• Login
Sunday, September 27, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

பாதுகாப்பான புலம்பெயர்தலை உறுதிப்படுத்த அரசாங்கத்தின் விசேட நடவடிக்கை

GenevaTimes by GenevaTimes
September 27, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
பாதுகாப்பான புலம்பெயர்தலை உறுதிப்படுத்த அரசாங்கத்தின் விசேட நடவடிக்கை
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


சர்வதேச பாதுகாப்பான, ஒழுங்கான மற்றும் முறையான புலம்பெயர்தலுக்கான உலகளாவிய உடன்படிக்கையின் 2026-2028 ஆம் ஆண்டுக்கான தேசிய நடைமுறைப்படுத்தல் திட்டமானது, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சின் தலைமையின் கீழ் உத்தியோகபூர்வமாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.


இலங்கையில் அமைந்துள்ள ஐக்கிய நாடுகள் புலம்பெயர்தல் வலையமைப்பின் செயலகமாகச் செயற்படும் சர்வதேச புலம்பெயர்தல் அமைப்பின் ஆதரவுடன் இத்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

ஒருங்கிணைக்கப்பட்ட, ஆதாரபூர்வமான மற்றும் மனிதநேயத்தை முன்னிறுத்திய புலம்பெயர்தல் நிர்வாகத்தை மேம்படுத்தும் தேசிய முயற்சிகளை வலுப்படுத்தும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

பாதுகாப்பான பாதை


கடந்த 2018 ஆம் ஆண்டு இலங்கையும் ஏனைய 151 ஐக்கிய நாடுகள் உறுப்பு நாடுகளும் இணைந்து அங்கீகரித்த இந்த உலகளாவிய உடன்படிக்கையானது, சர்வதேச புலம்பெயர்தலை விரிவான முறையில் கையாள்வதற்கான முதலாவது அரசுகளுக்கிடையேயான ஒப்பந்தமாகும்.

பாதுகாப்பான புலம்பெயர்தலை உறுதிப்படுத்த அரசாங்கத்தின் விசேட நடவடிக்கை | Special Actions Of Immigration Govt



23 நோக்கங்களைக் கொண்டுள்ள இக்கட்டமைப்பானது, பாதுகாப்பான பாதைகளை மேம்படுத்துதல், புலம்பெயர்ந்தோரின் உரிமைகளைப் பாதுகாத்தல், ஆட்கடத்தலைத் தடுத்தல் மற்றும் நிலையான வளர்ச்சிக்கான புலம்பெயர்தலின் பங்களிப்பை உச்சப்படுத்துதல் ஆகியவற்றுக்கு வழிவகுக்கிறது.




அரசாங்க நிறுவனங்கள், ஐக்கிய நாடுகள் முகாம்கள், குடிசார் சமூக அமைப்புகள், கல்விமான்கள், அபிவிருத்திப் பங்காளிகள் மற்றும் தனியார் துறை உள்ளிட்ட பல தரப்பினரை உள்ளடக்கிய விரிவான ஆலோசனைக் செயல்முறை மூலமாகவே இத்திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.

முழு அரசாங்கம் மற்றும் முழுச் சமூகம் என்ற அணுகுமுறையைப் பிரதிபலிக்கும் வகையில், தேசிய முன்னுரிமைகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

இந்த வெளியீட்டு நிகழ்வில் உரையாற்றிய இலங்கைக்கான ஐக்கிய நாடுகள் வதிவிட ஒருங்கிணைப்பாளர் மார்க் என்றூ பிரஞ்சே குறிப்பிடுகையில்,


புலம்பெயர்தல் என்பது அபிவிருத்தி மற்றும் சமூகப் பாதுகாப்பிற்கான ஒரு முக்கியமான உந்துசக்தியாகும்.

இலங்கையில் கடந்த 2025 ஆம் ஆண்டில் தொழிலாளர்களின் பண அனுப்பீடுகள் 8 பில்லியன் அமெரிக்க டொலர்களைத் தாண்டியுள்ளன. அந்தப் பங்களிப்பின் பின்னணியில் உள்ள மக்களையும் அவர்களின் சமூகங்களையும் பாதுகாப்பதில் தேசிய தலைமைத்துவமும் கூட்டுறவுகளும் எத்தகைய சாதனைகளை எட்ட முடியும் என்பதை இத்திட்டம் காட்டுகிறது என்று தெரிவித்தார்.



இது குறித்து இலங்கைக்கான சர்வதேச புலம்பெயர்தல் அமைப்பின் பிரதான தலைவர் கிறிஸ்டின் பார்கோ தெரிவிக்கையில்,

ஐரோப்பிய ஒன்றியத்தின் நிதியுதவியுடன் நடைமுறைப்படுத்தப்படும் புலம்பெயர்தல் கூட்டுறவுகளைக் கட்டியெழுப்பும் திட்டம் மூலமாகவும் இத்திட்டத்தின் உருவாக்கம் ஆதரிக்கப்பட்டுள்ளது. இத்திட்டம் கடந்த 2026 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதத்தில் அமைச்சரவையின் ஒப்புதலைப் பெற்றது” என கூறியுள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…!

Read More

Previous Post

மாணவர் வன்கொடுமைகளைக் கையாள அனைவருக்கும் பொதுவான ஒரே விதிமுறைகளைக் கொண்டு வரத் திட்டம் – Malaysiakini

Next Post

86வது சம்பவம்.. வேட்டையாட வெறியோட இருந்திருக்காரு.. 74 பந்தில் சதமடித்து விராட் கோலி கொடுத்த ட்ரீட்! | Virat Kohli: Virat Kohli scored his 86th Century in just 74 balls against West Indies in 1st ODI at Trivandrum

Next Post
86வது சம்பவம்.. வேட்டையாட வெறியோட இருந்திருக்காரு.. 74 பந்தில் சதமடித்து விராட் கோலி கொடுத்த ட்ரீட்! | Virat Kohli: Virat Kohli scored his 86th Century in just 74 balls against West Indies in 1st ODI at Trivandrum

86வது சம்பவம்.. வேட்டையாட வெறியோட இருந்திருக்காரு.. 74 பந்தில் சதமடித்து விராட் கோலி கொடுத்த ட்ரீட்! | Virat Kohli: Virat Kohli scored his 86th Century in just 74 balls against West Indies in 1st ODI at Trivandrum

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin