ஐசிஐசிஐ (ICICI) வங்கி தங்கத்தின் விலை குறித்த ஆய்வு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த அறிக்கையின்படி, 2026-ஆம் ஆண்டின் எஞ்சிய காலத்தில், சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை ஒரு அவுன்ஸிற்கு 4,200 டாலர் முதல் 4,600 டாலர் வரையிலும், இந்தியாவில் 10 கிராமுக்கு 1.40 லட்சம் ரூபாய் முதல் 1.60 லட்சம் ரூபாய் வரையிலும் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், 2027-ஆம் ஆண்டின் முதல் பாதியில் உலக சந்தையில் தங்கத்தின் விலை ஒரு அவுன்ஸிற்கு 5,000 டாலரை எட்டக்கூடும்.


