Last Updated:
மத்திய அரசு கொண்டு வந்த சுரங்கங்கள் மற்றும் கனிம வளங்கள் ஒழுங்குபடுத்துதல் சட்டத்திருத்தத்தை கண்டித்து பிஜு ஜனதா தளம் சார்பில் நடந்த போராட்டத்தில் சுஜாதா கார்த்திகேயன் பங்கேற்றார்
ஒடிசாவில் நடைபெற்ற பிஜு ஜனதா தள போராட்டத்தில், வி.கே.பாண்டியனின் மனைவி சுஜாதா கார்த்திகேயன் ஆக்ரோஷமாக உரையாற்றியனார்.
ஒடிசா மாநிலத்தின் முன்னாள் ஐஏஎஸ் அதிகாரியான தமிழ்நாட்டைச் சேர்ந்த வி.கே.பாண்டியன், முன்னாள் முதலமைச்சர் நவீன் பட்நாயக்கின் வலதுகரமாக இருந்தார். தேர்தல் தோல்விக்குப் பிறகு வி.கே.பாண்டியன் அரசியலில் இருந்து ஒதுங்கிய நிலையில், அவரது மனைவியும், முன்னாள் ஐஏஎஸ் அதிகாரியுமான சுஜாதா கார்த்திகேயன், கடந்த ஜூன் மாதம் பிஜு ஜனதா தளத்தில் இணைந்தார்.
இந்நிலையில், மத்திய அரசு கொண்டு வந்த சுரங்கங்கள் மற்றும் கனிம வளங்கள் ஒழுங்குபடுத்துதல் சட்டத்திருத்தத்தை கண்டித்து பிஜு ஜனதா தளம் சார்பில் நடந்த போராட்டத்தில் சுஜாதா கார்த்திகேயன் பங்கேற்றார்.
பின்னர் பேட்டியளித்த அவர், மாநில அரசின் உரிமைகளை பறிக்கும் வகையில் மத்திய அரசு சட்டம் கொண்டுவந்துள்ளதாக குற்றம்சாட்டினார். வி.கே.பாண்டியன் அரசியலில் இருந்து ஒதுங்கிய நிலையில், அவரது மனைவி தீவிர அரசியலில் ஈடுபடுவது பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது.


