• Login
Thursday, October 1, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home மலேசியா

பினாங்கில் போதைப் பொருள் தடுப்புப் பிரிவினரின் அதிரடி வேட்டை: RM3.44 மில்லியன் மதிப்புள்ள போதைப் பொருள்கள் பறிமுதல்; கணவன்-மனைவி உட்பட 5 பேர் கைது! | Makkal Osai

GenevaTimes by GenevaTimes
October 1, 2026
in மலேசியா
Reading Time: 2 mins read
0
பினாங்கில் போதைப் பொருள் தடுப்புப் பிரிவினரின் அதிரடி வேட்டை: RM3.44 மில்லியன் மதிப்புள்ள போதைப் பொருள்கள் பறிமுதல்; கணவன்-மனைவி உட்பட 5 பேர் கைது! | Makkal Osai
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


கோலாலம்பூர்:

பினாங்கு மாநிலத்தில் போதைப் பொருள் குற்றப் புலனாய்வுத் துறையினர் (NCID) மேற்கொண்ட மூன்று வெவ்வேறு அதிரடி நடவடிக்கைகளில், RM3.44 மில்லியன் மதிப்புள்ள பலவகை போதைப் பொருள்களைப் பறிமுதல் செய்ததோடு, கணவன்-மனைவி உட்பட 5 பேரைக் கைது செய்துள்ளனர்.

கடந்த செப்டம்பர் 21 முதல் செப்டம்பர் 27 வரை நடத்தப்பட்ட இந்தச் சோதனைகளில் 8.83 கிலோ கிராம் ஹெராயின், 15.06 கிலோ கிராம் எக்ஸ்டசி (MDMA) பவுடர், 5 லிட்டர் திரவ வடிவிலான எக்ஸ்டசி, 182 எக்ஸ்டசி மாத்திரைகள் மற்றும் கெட்டமைன் போன்றவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகப் பினாங்கு மாநிலக் காவல் துறைத் தலைவர் டத்தோ டெனிஸ் லிம் குவாங் கெங் தெரிவித்தார்.

“கைது செய்யப்பட்ட ஐந்து நபர்களும் கடந்த ஜூலை மாதம் முதல் பினாங்கு மாநிலத்தில் போதைப் பொருள் கடத்தலில் தீவிரமாக ஈடுபட்டு வந்தது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இவர்கள் தனித்தனி குழுக்களாகச் செயல்பட்டு வந்துள்ளனர். மேலும், சோதனைகளின் போது கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட RM58,000 மதிப்பிலான 6 வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக ” பினாங்கு மாநிலக் காவல் துறைத் தலைவர், டத்தோ டெனிஸ் லிம் குவாங் கெங் கூறினார்

முதல் சோதனையில், ஜாலான் மஸ்ஜிட் நெகரியில் 47 வயது நபர் கைது செய்யப்பட்டு, அவர் காரில் மறைத்து வைத்திருந்த RM443,518 மதிப்பிலான ஹெராயின் மற்றும் போதைப் பொருள் தயாரிப்பு உபகரணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

இரண்டாவது சோதனையில், ஜாலான் துன் டாக்டர் அவாங் மற்றும் சுங்கை நிபோங் கெச்சில் பகுதிகளில் கேளிக்கை விடுதிகளில் பணிபுரியும் தம்பதி உட்பட மூவர் கைது செய்யப்பட்டு, அவர்களிடமிருந்து RM1.2 மில்லியன் மதிப்புள்ள திரவ மற்றும் பவுடர் வடிவ எக்ஸ்டசி போதைப் பொருள்கள் கைப்பற்றப்பட்டன.

மூன்றாவது நடவடிக்கையாக, புக்கிட் மெர்தாஜாம் பகுதியில் 45 வயது நபரின் காரில் இருந்து RM1.8 மில்லியன் மதிப்பிலான எக்ஸ்டசி மற்றும் கெட்டமைன் போதைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன. கைதான ஐந்து சந்தேகநபர்களும் 7 நாட்கள் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டு, 1952-ஆம் ஆண்டின் அபாயகரமான போதைப்பொருள்கள் சட்டத்தின் பிரிவு 39B-இன் கீழ் தீவிர விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றனர்.



Read More

Previous Post

வங்கி ஊழியர்களுக்கு அனைத்து சனிக்கிழமையும் விடுமுறையா? – மத்திய அரசு விளக்கம் | Fact Check | வணிகச் செய்திகள்

Next Post

டுபாயில் இருந்து இஸ்ரேல் பயணித்த ஃப்ளைடுபாய் பயணிகள் விமானம் சவூதியில் அவசர தரையிறக்கம்! என்ன நடந்தது? – Sri Lanka Tamil News

Next Post
டுபாயில் இருந்து இஸ்ரேல் பயணித்த ஃப்ளைடுபாய் பயணிகள் விமானம் சவூதியில் அவசர தரையிறக்கம்! என்ன நடந்தது? – Sri Lanka Tamil News

டுபாயில் இருந்து இஸ்ரேல் பயணித்த ஃப்ளைடுபாய் பயணிகள் விமானம் சவூதியில் அவசர தரையிறக்கம்! என்ன நடந்தது? - Sri Lanka Tamil News

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin