• Login
Sunday, September 27, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

இந்தியாவுக்கு ஐ.நா. பாதுகாப்புச் சபையில் நிரந்தர உறுப்புரிமை: ரஷ்யா ஆதரவு

GenevaTimes by GenevaTimes
September 27, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
இந்தியாவுக்கு ஐ.நா. பாதுகாப்புச் சபையில் நிரந்தர உறுப்புரிமை: ரஷ்யா ஆதரவு
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபையில் இந்தியாவுக்கு நிரந்தர உறுப்புரிமை வழங்குவதற்கு ரஷ்யா ஆதரவு தெரிவித்துள்ளது.

பாதுகாப்புச் சபையில் ஆசியா, ஆபிரிக்கா மற்றும் இலத்தீன் அமெரிக்க நாடுகளின் பிரதிநிதித்துவம் அதிகரிக்கப்பட வேண்டும் என ரஷ்ய வெளிவிவகார அமைச்சர் செர்கெய் லாவ்ரோவ் தெரிவித்துள்ளார்.


இது தொடர்பில் கருத்து வெளியிட்ட அவர், “பிரேசில் மற்றும் இந்தியாவின் நிரந்தர உறுப்புரிமைக்கான வேட்புமனுக்களை நாங்கள் ஆதரிக்கிறோம்.

அதேவேளை, பாதுகாப்புச் சபையில் மேலதிக மேற்கத்திய நாடுகளுக்கு நிரந்தர ஆசனங்கள் வழங்கப்படுவதற்கு எதிர்ப்பை வெளிப்படுத்துகின்றேன்.

இராணுவவாதம் – பழிவாங்கும் மனப்பான்மை

குறிப்பாக ஜெர்மனி மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகள் இராணுவவாதம் மற்றும் பழிவாங்கும் மனப்பான்மை நோக்கி நகர்கிறது.

இந்தியாவுக்கு ஐ.நா. பாதுகாப்புச் சபையில் நிரந்தர உறுப்புரிமை: ரஷ்யா ஆதரவு | Un To India Permanent Membership Security Council



பாதுகாப்புச் சபை சீர்திருத்தம் மேற்கொள்ளப்படும் போது, தற்போதுள்ள நிரந்தர உறுப்பினர் நாடுகளின் உரிமைகள் மற்றும் அதிகாரங்கள் குறைக்கப்படக் கூடாது.

15 உறுப்பினர்களைக் கொண்ட பாதுகாப்புச் சபை
ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபையில் மொத்தம் 15 உறுப்பினர்கள் உள்ளனர்.

இதில் சீனா, பிரான்ஸ், ரஷ்யா, பிரித்தானியா மற்றும் அமெரிக்கா ஆகிய ஐந்து நாடுகள் நிரந்தர உறுப்பினர்களாக உள்ளதுடன், அவற்றுக்கு வீட்டோ அதிகாரமும் உள்ளது.



ஏனைய 10 நாடுகள் நிரந்தரமற்ற உறுப்பினர்களாகும். இவை இரண்டு வருட காலத்துக்கு தெரிவு செய்யப்படுகின்றன.

பாதுகாப்புச் சபையின் கட்டமைப்பில் மாற்றங்களை மேற்கொள்வதற்கு ஐ.நா. சாசனத்தில் திருத்தம் செய்ய வேண்டியுள்ளது.

மூன்றில் இரண்டு பெரும்பான்மை

இதற்கு பொதுச் சபையில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையும், உறுப்பு நாடுகளில் மூன்றில் இரண்டு பங்கு நாடுகளின் முறையான அங்கீகாரமும் தேவைப்படுகிறது.

மேலும், தற்போதுள்ள ஐந்து நிரந்தர உறுப்பினர் நாடுகளின் ஒப்புதலும் அவசியமாகும். ஐ.நா. பாதுகாப்புச் சபையில் நிரந்தர உறுப்புரிமை வழங்க வேண்டும் என்ற இந்தியாவின் கோரிக்கை 1990களிலிருந்து தொடர்ந்து முன்வைக்கப்பட்டு வருகிறது.


பாதுகாப்புச் சபை சீர்திருத்தம் தொடர்பான முறையான பேச்சுவார்த்தைகள் 2008ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபையில் ஆரம்பிக்கப்பட்டன. 2010ஆம் ஆண்டு இந்தியா, பிரேசில், ஜெர்மனி மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளுடன் இணைந்து G4 என்ற கூட்டமைப்பை உருவாக்கி நிரந்தர உறுப்புரிமைக்கான கோரிக்கையை முன்னெடுத்தது.


2026ஆம் ஆண்டிலும் பாதுகாப்புச் சபை சீர்திருத்தம் தொடர்பான கலந்துரையாடல்கள் தொடர்ந்துவரும் நிலையில், அதன் புதிய கட்டமைப்பு குறித்து உறுப்பு நாடுகளிடையே இதுவரை இறுதி உடன்பாடு எட்டப்படவில்லை” என தெரிவித்துள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…!

Read More

Previous Post

தாய்லாந்தில் கனமழை, வெள்ளம்; மக்கள் அவதி … | Makkal Osai

Next Post

“அம்மா.. என்னை கொன்னுடுவாங்க..” நள்ளிரவில் அழுது கொண்டே போன் கால்.. மறுநாள் காலை மாணவி மர்ம மரணம்! | Assam Guwahati Homestay Death: 22-Year-Old Student Dies, 26-Year-Old Man Arrested by Police

Next Post
“அம்மா.. என்னை கொன்னுடுவாங்க..” நள்ளிரவில் அழுது கொண்டே போன் கால்.. மறுநாள் காலை மாணவி மர்ம மரணம்! | Assam Guwahati Homestay Death: 22-Year-Old Student Dies, 26-Year-Old Man Arrested by Police

"அம்மா.. என்னை கொன்னுடுவாங்க.." நள்ளிரவில் அழுது கொண்டே போன் கால்.. மறுநாள் காலை மாணவி மர்ம மரணம்! | Assam Guwahati Homestay Death: 22-Year-Old Student Dies, 26-Year-Old Man Arrested by Police

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin