அதிக விலைக் கொண்ட 13 அவசிய மருந்துகளுக்கு விலை நிர்ணயம் மேற்கொள்ளப்பட்டதன் மூலம் அரசாங்கத்திற்கு சுமார் 5.7 பில்லியன் ரூபா சேமிக்கப்பட்டுள்ளதாகத் தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தும் அதிகாரசபை (NMRA) தெரிவித்துள்ளது.
கொழும்பில் இன்று (01) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தும் அதிகாரசபையின் தலைவர் வைத்திய நிபுணர் ஆனந்த விஜயவிக்ரம இந்தத் தகவலை வெளியிட்டார்.
அதிக விலைக் கொண்ட 13 முக்கிய மருந்துகளுக்கு அறிமுகப்படுத்தப்பட்ட விலை ஒழுங்குமுறை அடிப்படையிலேயே இந்த மதிப்பீடு கணக்கிடப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

