• Login
Thursday, October 1, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

“இது கிரிக்கெட் அல்ல, வெறும் பேட்டிங் மட்டுமே!” – இந்தியாவின் சாதனை சேஸுக்குப் பிறகு கம்பீர் விமர்சனம்! | கிரிக்கெட் செய்திகள்

GenevaTimes by GenevaTimes
October 1, 2026
in விளையாட்டு
Reading Time: 1 min read
0
“இது கிரிக்கெட் அல்ல, வெறும் பேட்டிங் மட்டுமே!” – இந்தியாவின் சாதனை சேஸுக்குப் பிறகு கம்பீர் விமர்சனம்! | கிரிக்கெட் செய்திகள்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் வெற்றிக்குப் பிறகு அளித்த பேட்டியில் கம்பீர் கூறியதாவது-

நான் உண்மையைச் சொல்ல வேண்டுமென்றால், பேட்டிற்கும் பந்துக்கும் இடையே ஒரு நியாயமான போட்டி இருக்க வேண்டும். இதுபோன்ற ஆடுகளங்களில் விளையாடுவது கிரிக்கெட் கிடையாது, இது வெறும் பேட்டிங் மட்டுமே.

400 ரன்களைக் கொடுத்துவிட்டு மீண்டும் 400 ரன்களை சேஸ் செய்வது ரசிகர்களுக்கும், சாதனைகளுக்கும், ஒளிபரப்பு நிறுவனங்களுக்கும் மிகச் சிறந்ததாகத் தோன்றலாம். ஆனால் ஒரு உண்மையான கிரிக்கெட் ரசிகனாகவும், பயிற்சியாளராகவும் எனக்கு பந்துவீச்சாளர்கள் மீது பரிதாபமே ஏற்படுகிறது.

இளம் பந்துவீச்சாளர்களுக்குச் சிறிதும் சாதகமில்லாத இதுபோன்ற விக்கெட்டுகள் அவர்களுக்கு அநீதி இழைப்பதாகும். பந்துவீச்சாளர்களும் தங்களின் திறமையைக் காட்ட ஆடுகளத்தில் ஏதேனும் ஒரு வகையில் வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என்றார்.

இதுபோன்ற கடினமான சூழ்நிலைகளில் பந்துவீச்சாளர்களைப் பயிற்சியாளராக எவ்வாறு கையாள்வீர்கள் என்ற கேள்விக்கு பதிலளித்த கம்பீர், பந்துவீச்சாளர்கள் மீதான விமர்சனத்தைக் குறைத்து, அவர்களுக்கு சிறிது விலக்கு அளிக்க வேண்டும். பெரும்பாலும் அவர்களுடைய பந்துவீச்சு புள்ளிவிவரங்கள் மோசமாகக் காட்டினாலும், அவர்கள் மோசமாகப் பந்துவீசியிருக்க மாட்டார்கள். ஐந்து ஃபீல்டர்கள் உள்வட்டத்திற்குள் இருப்பது, இரண்டு புதிய பந்துகள் பயன்பாடு மற்றும் நவீன அதிரடி பேட்டிங் ஆகியவற்றைக் கடந்து பந்துவீச்சாளர்களுக்குப் பெரிய வாய்ப்புகள் எதுவும் இல்லை.

எனவே, ஒரு பயிற்சியாளராகவும் உதவிப் பணியாளராகவும் அவர்கள் தங்களது திட்டங்களைச் சரியாகச் செயல்படுத்தினார்களா என்பதை மட்டுமே நாங்கள் பார்ப்போம். அறிமுக வீரராகக் களம் கண்ட அஃகிப் நபியைப் போன்ற இளம் வீரர்களுக்கு ஆதரவளிப்பது எங்களது கடமையாகும் என்று கூறினார்.

2027 ஒருநாள் உலகக்கோப்பை தொடருக்கு இன்னும் ஓராண்டே எஞ்சியுள்ள நிலையில், இந்திய அணிக்கு போதிய காலஅவகாசம் இல்லை என்பதையும் கம்பீர் சுட்டிக்காட்டினார். “நமக்கு ஓராண்டு இருப்பது போல் தோன்றினாலும், அதில் மூன்று மாதங்கள் ஐபிஎல் தொடருக்கும், மூன்று மாதங்கள் ஆஸ்திரேலியத் தொடருக்கும் சென்றுவிடும். இந்தத் தொடருக்குப் பிறகு நம்மிடம் வெறும் 20 ஒருநாள் போட்டிகளே உள்ளன. அதில் இலங்கை மற்றும் ஜிம்பாப்வே தொடர்களும் அடங்கும்.

எனவே, ஜிம்பாப்வே தொடர் வரை இளம் வீரர்களான அஃகிப் நபி மற்றும் குர்னூர் பிரார் போன்றவர்களுக்குக் கடினமான சூழ்நிலைகளில் வாய்ப்பளித்து, அழுத்தத்தை எதிர்கொள்ளும் அவர்களின் திறனைச் சோதித்துப் பார்ப்பதே எங்களது முதன்மைத் திட்டமாகும். அப்போதுதான் உலகக்கோப்பை போன்ற பெரிய தொடர்களுக்கு வலிமையான அணியை உருவாக்க முடியும் என்று கம்பீர் தெரிவித்தார்.

Read More

Previous Post

பாஜக முதல்வர் வராரு.. ஆம்புலன்ஸை தடுத்து நிறுத்திய அசாம் போலீஸ்.. 4 பேர் சஸ்பெண்ட் | 4 police personnel suspended after Ambulance stops to allow CM Himanta Biswa Sarma convoy,

Next Post

வாகன உற்பத்தி துறையிலும் வேலைக்கு உத்தரவாதமில்லை..!! திடீரென ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் BMW..!! | BMW to Cut 20% of Management Roles by 2027 as AI Restructuring Accelerates

Next Post
வாகன உற்பத்தி துறையிலும் வேலைக்கு உத்தரவாதமில்லை..!! திடீரென ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் BMW..!! | BMW to Cut 20% of Management Roles by 2027 as AI Restructuring Accelerates

வாகன உற்பத்தி துறையிலும் வேலைக்கு உத்தரவாதமில்லை..!! திடீரென ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் BMW..!! | BMW to Cut 20% of Management Roles by 2027 as AI Restructuring Accelerates

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin