• Login
Tuesday, September 29, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

636 ஆண்டுகள் பழமையான மசூதி இடிப்பு? AI வீடியோவால் வெடித்த கலவரம்! உண்மை நிலவரம் என்ன | Ujjain Shahi Mosque Tension: AI Fake Demolition Videos Spark Stone Pelting, Police registered case

GenevaTimes by GenevaTimes
September 29, 2026
in இந்தியா
Reading Time: 1 min read
0
636 ஆண்டுகள் பழமையான மசூதி இடிப்பு? AI வீடியோவால் வெடித்த கலவரம்! உண்மை நிலவரம் என்ன | Ujjain Shahi Mosque Tension: AI Fake Demolition Videos Spark Stone Pelting, Police registered case
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


India

oi-Vigneshkumar

Time
Published: Tuesday, September 29, 2026, 10:07 [IST]

உஜ்ஜைன்: மத்திய பிரதேசத்தின் உஜ்ஜைனில் உள்ள ஷாஹி மசூதி முழுவதுமாக இடிக்கப்படுவது போன்ற ஏஐ போலி வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் பரவியதால் பதற்றம் ஏற்பட்டுள்ளது. இந்த வீடியோக்களால் பதற்றம் அதிகரித்த நிலையில், மசூதியை சுற்றி பெரும் கூட்டம் கூடியுள்ளது. பின்னர் போலீசார் மீது கல்வீச்சு நடத்தப்பட்டதற்கும் காரணமாக அமைந்ததாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.

உஜ்ஜைனில் 2028ல் நடைபெறவுள்ள சிம்ஹஸ்தா கும்பமேளாவை முன்னிட்டு சாலை விரிவாக்க பணிகள் நடைபெற்று வரும் நிலையில், இதற்காக 636 ஆண்டுகள் பழமையான ஷாஹி மசூதியின் ஒரு பகுதி இடிக்கப்பட முடிவு செய்யப்பட்டது. இருப்பினும் ஞாயிற்றுக்கிழமை இரவு ஷாஹி மசூதியின் ஒரு பகுதியை அகற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆயிரக்கணக்கானோர் திரண்டனர்.

Ujjain Shahi Mosque Tension Ujjain

போலி வீடியோ

அப்போது பாதுகாப்புப் படையினர் மீது கற்கள் வீசப்பட்டதால் போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசியும், லேசான தடியடி நடத்தியும் கூட்டத்தை கலைத்தனர். இதற்கிடையே இப்போது அங்கு மீண்டும் பதற்றம் அதிகரித்துள்ளது. இதற்கு முக்கிய காரணமே ஏஐ மூலம் போலியாக உருவாக்கப்பட்ட வீடியோ தான். சில வீடியோக்களில் ஷாஹி மசூதி முழுவதுமாக இடிக்கப்படுவது போன்று காட்சிகள் இருப்பதாகவும் இதுவே பதற்றத்தை அதிகரித்துள்ளதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர். இந்த போலி வீடியோக்களால் அங்கு திரண்ட மக்கள், போலீசார் மீதும் கற்களை வீசி தாக்கியதாக கூறப்படுகிறது.

ஆனால் உண்மையில் மசூதியின் ஒரு குறிப்பிட்ட பகுதி மட்டுமே அகற்றப்பட உள்ளது. சிம்ஹஸ்தா கும்பமேளாவுக்காக சாலை விரிவுபடுத்தும் பணிகள் நடந்து வரும் நிலையில், அதில் மசூதியின் ஒரு பகுதி அமைந்திருப்பதால் அந்த பகுதியை மட்டும் அகற்றும் நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. இதற்கிடையே முழு மசூதியும் இடிக்கப்படுவது போன்ற போலி வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் பரவியதால் மசூதிக்கு வெளியே அதிகளவில் மக்கள் திரண்டனர்.

போலீஸ் நடவடிக்கை

ஏஐ வீடியோக்கள் மூலம் சமூகத்தில் மோதல் ஏற்படுத்த முயன்றதாக 20 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளன. மூன்று காவல் நிலையங்களில் இந்த வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், விசாரணை தொடர்ந்து நடந்து வருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர். மேலும், இதுவரை 15 பேர் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளதாகவும், சிலர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. வீடியோக்களை முதலில் உருவாக்கியது யார், அவை எப்படி பரப்பப்பட்டன என்பது குறித்தும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

கல்வீச்சில் ஈடுபட்டவர்களை அடையாளம் காண சிசிடிவி மற்றும் ட்ரோன் கேமராக்கள் பயன்படுத்தப்பட்டு வருவதாக போலீசார் தெரிவித்துள்ளார். நகரின் பல பகுதிகளில் போலீசார் கொடி அணிவகுப்பையும் நடத்தி வருகின்றனர். பொதுமக்கள் வதந்திகளை நம்ப வேண்டாம் என்றும் தேவையில்லாமல் மசூதி அமைந்துள்ள பகுதிக்கு வர வேண்டாம் என்றும் உஜ்ஜைன் நிர்வாகம் கேட்டுக் கொண்டுள்ளது.

சுமுக தீர்வு

இந்த மசூதி இடிப்பு தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட இரு மேல்முறையீட்டு மனுக்களை மத்திய பிரதேச உயர் நீதிமன்றம் திங்கள்கிழமை முடித்து வைத்தது. மாநகராட்சியுடன் உடன்பாடு ஏற்பட்டுள்ளதாக முஸ்லிம் தரப்பு நீதிமன்றத்தில் தெரிவித்ததை தொடர்ந்து வழக்கு முடித்து வைக்கப்பட்டது. அதாவது சாலை விரிவாக்கம் தொடர்பாக உஜ்ஜைன் நிர்வாகமும் மசூதி தரப்பும் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். முதலில் சுமார் 9.5 அடி வரை சாலை விரிவாக்கத்திற்காக தேவைப்படுவதாக மாவட்ட நிர்வாகம் கோரியுள்ளது. பிறகு நடந்த பல கட்ட பேச்சுவார்த்தைக்கு பிறகு, சுமார் 3 அடி அகற்ற உடன்பாடு ஏற்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குழப்பம்

பிரச்சினை சுமுகமாகப் பேச்சுவார்த்தை மூலம் தீர்க்கப்பட்ட நேரத்தில் தான் திடீரென ஏஐ போலி வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் பரவி குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. இன்று மசூதியின் ஒரு பகுதியை இடிக்கும் பணி மேற்கொள்ளப்படும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், இந்த குழப்பத்தால் அங்கு பதற்றம் அதிகரித்துள்ளது.

English summary

AI-generated fake videos showing the entire Shahi Mosque in Ujjain being demolished have circulated on social media(உஜ்ஜைன் மசூதி இடிப்பு போலி வீடியோ): Ujjain Shahi Mosque Tension latest news in tamil.

Read More

Previous Post

ஏரிக்குள் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ஆயுதங்கள்! ரி-56 துப்பாக்கியுடன் 84 தோட்டாக்கள் மீட்பு – Sri Lanka Tamil News

Next Post

Gold Price Fall | மீண்டும் அதலபாதாளத்தை நோக்கி சரியும் தங்கம் விலை.. நகை பிரியர்களுக்கு உச்சக்கட்ட மகிழ்ச்சி.. இன்றைய நிலவரம்? | வணிகம் போட்டோகேலரி

Next Post
Gold Price Fall | மீண்டும் அதலபாதாளத்தை நோக்கி சரியும் தங்கம் விலை.. நகை பிரியர்களுக்கு உச்சக்கட்ட மகிழ்ச்சி.. இன்றைய நிலவரம்? | வணிகம் போட்டோகேலரி

Gold Price Fall | மீண்டும் அதலபாதாளத்தை நோக்கி சரியும் தங்கம் விலை.. நகை பிரியர்களுக்கு உச்சக்கட்ட மகிழ்ச்சி.. இன்றைய நிலவரம்? | வணிகம் போட்டோகேலரி

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin