• Login
Wednesday, September 30, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

பிரேக்அப் செய்ததால் ஆத்திரம்.. ரிசார்ட்டில் இளம்பெண்ணுக்கு நடந்த கொடூரம்.. காதலன் வெறிச்செயல்! | India News (இந்தியா செய்திகள்)

GenevaTimes by GenevaTimes
September 30, 2026
in இந்தியா
Reading Time: 1 min read
0
பிரேக்அப் செய்ததால் ஆத்திரம்.. ரிசார்ட்டில் இளம்பெண்ணுக்கு நடந்த கொடூரம்.. காதலன் வெறிச்செயல்! | India News (இந்தியா செய்திகள்)
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:Sep 30, 2026 10:23 PM IST

கேரளாவில் ரிசார்ட் ஒன்றில் இளம்பெண் ஒருவர் கொடூரமாக கழுத்தறுத்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதி மக்களை அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது. காதலை பிரேக் அப் செய்ததால் ஏற்பட்ட ஆத்திரம் கொலையில் முடிந்தது எப்படி?.

தின்ஷா - ஜித்து
தின்ஷா – ஜித்து

கேரள மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டம் கோழஞ்சேரியில் உள்ள தனியார் ரிசார்ட் ஒன்றில் 20 வயதான தின்ஷா என்பவர் பணிபுரிந்து வந்தார். கொல்லம் மாவட்டத்தைச் சேர்ந்த இவர், அந்த ரிசார்ட்டில் வரவேற்பாளராக பணியாற்றி வந்துள்ளார்.  இந்நிலையில், செவ்வாய் கிழமை மதியம் அந்த ரிசார்ட்டுக்கு 28 வயதான ஜித்து என்பவர் ஆவேசமாக வந்திருக்கிறார். தின்ஷாவிடம் பேச வேண்டும் எனக் கூறி, அவரை ரிசார்ட்டுக்கு வெளியே அழைத்துச் சென்றிருக்கிறார்.

பின்னர் ரிசார்ட் வளாகத்தில் உள்ள ஒரு மரத்தடியில் இருவரும் சுமார் 10 நிமிடங்கள் பேசிக்கொண்டிருந்துள்ளனர். திடீரென அவர்களுக்குள் வாக்குவாதம் முற்ற ஆவேசமடைந்திருக்கிறார் ஜித்து தான் ஏற்கெனவே ஆன்லைனில் வாங்கி மறைத்து வைத்திருந்த கூர்மையான கத்தியை உருவிய ஜித்து, தின்ஷாவின் கழுத்தை கறகறவென அறுத்திருக்கிறார். இதைப் பார்த்த ரிசார்ட் ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் வௌவௌத்துப் போயினர்.

தடுக்க முயன்ற ஊழியர்களையும் கத்தியைக் காட்டி மிரட்டி விரட்டியிருக்கிறார் ஜித்து அதன்பின் ரிசார்ட் ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் சேர்ந்து ஜித்துவை சுத்துப்போட்டு வளைத்துப் பிடித்தனர். அவருக்கு சரமாரியாக தர்ம அடி கொடுத்த ரிசார்ட் ஊழியர்கள், மரத்தில் கட்டிப்போட்டு, கோயிபுரம் போலீசாரிடம் ஒப்படைத்துள்ளனர். இதனிடையே, கழுத்தில் பலத்த கத்திக்குத்து காயங்களுடன் உயிருக்கு போராடிய தின்ஷாவை அங்கிருந்தவர்கள் உடனடியாக கோழஞ்சேரியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.

இதையும் படிங்க: AI நிறுவனம் மீது ரூ.7,000 கோடி இழப்பீடு கோரி பிரபல நடிகை ஊர்வசி ரவுடேலா வழக்கு.. என்ன நடந்தது?

ஆனால், அங்கு சிகிச்சை பலனின்றி தின்ஷா பரிதாபமாக உயிரிழந்தார். ஜித்துவை கைது செய்த போலீசார், அவரிடம் நடத்திய விசாரணையில் கொலைக்கான காரணம் தெரியவந்தது. ஜித்துவும் தின்ஷாவும் கடந்த ஒரு வருடமாக காதலித்து வந்துள்ளனர்.  சமீபத்தில் ஜித்துவிடம் இருந்து தின்ஷா விலகியதுடன், காதலையும் முறித்துக் கொண்டிருக்கிறார். மேலும், தின்ஷா வேறு சில ஆண் நண்பர்களுடன் பேசி பழகி வந்ததையும் பார்த்து ஆத்திரம் அடைந்திருக்கிறார்.

குறிப்பாக, தின்ஷாவின் செல்போனுக்கு வந்த சில மெசேஜ்கள் தொடர்பாக இருவருக்கும் தகராறு ஏற்பட்டிருக்கிறது. இந்தச் சூழலில்தான், ஆவேஷமாக ரிசார்ட்டுக்கு வந்த ஜித்து, தின்ஷாவை பேசுவதற்காக வெளியே அழைத்துச் சென்று, கத்தியால் குத்திக் கொலை செய்தது தெரியவந்தது. இந்த கொடூர தாக்குதல் சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகளையும் போலீசார் கைப்பற்றியுள்ளனர். தற்போது வெளியாகியுள்ள அந்த காட்சிகளில், ரிசார்ட் வளாகத்தில் இருவரும் நடந்து செல்வதும், பின்னர் மரத்தடியில் பேசிக்கொண்டிருப்பதும், அதன்பிறகு நடந்த பரபரப்பான சம்பவங்களும் பதிவாகியுள்ளது. காதல் முறிவால் ஏற்பட்ட ஆத்திரத்தில், இளம்பெண்ணின் உயிரைப் பறித்த சம்பவம் கேரளாவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Read More

Previous Post

அதிகரிக்கப்பட்டது எரிபொருள் விலை – ஐபிசி தமிழ்

Next Post

e-KYC செய்யாத குடும்ப அட்டைதாரர்களுக்கும் ரேஷன் பொருட்கள்: வெளியான முக்கிய அறிவிப்பு | தமிழ்நாடு போட்டோகேலரி

Next Post
e-KYC செய்யாத குடும்ப அட்டைதாரர்களுக்கும் ரேஷன் பொருட்கள்: வெளியான முக்கிய அறிவிப்பு | தமிழ்நாடு போட்டோகேலரி

e-KYC செய்யாத குடும்ப அட்டைதாரர்களுக்கும் ரேஷன் பொருட்கள்: வெளியான முக்கிய அறிவிப்பு | தமிழ்நாடு போட்டோகேலரி

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin