• Login
Thursday, October 1, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு ஷாக் தகவல்.. கண்ணுக்கு தெரியாமல் நடக்கும் பாதிப்பு..!! | Hidden Bloodbath in Stock Portfolios: Why Nifty 500 Midcap & Smallcap Fall Hits Mutual Fund Investors

GenevaTimes by GenevaTimes
October 1, 2026
in வணிகம்
Reading Time: 1 min read
0
பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு ஷாக் தகவல்.. கண்ணுக்கு தெரியாமல் நடக்கும் பாதிப்பு..!! | Hidden Bloodbath in Stock Portfolios: Why Nifty 500 Midcap & Smallcap Fall Hits Mutual Fund Investors
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு ஷாக் தகவல்.. கண்ணுக்கு தெரியாமல் நடக்கும் பாதிப்பு..!!

இந்தியப் பங்குச்சந்தை நாளுக்கு நாள் பெரும் பாதிப்பை எதிர்கொண்டு வரும் வேளையில் இன்றைய வர்த்தகத்தில் மும்பை பங்குச்சந்தையின் சந்தை மதிப்பு வெறும் ஒரு மணிநேர வர்த்தகத்தில் சுமார் 9.5 லட்சம் கோடி ரூபாய் அளவுக்குச் சரிந்து பெரும் பாதிப்பை எதிர்கொண்டது. வர்த்தக முடிவில் கணிசமாக மீண்டு இருந்தாலும் சென்செக்ஸ் 500 புள்ளிகளுக்கு மேல் சரிந்துள்ளது.

பெரும்பாலான முதலீட்டாளர்கள் முதலீடு செய்யும் போது சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி குறியீட்டின் மேலோட்டமான பர்பாமென்ஸ்-ஐ மட்டுமே பார்க்கின்றனர். ஆனால் நாட்டில் பெரும்பாலான முதலீடுகள் மியூச்சுவல் பண்ட் வாயிலாக வரும் வேளையில் மக்கள் செய்யப்படும் முதலீடு பல நிறுவனங்கள், பல குறியீடுகள் கீழ் பரந்து விரிந்து முதலீடு செய்யப்படுகிறது.

 பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு ஷாக் தகவல்.. கண்ணுக்கு தெரியாமல் நடக்கும் பாதிப்பு..!!

உதாரணமாக நிஃப்டி 500 குறியீடு இந்த ஆண்டு கிட்டத்தட்ட 9 சதவீதம் சரிந்துள்ளது. ஆனால் இக்குறியீட்டில் உள்ள டாப் 500 நிறுவனங்களில் 50 சதவீதத்திற்கும் அதிகமான நிறுவனங்களின் பங்கு மதிப்பு அதன் 52 வார உச்ச விலையில் இருந்து 30 சதவீதம் குறைந்துள்ளது எத்தனை பேருக்குத் தெரியும்.

இது ஒவ்வொரு முதலீட்டாளரின் போர்ட்போலியோவை சத்தமில்லாமல் பாதித்து வருகிறது.

தற்போதைய சந்தை நிலவரத்தின் படி நிஃப்டி 500 குறியீட்டில் இருக்கும் டாப் 500 நிறுவனங்கள் பட்டியலில் 252 நிறுவனங்களின் பங்குகள் அதன் உச்ச விலையில் இருந்து குறைந்தபட்சம் 30 சதவீதம் சரிந்துள்ளது, இன்னும் தீவிரமாக ஆய்வு செய்தால் 167 நிறுவனங்கள் 40 சதவீதத்திற்கும் அதிகமான சரிவைப் பதிவு செய்துள்ளது.

மேலும் நிஃப்டி 500 குறியீட்டில் கிட்டத்தட்ட 102 நிறுவனங்கள் 50 சதவீதம் வரையில் சரிந்துள்ளது, இப்படி 89.8 சதவீத நிறுவனங்கள் 10 சதவீதத்திற்கும் அதிகமாகச் சரிந்துள்ளது.

இது மட்டும் அல்லாமல் இந்த சரிவைத் தீவிரமாக ஆய்வு செய்யும் போது, ஒரு குறிப்பிட்ட துறையோ அல்லது நிறுவனங்களோ அல்லாமல் ஒட்டுமொத்த சந்தையும் சரிவு பாதைக்குச் செல்கிறது உறுதியாகியுள்ளது. தற்போதை சந்தையின் பலவீனத்தை உணர்த்தும் வகையில் இன்றைய வர்த்தகத்தில் சென்செக்ஸ் தனது சப்போர்ட் அளவான 71800 புள்ளிகளுக்குக் கீழும், நிஃப்டி 22500 புள்ளிகளுக்குக் கீழும் வந்துள்ளது. இதனால் அதிகப்படியான முதலீட்டாளர்கள் தங்களுடைய முதலீட்டை வெளியேற்றுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இத்தகைய சரிவிலும் இந்தியா விக்ஸ் குறியீடு நிலையாக இருப்பதைப் பார்க்கும் போது இந்த சரிவில் இருந்து மீண்டு வருவதற்கான வாய்ப்புகள் உள்ளதைக் காட்டுகிறது.

ஆனால் இந்தியச் சந்தையை தற்போது பாதிப்பது சர்வதேசச் சந்தையும், பொருளாதார, அரசியல் சூழ்நிலைகள் என்பதால் இந்த சரிவை உள்நாட்டுக் காரணிகளால் கட்டுப்படுத்த முடியாது.

மேலும் நிஃப்டி 500 குறியீட்டின் சரிவுக்கு முக்கிய காரணம் மிட் கேப், ஸ்மால் கேப் நிறுவனங்கள் தான் என்பத நிஃப்டி 50 குறியீட்டின் பர்பாமென்ஸ்-ஐ பார்க்கும் போது தெரிகிறது.

இதனால் பங்குச்சந்தையில் முதலீடு செய்வோர் இனி வரும் காலகட்டத்தில் எந்தொரு முதலீட்டையும் தீவிரமாக ஆய்வு செய்யாமல் முதலீடு செய்யாதீர்கள், அதேபோல் ஏற்கனவே செய்துள்ள முதலீட்டையும் ஆய்வு செய்து மறுசீரமைப்பு செய்வது அவசியமாகிறது.

Share This Article

English summary

Hidden Bloodbath in Stock Portfolios: Why Nifty 500 Midcap & Smallcap Fall Hits Mutual Fund Investors

Hidden Bloodbath in Stock Portfolios: Why Nifty 500 Midcap & Smallcap Fall Hits Mutual Fund Investors — பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு ஷாக் தகவல்.. கண்ணுக்கு தெரியாமல் நடக்கும் பாதிப்பு..!!

Story first published: Thursday, October 1, 2026, 19:52 [IST]

Other articles published on Oct 1, 2026

Read More

Previous Post

இஸ்ரேல் விமானத்தில் ஓமன் பைலட் எப்படி? விமான கடத்தல் பின்னணியில் பகீர்! அப்பட்டமான விதிமீறல்? | How did Omani pilot in Dubai – Tel Aviv flight? Israel says that this is breach of the agreement

Next Post

ஏ.ஐ. நிறுவனத்துக்கு எதிராக சட்ட நடவடிக்கை… ரூ.7,000 கோடி இழப்பீடு கேட்கும் ‘லெஜண்ட்’ பட நாயகி | Makkal Osai

Next Post
ஏ.ஐ. நிறுவனத்துக்கு எதிராக சட்ட நடவடிக்கை… ரூ.7,000 கோடி இழப்பீடு கேட்கும் ‘லெஜண்ட்’ பட நாயகி | Makkal Osai

ஏ.ஐ. நிறுவனத்துக்கு எதிராக சட்ட நடவடிக்கை... ரூ.7,000 கோடி இழப்பீடு கேட்கும் ‘லெஜண்ட்’ பட நாயகி | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin