• Login
Wednesday, September 30, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home உலகம்

விமானிகளுக்கு இடையே நடுவானில் மோதல்.. சவூதியில் அவசரமாகத் தரையிறங்கிய விமானத்தால் பதற்றம்! | World News (உலக செய்திகள்)

GenevaTimes by GenevaTimes
September 30, 2026
in உலகம்
Reading Time: 1 min read
0
விமானிகளுக்கு இடையே நடுவானில் மோதல்.. சவூதியில் அவசரமாகத் தரையிறங்கிய விமானத்தால் பதற்றம்! | World News (உலக செய்திகள்)
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:Sep 30, 2026 1:38 PM IST

நிலைமையைக் கையாள இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, பாதுகாப்புத் துறை அதிகாரிகளுடன் அவசரப் பாதுகாப்புக் கூட்டத்தைக் கூட்டி ஆலோசித்தார்.

News18
News18

ஐக்கிய அரபு அமீரகத்தின் துபாயில் இருந்து இஸ்ரேலின் டெல் அவிவ் (Tel Aviv) நகருக்குப் புறப்பட்ட பிளை துபாய் நிறுவனத்திற்குச் சொந்தமான FZ1073 என்ற பயணிகள் விமானம், வழியில் திடீரெனத் தனது பாதையை மாற்றிச் சவூதி அரேபியாவில் அவசரமாகத் தரையிறக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விமானத்தைக் கடத்த முயல்வதாக எழும் எச்சரிக்கை சிக்னல் பரவியதால், மத்திய கிழக்கு பிராந்தியத்தில் சில மணி நேரம் பதற்றமான சூழல் நிலவியது.

இன்று காலை நடைபெற்ற இந்தப் பயணத்தின் போது, விமானத்தில் 100-க்கும் மேற்பட்ட இஸ்ரேலிய பயணிகள் உட்படப் பல நாடுகளைச் சேர்ந்த பயணிகள் இருந்தனர். நடுவானில் பறந்து கொண்டிருந்த போது, விமானத்தின் காக்பிட்டில் (Cockpit) இருந்த இரு விமானிகளுக்கு இடையே திடீரென வாக்குவாதமும் தகராறும் ஏற்பட்டுள்ளது.

இந்தத் தகராறின் போது, ஆபத்து காலங்களில் பயன்படுத்தப்படும் ‘Squawk 7700’ (பொது அவசரநிலை) சிக்னல் முதலில் அனுப்பப்பட்டது. அதனைத் தொடர்ந்து, விமானம் கடத்தப்படுவதையோ அல்லது சட்டவிரோதமாக யாராவது ஆக்கிரமிப்பதையோ குறிக்கும் ‘Squawk 7500’ என்ற சிக்னல் மாற்றப்பட்டு ஒளிபரப்பப்பட்டது. இது சர்வதேச வான்வழி அமைப்புகளிடையே உடனடியாக விமான கடத்தல் பீதியை ஏற்படுத்தியது.

விமானத்திலிருந்து கடத்தல் சிக்னல் பெறப்பட்ட உடனடியாக இஸ்ரேலிய பாதுகாப்புப் படைகள் உஷார்படுத்தப்பட்டன. நிலைமையின் தீவிரத்தைக் கருதி இஸ்ரேலிய விமானப்படை (IAF) உடனடியாகத் தனது போர் விமானங்களை (Fighter jets) அவசரத் தேவைக்காகப் புறப்படத் தயாராக வைத்தது.

அதைத் தொடர்ந்து இஸ்ரேலின் வான்வெளிப் பகுதி தற்காலிகமாக மூடப்பட்டு, மற்ற விமானங்களின் போக்குவரத்தும் நிறுத்தி வைக்கப்பட்டது.

நிலைமையைக் கையாள இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, பாதுகாப்புத் துறை அதிகாரிகளுடன் அவசரப் பாதுகாப்புக் கூட்டத்தைக் கூட்டி ஆலோசித்தார்.

பாதை மாற்றப்பட்ட அந்த விமானம், சவூதி அரேபியாவில் உள்ள தபூக் விமானநிலையம் என அழைக்கப்படும் இளவரசர் சுல்தான் பின் அப்துல்அஜிஸ் விமான நிலையத்தில் பத்திரமாகத் தரையிறக்கப்பட்டது. விமானம் தரை இறங்கிய பிறகே, இது கடத்தல் சம்பவம் அல்ல; மாறாக விமானிகளுக்கு இடையே ஏற்பட்ட மோதலால் நேரிட்ட தவறு என்பது அதிகாரிகளால் உறுதி செய்யப்பட்டது.

விமானம் பத்திரமாகத் தரையிறங்கியதைத் தொடர்ந்து இஸ்ரேலிய வான்வெளி மீண்டும் திறக்கப்பட்டது. சவூதி அரேபியா மற்றும் விமான நிறுவன அதிகாரிகள், காக்பிட்டில் என்ன நடந்தது என்பது குறித்துக் குழுவிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், சவூதியில் தங்கியுள்ள 100-க்கும் மேற்பட்ட இஸ்ரேலிய பயணிகளைப் பாதுகாப்பாகத் டெல் அவிவ் அழைத்துச் செல்ல பிளை துபாய் நிறுவனம் மற்றொரு மாற்றாக ஒரு விமானத்தை அனுப்ப ஏற்பாடுகளைச் செய்துள்ளது.

Read More

Previous Post

LPG Update | எல்பிஜி வாடிக்கையாளர்களுக்கு.. இன்றே கடைசி நாள்.. தவறினால் கேஸ் மானியம் நிறுத்தம்.!

Next Post

புரட்டாசி வெள்ளிக்கிழமையில் மகாலட்சுமி வழிபாடு | Makkal Osai

Next Post
புரட்டாசி வெள்ளிக்கிழமையில் மகாலட்சுமி வழிபாடு | Makkal Osai

புரட்டாசி வெள்ளிக்கிழமையில் மகாலட்சுமி வழிபாடு | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin