GPT-6.1 Astra சோதனையின் போது OpenAI எதிர்கொண்ட முக்கிய சவால், அதன் Zero-day vulnerabilities. OpenAI நிறுவனம், தங்களது புதிய AI மாதிரிகள் எந்த அளவுக்கு ஆபத்தானவை என்பதை அளவிட சில எல்லைகளை நிர்ணயித்துள்ளது. இதில் குறைந்தபட்ச ஆபத்து, அதிகபட்ச ஆபத்து என பல நிலைகள் உள்ளன. இந்த வரிசையில், ‘Critical’ என்பது உச்சக்கட்ட எச்சரிக்கை நிலை. மனிதக் கட்டுப்பாட்டை மீறித் தனிச்சையாக செயல்பட்டால், அது உலகப் பாதுகாப்புக்கும் டிஜிட்டல் முறைக்கும் பெரிய ஆபத்தை ஏற்படுத்தலாம் என்ற Critical நிலையை GPT-6.1 Astra Model தொட்டுவிட்டது.

