• Login
Thursday, October 1, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

ஒரே ஆண்டில் 18 போர்க்கப்பல்கள்! கடல்சார் பாதுகாப்பில் எதிரி நாடுகளை மிரள வைக்கும் இந்தியா | India News (இந்தியா செய்திகள்)

GenevaTimes by GenevaTimes
September 30, 2026
in இந்தியா
Reading Time: 1 min read
0
ஒரே ஆண்டில் 18 போர்க்கப்பல்கள்! கடல்சார் பாதுகாப்பில் எதிரி நாடுகளை மிரள வைக்கும் இந்தியா | India News (இந்தியா செய்திகள்)
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:Sep 30, 2026 3:52 PM IST

ஒரே ஆண்டில் 18 போர்க்கப்பல்கள் சேர்க்கப்படுவது இந்தியக் கடற்படையின் வரலாற்றிலேயே மிகப்பெரிய படைச் சேர்க்கையாகும்.

ராஜ்நாத் சிங்
ராஜ்நாத் சிங்

இந்தியக் கடற்படை தனது தற்காப்பு மற்றும் தாக்குதல் திறனை அதிகரிக்கும் வகையில், நாட்டின் வரலாற்றுப் பக்கங்களில் இதுவரை இல்லாத அளவிலான மிகப்பெரிய படைப் பெருக்கத்திற்குத் தயாராகி வருகிறது. டெல்லியில் உள்ள நௌசேனா பவனில் நடைபெற்ற கடற்படைத் தளபதிகள் மாநாட்டில் உரையாற்றிய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், 2026-ஆம் ஆண்டில் மட்டும் 18 புதிய போர்க்கப்பல்கள் மற்றும் நீர்மூழ்கிக் கப்பல்கள் இந்தியக் கடற்படையில் சேர்க்கப்படவுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

ஒரே ஆண்டில் 18 போர்க்கப்பல்கள் சேர்க்கப்படுவது இந்தியக் கடற்படையின் வரலாற்றிலேயே மிகப்பெரிய படைச் சேர்க்கையாகும். ‘மேக் இன் இந்தியா’ மற்றும் உள்நாட்டு கப்பல் கட்டும் தொழில்முறை வளர்ச்சிக்கு இது மிகப்பெரிய சான்றாக அமைந்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.

இந்தியாவின் முதல் உள்நாட்டு விமானம் தாங்கி போர்க்கப்பலான ‘ஐ.என்.எஸ் விக்ராந்த்’ (INS Vikrant) செப்டம்பர் மாதத்திலும், வழிகாட்டப்பட்ட ஏவுகணைகளை வீசும் ‘ஐ.என்.எஸ் மர்மகோவா’ (INS Mormugao) டிசம்பர் மாதத்திலும் கடற்படையில் அதிகாரப்பூர்வமாக இணைக்கப்பட்டன.

கல்வாரி வகை நீர்மூழ்கிக் கப்பலான ‘ஐ.என்.எஸ் வாகிர்’ ஜனவரியிலும், ‘ஐ.என்.எஸ் இம்பால்’ டிசம்பரிலும் சேர்க்கப்பட்டன. மேலும் மாலத்தீவுக்கு வழங்கப்பட்டு திரும்பப் பெறப்பட்ட ‘ஐ.என்.எஸ் தர்முக்லி’ வேகப்படைப் படகு சீரமைக்கப்பட்டு மீண்டும் கடற்படையில் சேர்க்கப்பட்டது.

நாட்டின் இரண்டாவது அரிகந்த் வகை நீர்மூழ்கிக் கப்பலான ‘ஐ.என்.எஸ் அரிகாத்’, சர்வே கப்பல்களான ‘சந்தாயக்’, ‘நிர்தேசக்’ மற்றும் ரஷ்யாவில் கட்டப்பட்ட ‘ஐ.என்.எஸ் துஷில்’ ஆகியவை படையில் இணைந்தன.

போர்க்கப்பல் சேர்க்கையின் வேகம் அதிகரித்து, ஒரே ஆண்டில் 12 கப்பல்கள் மற்றும் நீர்மூழ்கிகள் இணைக்கப்பட்டன. இதில் ‘ஐ.என்.எஸ் சூராத்’, ‘ஐ.என்.எஸ் நீலகிரி’ மற்றும் ‘ஐ.என்.எஸ் வாக்சீர்’ நீர்மூழ்கிக் கப்பல் ஆகியவை ஒரே நாளில் (ஜனவரி 15) சேர்க்கப்பட்டு வரலாற்றுச் சாதனை படைக்கப்பட்டது.

2025-இல் 12 போர்க்கப்பல்கள் சேர்க்கப்பட்ட நிலையில், 2026-இல் அந்த எண்ணிக்கை 18 ஆக உயரவுள்ளது. இந்தத் தொடர் நடவடிக்கைகள் மூலம் இந்தியப் பெருங்கடல் பகுதியில் இந்தியாவின் கடல்சார் பாதுகாப்பும், நாட்டின் உள்நாட்டுப் பாதுகாப்புத் தொழில் உற்பத்தித் திறனும் உலகளவில் புதிய உச்சத்தைத் தொட்டுள்ளன.

Read More

Previous Post

வேலையிலக்க போகும் ஆப்பிளின் முக்கிய பொறியியல் ஊழியர்கள்

Next Post

மெட்டா-வின் Muse-க்கு போட்டியாகக் களமிறக்கப்பட்ட DOTS.. ஒப்பன்ஏஐ நிறுவனத்தின் புது ஏஐ ஆயுதம்! | OpenAI Unveils ‘Dots’ AI Agents: How ‘Dots’ Always-On Workplace Agents Differ From Meta’s Personal Agent ‘Muse’

Next Post
மெட்டா-வின் Muse-க்கு போட்டியாகக் களமிறக்கப்பட்ட DOTS.. ஒப்பன்ஏஐ நிறுவனத்தின் புது ஏஐ ஆயுதம்! | OpenAI Unveils ‘Dots’ AI Agents: How ‘Dots’ Always-On Workplace Agents Differ From Meta’s Personal Agent ‘Muse’

மெட்டா-வின் Muse-க்கு போட்டியாகக் களமிறக்கப்பட்ட DOTS.. ஒப்பன்ஏஐ நிறுவனத்தின் புது ஏஐ ஆயுதம்! | OpenAI Unveils ‘Dots’ AI Agents: How ‘Dots’ Always-On Workplace Agents Differ From Meta’s Personal Agent ‘Muse’

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin