• Login
Friday, October 2, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

ரேஷன் அட்டைதாரர்களுக்கு விஜய் அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு.. அரிசி கார்டு வைத்திருப்போர் கவனம்..! | Tamil Nadu Govt Assures Ration Cardholders: No Denial of Essential Supplies Despite Central e-KYC Deadline

GenevaTimes by GenevaTimes
October 2, 2026
in வணிகம்
Reading Time: 1 min read
0
ரேஷன் அட்டைதாரர்களுக்கு விஜய் அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு.. அரிசி கார்டு வைத்திருப்போர் கவனம்..! | Tamil Nadu Govt Assures Ration Cardholders: No Denial of Essential Supplies Despite Central e-KYC Deadline
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


ரேஷன் அட்டைதாரர்களுக்கு விஜய் அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு.. அரிசி கார்டு வைத்திருப்போர் கவனம்..!

தமிழ்நாடு உள்பட இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலும் கோடிக்கணக்கான மக்களின் முக்கிய உணவு ஆதாரமாக இருப்பது ரேஷன் கடைகளில் கிடைக்கும் அரிசி, பருப்பு ஆகியவை தான். மானிய விலையிலும் , இலவசமாகவும் ரேஷனில் மாதம் தோறும் உணவு பொருட்கள் விநியோகம் செய்யப்படுகின்றன.

மத்திய அரசினை பொறுத்தவரை போலி ரேஷன் கார்டுகளை நீக்கும் பணியினை மிக தீவிரமாக மேற்கொண்டுள்ளது. இதனால் தான் ரேஷன் அட்டைகளுக்கு கேஒய்சி கட்டாயமாக்கப்பட்டது. இதற்காகவே தமிழ்நாட்டிலும் கூட ஒவ்வொரு வாரமும் ரேஷன் கேஒய்சி முகாம்கள் நடத்தப்பட்டன. இதன்படி ரேஷன் அட்டையில் இடம்பெற்றுள்ள அனைத்து நபர்களும் தங்களின் கைவிரல் ரேகையை கட்டாயம் பதிவு செய்ய அறிவுறுத்தப்பட்டனர்.

ரேஷன் அட்டைதாரர்களுக்கு விஜய் அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு.. அரிசி கார்டு வைத்திருப்போர் கவனம்..!

இதற்கிடையே தொடர்ந்து 6 மாதங்களாக பயன்படுத்தப்படாமல் இருக்கும் ரேஷன் அட்டைகள் , கேஒய்சி பதிவு செய்யாத ரேஷன் அட்டைகளுக்கு இந்த மாதம் முதல் ரேஷனில் பொருட்கள் கிடைக்காது , ரத்து செய்யப்படும் என மத்திய அரசு தரப்பில் அறிவிக்கப்பட்டது. இதனால் பலரும் தங்களின் ரேஷன் கார்டுகள் ரத்தமாகுமோ என அச்சமடைந்தனர். இந்த சூழலில் ரேஷன் கடைகளுக்கு தமிழ்நாடு அரசு முக்கியமான ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

எந்தவொரு ரேஷன் அட்டைதாரருக்கும் அத்தியாவசிய பொருட்கள் வழங்குவதை நிறுத்தவோ / தடை செய்யவோ கூடாது என அனைத்து வட்ட வழங்கல் அலுவலர்கள் மற்றும் உதவி ஆணையர்களுக்கு தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக, தமிழக அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பில், மத்திய அரசு, 6 மாதங்களுக்கு மேல் நியாய விலைக்கடைகளில் பொருட்கள் வாங்காத முன்னுரிமை (PHH) குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் அந்தியோதயா அன்ன யோஜனா (AAY) குடும்ப அட்டைதாரர்களுக்கு பொருட்கள் வழங்குவதை அக்டோபர் 1, 2026 முதல் தற்காலிகமாக தடை செய்து உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாட்டில் முன்னுரிமை குடும்ப அட்டை மற்றும் அந்தியோதயா அன்ன யோஜனா குடும்ப அட்டைதாரர்களின் கைவிரல் ரேகை பதிவு சதவீதம் 96.69 ஆக உள்ளது என குறிப்பிட்டுள்ளது.

இதற்காக தமிழ்நாடு கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை சார்பில் கைவிரல் ரேகை சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டன என கூறியுள்ளது. இந்த முகாம்கள் மூலமாக, ஜூலை மாதத்தில் 95.44 சதவீதமாக இருந்த கைவிரல் ரேகை சரிபார்ப்பு, செப்டம்பர் மாதம் 30-ஆம் தேதி அன்று 96.69 சதவீதமாக உயர்ந்துள்ளது. இந்த சிறப்பு முகாம்களின் மூலமாக 4,49,663 முன்னுரிமை (PHH) மற்றும் AAY திட்டப் பயனாளிகள் பயன்பெற்றுள்ளனர் என தெரிவித்துள்ளது.

இதுவரை கைவிரல் ரேகை பதிவு செய்யாமல் கேஒய்சி செய்யாத ரேஷன் அட்டைதாரர்கள், நியாய விலைக்கடைகளுக்கு பொருட்கள் வாங்க செல்லும்போது, கைவிரல் ரேகை / கண்கருவிழி சரிபார்ப்பின் மூலம் தங்களது கேஒய்சி தகவல்களை விரைந்து பதிவேற்றம் செய்யுமாறு கேட்டு கொண்டுள்ளது. மேலும் இதனை ஒரு காரணமாக சுட்டிக்காட்டி பொருட்கள் வழங்காமல் இருக்க கூடாது என கடைகளுக்கு அறிவுறுத்தியுள்ளது.

இருந்தாலும் நீண்ட காலத்திற்கு இப்படி கேஒய்சி செய்யாமலே ரேஷனில் பொருட்கள் வாங்க முடியாது என்பதை மக்கள் தெரிந்து கொள்ள வேண்டும். நீங்கள் பொருட்கள் வாங்கும் ரேஷன் கடைக்கு சென்றாலே கேஒய்சி முடிக்க வேண்டுமா இல்லையா என்ற தகவலை தந்துவிடுவார்கள். எனவே இயன்றவரை கேஒய்சி பணியை முன்கூட்டியே முடிப்பது நல்லது.

Share This Article

English summary

Tamil Nadu Govt Assures Ration Cardholders: No Denial of Essential Supplies Despite Central e-KYC Deadline

ரேஷன் அட்டைதாரர்களுக்கு விஜய் அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!! / The Tamil Nadu government has issued a crucial clarification assuring ration cardholders that essential commodities will not be denied even if their cards lack e-KYC or have remained inactive for over six months.

Story first published: Thursday, October 1, 2026, 9:25 [IST]

Other articles published on Oct 1, 2026

Read More

Previous Post

மதஅடிப்படைவாதி.. பெண்களிடம் கைகூட கொடுக்கமாட்டார்.. ஓமன் துணை பைலட்டின் ஷாக் பின்னணி | Dubai – Tel Aviv flight: Who is oman pilot? he is religious extermeist and avoided women, details here

Next Post

அகதிகள் திருப்பி அனுப்பப்படுவதால் சர்வதேச சட்டம் மீறப்படும் அபாயம் உள்ளதாக​ சுஹாகம் எச்சரிக்கை – Malaysiakini

Next Post

அகதிகள் திருப்பி அனுப்பப்படுவதால் சர்வதேச சட்டம் மீறப்படும் அபாயம் உள்ளதாக​ சுஹாகம் எச்சரிக்கை – Malaysiakini

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin