண்டர் விலை எவ்வளவு உயர்ந்துள்ளது? | LPG Cylinder Price Hike October 2026: Chennai Commercial 19kg Gas Jumps ₹66.50 to ₹2,983 Amid Iran War Supply Crisis

Next Post
உயர்ந்தது சிலிண்டர் விலை: 10 மாதங்களில் சிலிண்டர் விலை எவ்வளவு உயர்ந்துள்ளது? | LPG Cylinder Price Hike October 2026: Chennai Commercial 19kg Gas Jumps ₹66.50 to ₹2,983 Amid Iran War Supply Crisis

உயர்ந்தது சிலிண்டர் விலை: 10 மாதங்களில் சிலிண்டர் விலை எவ்வளவு உயர்ந்துள்ளது? | LPG Cylinder Price Hike October 2026: Chennai Commercial 19kg Gas Jumps ₹66.50 to ₹2,983 Amid Iran War Supply Crisis

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin