• Login
Tuesday, September 29, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

“கோலி நினைத்தால் 100 சதங்கள் சாத்தியம்தான்” – அஜின்கியா ரஹானே, தினேஷ் கார்த்திக் புகழாரம்! | Sports News (விளையாட்டு செய்திகள்)

GenevaTimes by GenevaTimes
September 29, 2026
in விளையாட்டு
Reading Time: 1 min read
0
“கோலி நினைத்தால் 100 சதங்கள் சாத்தியம்தான்” – அஜின்கியா ரஹானே, தினேஷ் கார்த்திக் புகழாரம்! | Sports News (விளையாட்டு செய்திகள்)
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:Sep 29, 2026 6:08 PM IST

ஒருநாள் போட்டியில் 157 ஸ்ட்ரைக் ரேட்டில் சதம் அடிப்பது சாதாரண விஷயமல்ல. அவர் மீண்டும் தனது இயல்பான ஆட்டத்தின் போக்கையும் கண்டறிந்துவிட்டார்.

விராட் கோலி
விராட் கோலி

திருவனந்தபுரத்தில் நடைபெற்ற மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில், இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி மீண்டும் தனது சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்த சதம் அடித்தார். 296 ரன்கள் என்ற இலக்கை நோக்கி களம் இறங்கிய இந்திய அணிக்கு, விராட் கோலி மற்றும் கேப்டன் சுப்மன் கில் ஆகிய இருவரும் அபாரமான கூட்டணியை அமைத்து வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றனர். சுப்மன் கில் 101 ரன்கள் எடுக்க, விராட் கோலி வெறும் 88 பந்துகளில் 139 ரன்கள் விளாசி அசத்தினார். இதன் மூலம் இந்திய அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்திலும், 8.2 ஓவர்கள் மீதமுள்ள நிலையிலும் அபார வெற்றி பெற்றது.

இந்த அதிரடி ஆட்டத்தின் மூலம் ஒருநாள் போட்டிகளில் தனது 55-வது சதத்தைப் பதிவு செய்த விராட் கோலி, சர்வதேச கிரிக்கெட்டில் தனது மொத்த சதங்களின் எண்ணிக்கையை 86 ஆக உயர்த்தியுள்ளார். கிரிக்கெட் வரலாற்றில் 100 சர்வதேச சதங்கள் அடித்து முதலிடத்தில் இருக்கும் சச்சின் டெண்டுல்கரின் சாதனையைச் சமன் செய்ய விராட் கோலிக்கு இன்னும் 14 சதங்களே தேவைப்படுகின்றன. கோலியின் திறமையைக் கண்டு, அவர் சச்சினின் சாதனையை நிச்சயம் முறியடிப்பார் என்று முன்னாள் இந்திய வீரர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க: ஐபிஎல் 2027: சிஎஸ்கே அணியின் பவுலிங் பயிற்சியாளராக மோஹித் சர்மா நியமனம்!

இந்திய அணியின் முன்னாள் வீரர் அஜின்கியா ரஹானே இதுபற்றி பேசுகையில், “விராட் கோலி தன் மீது அதிக எதிர்பார்ப்பையும் அழுத்தத்தையும் சுமத்தும்போதுதான் அவரது சிறந்த ஆட்டம் வெளிப்படுகிறது. தனது ஒவ்வொரு இன்னிங்ஸிலும் அவர் இதைச் செய்து வருகிறார். பல ஆண்டுகளாக அவர் இவ்வளவு தொடர்ச்சியாக ரன்களைக் குவிப்பதற்கு இந்த அணுகுமுறையே முக்கியக் காரணம். சச்சின் டெண்டுல்கரை தனது முன்மாதிரியாகக் கொண்டு விளையாடும் கோலி, 100 சதங்கள் அடிப்பதைப் பற்றி சிந்ததித்தால் அதில் எந்தத் தவறும் இல்லை; நிச்சயம் அவர் அதை அடைவார்” என்று குறிப்பிட்டுள்ளார்.

முன்னாள் விக்கெட் கீப்பர் தினேஷ் கார்த்திக் பேசுகையில், கோலி மைதானத்தில் இருக்கும் வரை அவரது ஒவ்வொரு தருணத்தையும் ரசிகர்கள் கொண்டாட வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார். “கடந்த ஜூலை 19-க்குப் பிறகு கிட்டத்தட்ட இரண்டு மாதங்கள் கிரிக்கெட் விளையாடாமல் களம் இறங்கியவர் போல கோலி தெரியவில்லை. மைதானத்திற்கு வந்த முதல் பந்தில் இருந்தே மிகுந்த தன்னம்பிக்கையுடனும், ஆதிக்கத்துடனும் விளையாடினார். ஒருநாள் போட்டியில் 157 ஸ்ட்ரைக் ரேட்டில் சதம் அடிப்பது சாதாரண விஷயமல்ல. அவர் மீண்டும் தனது இயல்பான ஆட்டத்தின் போக்கையும் கண்டறிந்துவிட்டார். அவர் இந்த பார்மில் இருக்கும் வரை உலகிலேயே சிறந்த பேட்டர் அவர்தான்” என்று பாராட்டியுள்ளார்.

இந்தத் தொடரின் இரண்டாவது ஒருநாள் போட்டி நாளை கவுகாத்தியில் உள்ள பர்சபாரா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது.

Read More

Previous Post

“எப்படி இருந்த கம்பெனி சார்..” ரத்தன் டாடா மறைவுக்கு பின் டாடாவில் வரிசையாக வெளியே வரும் பூதங்கள்! | Tata Sons Power Struggle What is happening: Tata Trusts and Board Clash Over Chandrasekaran, Listing

Next Post

Gold Price Prediction | அடுத்த 3 மாதங்களில் தங்கம் விலை இதுதான்… ஐசிஐசிஐ வங்கி கணிப்பு! | வணிகம் போட்டோகேலரி

Next Post
Gold Price Prediction | அடுத்த 3 மாதங்களில் தங்கம் விலை இதுதான்… ஐசிஐசிஐ வங்கி கணிப்பு! | வணிகம் போட்டோகேலரி

Gold Price Prediction | அடுத்த 3 மாதங்களில் தங்கம் விலை இதுதான்... ஐசிஐசிஐ வங்கி கணிப்பு! | வணிகம் போட்டோகேலரி

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin