• Login
Sunday, September 27, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

மட்டக்களப்பில் 6 வயது சிறுமி மீதான அத்துமீறல்: 66 வயது முதியவருக்கு விளக்கமறியலில்

GenevaTimes by GenevaTimes
September 27, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
மட்டக்களப்பில் 6 வயது சிறுமி மீதான அத்துமீறல்: 66 வயது முதியவருக்கு விளக்கமறியலில்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


மட்டக்களப்பில் 6 வயது சிறுமி ஒருவரை பாலியல் அத்துமீறல் செய்ததாகக் கூறப்படும் அவரது 66 வயது தாத்தா கைது செய்யப்பட்டு, எதிர்வரும் ஒக்டோபர் 9ஆம் திகதி வரை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

இது குறித்து தெரிய வருகையில்,


குறித்த சிறுமியின் தாயார் மூன்று மாதங்களுக்கு முன்னர் குழந்தை ஒன்றைப் பெற்றிருந்த நிலையில், குழந்தையை மருத்துவ பரிசோதனைக்காக வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்வதற்காக சம்பவ தினமான 24ஆம் திகதி, தனது 6 வயது மகளை கணவரின் தாயாரின் பாதுகாப்பில் விட்டுச் சென்றுள்ளார்.


பின்னர் கணவருடன் குழந்தையை அழைத்துக்கொண்டு வைத்தியசாலைக்குச் சென்ற அவர், சிகிச்சை நடவடிக்கைகளை முடித்துக்கொண்டு வீடு திரும்பியுள்ளார்.

காவல்துறை நடவடிக்கை

இதன்போது, வீட்டில் கணவரின் தாயார் இல்லாத நிலையில், சிறுமி பாலியல் அத்துமீறலுக்கு உள்ளாக்கப்பட்டதாகக் கூறப்படும் சம்பவத்தை தாயார் கண்டறிந்துள்ளார்.

இதையடுத்து சந்தேகநபரை தாக்கிய நிலையில், அவர் அங்கிருந்து தப்பிச் சென்றதாக தெரிவிக்கப்படுகிறது.


சம்பவம் தொடர்பில் மறுநாள் 25ஆம் திகதி கிராம உத்தியோகத்தரிடம் முறைப்பாடு செய்யப்பட்டதையடுத்து, அவர் காவல்துறையினருக்கு தகவல் வழங்கியுள்ளார்.


இதனைத் தொடர்ந்து சந்தேகநபர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டதுடன், சிறுமி மருத்துவ சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.



கைது செய்யப்பட்ட சந்தேகநபர் நேற்று சனிக்கிழமை (26) நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, அவரை எதிர்வரும் ஒக்டோபர் 9ஆம் திகதி வரை 14 நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.


சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை குறித்த பிரதேசத்திற்குப் பொறுப்பான காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…!

Read More

Previous Post

தேசத்தின் சொத்துக்களைச் சூறையாடுவதையும் ஊழலையும் நாடு ஒருபோதும் அனுமதிக்காது – பிரதமர் – Malaysiakini

Next Post

அமைதியை பலவீனமாக கருதக்கூடாது.. அச்சுறுத்தல் வந்தால் இந்தியா பதிலடி கொடுக்கும்! ராஜ்நாத் சிங் | India News (இந்தியா செய்திகள்)

Next Post
அமைதியை பலவீனமாக கருதக்கூடாது.. அச்சுறுத்தல் வந்தால் இந்தியா பதிலடி கொடுக்கும்! ராஜ்நாத் சிங் | India News (இந்தியா செய்திகள்)

அமைதியை பலவீனமாக கருதக்கூடாது.. அச்சுறுத்தல் வந்தால் இந்தியா பதிலடி கொடுக்கும்! ராஜ்நாத் சிங் | India News (இந்தியா செய்திகள்)

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin