• Login
Thursday, October 1, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

நல்லூரில் அகற்றப்பட்ட திலீபனின் சிலை : யாழ்.மாவட்ட சர்வமத பேரவை கண்டனம்

GenevaTimes by GenevaTimes
October 1, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
நல்லூரில் அகற்றப்பட்ட திலீபனின் சிலை : யாழ்.மாவட்ட சர்வமத பேரவை கண்டனம்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


ஆன்மிக அடிப்படையில் நினைவேந்தலை தடுப்பது, குழப்புவது, எடுப்பார்
கைப்பிள்ளையாக்க முனைவது உயிரிகளின் மாண்புக்கு எதிரானதாகும் என யாழ்.மாவட்ட
சர்வமத பேரவை தெரிவித்துள்ளது.

அகிம்சைவாதியான திலீபனுக்கு அவமானம் ஏற்படுத்தும் அனைத்து நடவடிக்கைகளையும் அனைத்து தரப்பும் கைவிட்டு, சாதாரண மக்கள் நினைவேந்தல் நடைபெற உரிய ஒத்துழைப்பை வழங்க வேண்டும் எனவும் அந்த அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.


நல்லூரில் உள்ள தியாக தீபத்தின் நினைவாலயத்தில் இருந்து தியாக தீபத்தின் சிலை
அகற்றப்பட்டமை தொடர்பில், சர்வமத பேரவை வெளியிட்டுள்ள ஊடக
அறிக்கையிலையே அவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

 

அகிம்சை ரீதியான முன்னெடுப்புகள்



குறித்த அறிக்கையில்,

பேராசை, சர்வாதிகாரம், இனவாதம், மதவாதம் போன்றவை களையப்பட அகிம்சை ரீதியான
முன்னெடுப்புகள் யாழ்ப்பாணத்தில் நடைபெற யாழ் மாவட்ட சர்வ மதப் பேரவை
விரும்புகின்றது, உழைக்கின்றது.

நல்லூரில் அகற்றப்பட்ட திலீபனின் சிலை : யாழ்.மாவட்ட சர்வமத பேரவை கண்டனம் | Thileepan Statue Remove From Nallur Jaffna

இந்த அடிப்படையில் வன்முறையை கடந்து வாழ்வை உறுதி செய்ய தனது உயிரை
காணிக்கையாக்கிய திலீபன் அவர்களை நாம் மதிப்புடன் குறிப்பிடுகிறோம். அகிம்சைக்காக ஆகுதியான இவரை அவமதிப்புக்கு உள்ளாக்கும் அனைத்து சக்திகளையும்
வலிமையாக கண்டிக்கிறோம்.



வரையறைகளை புரிந்து, கட்டமைப்புகளை அறிந்து, பன்மைத்துவத்தை மதித்து,
அனைவரும் அனைத்து உரிமைகளுடனும் அவரவரது வரலாற்று அடையாளத்துடனும் வாழ தடுப்பது
மாண்பை நிராகரிப்பதாகும். அது ஆரோக்கியமானதல்ல.

அத்துடன் மாண்பு, சமத்துவம் ஒற்றுமை போன்றவற்றை வலியுறுத்தும் மக்கள் அரசியலை
இருட்டடிப்பு செய்யும் கட்சி அரசியலை அதன் வரையறைக்குள் வைத்துக்கொள்ளவேண்டும்
என அனைத்து கட்சிகளுக்கும் ஒரு வேண்டுகோளை விடுக்கிறோம்.

நினைவேந்தலை தடுப்பது 


சமய நோக்கைக் கடந்து, நினைவேந்தல் ஒரு மனித உரிமை என்பது இற்றைப்படுத்தப்பட்ட
உண்மை. நினைவுகூரும் உரிமை என்பது, கலாசார வாழ்வில் பங்கேற்பதற்கான உரிமையை
அனைவருக்கும் உத்தரவாதம் அளிக்கும் ‘பொருளாதார, சமூக மற்றும் கலாசார
உரிமைகளுக்கான சர்வதேச உடன்படிக்கையின் 15ஆவது பிரிவில் வேரூன்றியுள்ளது.

நல்லூரில் அகற்றப்பட்ட திலீபனின் சிலை : யாழ்.மாவட்ட சர்வமத பேரவை கண்டனம் | Thileepan Statue Remove From Nallur Jaffna


ஆன்மிக அடிப்படையில் நினைவேந்தலை தடுப்பது, குழப்புவது, எடுப்பார்
கைப்பிள்ளையாக்க முனைவது உயிரிகளின் மாண்புக்கு எதிரானதாகும்.

வாழ்வை உறுதி செய்ய ஒரு விடுதலைப்போராட்டம் அகிம்சை ரீதியாக
முன்னெடுக்கப்பட்டது எமது யாழ் மண்ணின் வரலாறு.

அந்த வரலாற்றின் ஒரு முக்கிய
ஆளுமையான அகிம்சைவாதியான திலீபன் அவர்களுக்கு அவமானம் ஏற்படுத்தும் அனைத்து
நடவடிக்கைகளையும் அனைத்து தரப்பும் கைவிட்டு, சாதாரண மக்கள் நினைவேந்தல்
நடைபெற உரிய ஒத்துழைப்பை அனைவரும் ஆரோக்கியமான முறையில் வழங்க அனைவரிடமும்
வேண்டுகிறோம்“ என்றுள்ளது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…!

Read More

Previous Post

ஜோகூர் பாருவில் மீண்டும் வெள்ளப் பெருக்கு ஏற்படாமல் இருக்க அதிரடி நடவடிக்கை: கூடுதல் RM30 மில்லியன் நிதி ஒதுக்கீடு! | Makkal Osai

Next Post

“ஏ.சி. பேருந்துகளிலும் பெண்களுக்கு கட்டணமில்லா பயணம்…” – அதிரடி அறிவிப்பை வெளியிட்ட முதல்வர் சந்திரபாபு நாயுடு

Next Post
“ஏ.சி. பேருந்துகளிலும் பெண்களுக்கு கட்டணமில்லா பயணம்…” – அதிரடி அறிவிப்பை வெளியிட்ட முதல்வர் சந்திரபாபு நாயுடு

“ஏ.சி. பேருந்துகளிலும் பெண்களுக்கு கட்டணமில்லா பயணம்…” – அதிரடி அறிவிப்பை வெளியிட்ட முதல்வர் சந்திரபாபு நாயுடு

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin