2025/2026 மதிப்பீட்டு ஆண்டுக்கான வருமான வரியைச் செலுத்துவதற்கு வழங்கப்பட்ட அவகாசம் இன்றுடன் (30) நிறைவடைவதாக உள்நாட்டு இறைவரித் திணைக்களம் மீண்டும் நினைவூட்டியுள்ளது.
தாமதத்தால் ஏற்படும் அபராதங்கள் மற்றும் வட்டித் தொகைகளைக் தவிர்த்துக்கொள்வதற்காக, வரி செலுத்த வேண்டிய அனைத்துத் தனிநபர்களும் நிறுவனங்களும் தங்களது வரிகளை இன்றைக்குள் கட்டாயம் செலுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
இதுவரை வரிகளைச் செலுத்தத் தவறிய வரி விதிப்புக்கு உட்பட்ட வணிக நிறுவனங்கள் மற்றும் தனிநபர்கள் மீது மேலதிக அபராதங்களும் வட்டியும் விதிக்கப்படும் என்றும் திணைக்களம் எச்சரித்துள்ளது.
வரிப் பணத்தை உள்நாட்டு வருவாய்த் திணைக்களத்தின் அதிகாரப்பூர்வ இணையவழித் தளம் ஊடாகவோ அல்லது இலங்கை வங்கியின் (Bank of Ceylon) கிளைகள் மூலமாகவோ செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
வரி செலுத்துவதில் ஏதேனும் சந்தேகங்களோ உதவிகளோ தேவைப்படுவோர், உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் 1944 என்ற துரித தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொண்டு மேலதிக விவரங்களைப் பெற்றுக்கொள்ள முடியும்.

