• Login
Monday, September 28, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் உடற்கூற்று பரிசோதனை தொடர்பில் சகோதரி சுவேதா சிங் கீர்த்தி வெளியிட்டுள்ள புதிய தகவல் – Sri Lanka Tamil News

GenevaTimes by GenevaTimes
September 28, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் உடற்கூற்று பரிசோதனை தொடர்பில் சகோதரி சுவேதா சிங் கீர்த்தி வெளியிட்டுள்ள புதிய தகவல் – Sri Lanka Tamil News
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter



செய்திகள்
/
சினிமா
/
சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் உடற்கூற்று பரிசோதனை தொடர்பில் சகோதரி சுவேதா சிங் கீர்த்தி வெளியிட்டுள்ள புதிய தகவல்

மறைந்த நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் உடற்கூற்று பரிசோதனையின்போது அவரது கால் உடைந்திருந்ததாகவும் பலப்பிரயோகம் செய்யப்பட்டிருந்ததாகவும் அவரது சகோதரி சுவேதா சிங் கீர்த்தி புதிய தகவல்களை வெளியிட்டுள்ளார்.


மறைந்த பொலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் சடலம் மீதான உடற்கூற்று பரிசோதனையின்போது அவரது காலில் முறிவு ஏற்பட்டிருந்ததாகவும், கண்களில் காயங்கள் காணப்பட்டதாகவும் உடற்கூற்று பரிசோதனையை மேற்கொண்ட நபர் தமக்கு தெரிவித்ததாக அவரது சகோதரி சுவேதா சிங் கீர்த்தி தெரிவித்துள்ளார்.

இச்சம்பவம் இடம்பெற்று பல வருடங்கள் கடந்துள்ள நிலையில், காணொளிப் பதிவு ஒன்றின் ஊடாக அவர் வெளியிட்டுள்ள இந்த கருத்துக்கள் இந்திய ஊடகங்களிலும் சமூக வலைத்தளங்களிலும் மீண்டும் பேசுபொருளாக மாறியுள்ளன.

தனது காணொளி பதிவில் இது தொடர்பில் மேலும் தெரிவித்துள்ள சுவேதா சிங் கீர்த்தி, தனது சகோதரரின் உடற்கூற்று பரிசோதனையில் ஈடுபட்ட நபர் அண்மையில் சில விபரங்களை தமக்கு வெளிப்படுத்தியதாக குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது, சுஷாந்தின் கால் உடைந்திருந்ததாகவும், அவரது கண்களில் பாதிப்புக்கள் காணப்பட்டதாகவும், அவர் மீது பாரிய அளவிலான பலப்பிரயோகம் மேற்கொள்ளப்பட்டிருந்ததாகவும் அவர் தெரிவித்தார். அத்துடன் துப்பாக்கி பிரயோக அச்சுறுத்தலோ அல்லது பயன்பாடோ இருந்திருக்கலாம் எனவும் அந்த நபர் தமக்கு கூறியதாக அவர் அதில் சுட்டிக்காட்டியுள்ளார்.

இருப்பினும், இந்த உரையாடல் எப்போது அல்லது எங்கு இடம்பெற்றது என்பது குறித்த மேலதிக விபரங்களையோ அல்லது தனது குற்றச்சாட்டுக்களை உறுதிப்படுத்துவதற்கான உத்தியோகபூர்வ ஆவணங்களையோ அவர் தனது காணொளியில் முன்வைக்கவில்லை. அத்துடன் இந்த கூற்றுக்கள் சுயாதீனமாக இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

அட்லாண்டாவில் இருந்து நாடு திரும்பிய போது ஏராளமான ரசிகர்கள் தன்னை சந்தித்து தனது சகோதரருக்காக கண்ணீர் விட்டு அழுது ஆதரவு தெரிவித்ததாகவும் அவர் நினைவுகூர்ந்துள்ளார்.

இவ்வாறான துயரங்களை தாங்கிக்கொள்வது கடினம் என்ற போதிலும், தனது வாழ்க்கையை கோபம், பழிவாங்கல் அல்லது வெறுப்புணர்வுடன் தொடர தாம் விரும்பவில்லை எனவும், அன்பு, நம்பிக்கை மற்றும் நற்பண்புகளையே தாம் முன்னிறுத்துவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். உலகம் சில வேளைகளில் அநீதியானது என்பதை தாம் ஏற்றுக்கொள்வதாகவும், அதனால் இறை நம்பிக்கையையும் நல்ல எண்ணங்களையும் கைவிட வேண்டாம் எனவும் ரசிகர்களிடம் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

பிரபல இந்திய திரைப்பட நடிகரான சுஷாந்த் சிங் ராஜ்புத், கடந்த 2020 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 14 ஆம் திகதி மும்பையிலுள்ள தனது வாடகை குடியிருப்பில் சடலமாக மீட்கப்பட்டார். ஆரம்பத்தில் தற்கொலை என சந்தேகிக்கப்பட்டு மும்பை பொலிஸாரினாலும் பின்னர் மத்திய புலனாய்வுப் பிரிவினராலும் இது தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Read More

Previous Post

Donald Trump | “அமெரிக்காவின் கட்டுப்பாட்டில்தான் ஹோர்முஸ் நீரிணை இருக்கிறது” – அமெரிக்க அதிபர் டிரம்ப்! | World News (உலக செய்திகள்)

Next Post

திமுக ஜெயித்தால் என் பதவியை ராஜினாமா செய்றேன்! தவெக வென்றால்..? உதயநிதிக்கு ஆதவ் அர்ஜுனா சவால் | Aadhav Arjuna challenges Udhayanidhi over Maduranthagam by election

Next Post
திமுக ஜெயித்தால் என் பதவியை ராஜினாமா செய்றேன்! தவெக வென்றால்..? உதயநிதிக்கு ஆதவ் அர்ஜுனா சவால் | Aadhav Arjuna challenges Udhayanidhi over Maduranthagam by election

திமுக ஜெயித்தால் என் பதவியை ராஜினாமா செய்றேன்! தவெக வென்றால்..? உதயநிதிக்கு ஆதவ் அர்ஜுனா சவால் | Aadhav Arjuna challenges Udhayanidhi over Maduranthagam by election

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin