• Login
Sunday, September 27, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

இந்தியாவுக்கு வந்த 5D தங்க நகைகள்.. சீனாவில் இருந்து இறக்கப்பட்ட புது டெக்னாலஜி.. மக்களே உஷார்..!! | China’s 5D Hard Gold Enters Indian Market: How Electroforming Tech Creates 60% Lighter, Bolder Jewelry

GenevaTimes by GenevaTimes
September 27, 2026
in வணிகம்
Reading Time: 1 min read
0
இந்தியாவுக்கு வந்த 5D தங்க நகைகள்.. சீனாவில் இருந்து இறக்கப்பட்ட புது டெக்னாலஜி.. மக்களே உஷார்..!! | China’s 5D Hard Gold Enters Indian Market: How Electroforming Tech Creates 60% Lighter, Bolder Jewelry
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


இந்தியாவுக்கு வந்த 5D தங்க நகைகள்.. சீனாவில் இருந்து இறக்கப்பட்ட புது டெக்னாலஜி.. மக்களே உஷார்..!!

இந்தியாவில் தங்க நகை சந்தை நாளுக்கு நாள் மோசமாகி வருகிறது, தங்கம் விலை அதிகமான காரணத்தால் தங்க நகை வாங்கும் மக்களின் எண்ணிக்கை அதிகளவில் குறைந்து வருகிறது, ஆனால் நகை கடைகளின் வருமானம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

இந்த நிலையில் தங்க நகை தயாரிப்பிலும், விற்பனையிலும் பெரும் மாற்றம் நடந்து வருகிறது, ஒருப்பக்கம் சாமானிய மக்கள் தொடர்ந்து நகை வாங்குவதை ஊக்குவிக்க வெள்ளி நகைகள் சந்தைக்கு வர துவங்கியே இதவேளையில், தங்க நகை வாங்குவோருக்கு சீனாவின் புதிய 5D Hard Gold தொழில்நுட்பம் இந்தியாவுக்கு வந்துள்ளது.

இந்தியாவுக்கு வந்த 5D தங்க நகைகள்.. சீனாவில் இருந்து இறக்கப்பட்ட புது டெக்னாலஜி.. மக்களே உஷார்..!!

இப்புதிய தொழில்நுட்பத்தால் தயாரிக்கப்படும் நகைகள் பார்க்க பெரியதாக இருந்தாலும் எடையில் மிகவும் குறைவானதாக இருக்கும் தன்மை கொண்டவை என்பதால் குறைந்த தங்கத்தில் பெரிய சைஸ் தங்க நகைகளை வாங்க முடியும்.

இந்திய சந்தையில் 5D Hard Gold அல்லது Electroformed Hollow Gold எனப்படும் புதிய வகை தங்க நகைகள் அறிமுகமாகியுள்ளன. இந்த Electroforming தொழில்நுட்பம் முதன் முதலில் சீனாவில் கண்டுப்பிடிக்கப்பட்டு 2009-ம் ஆண்டிலேயே இதற்கான காப்புரிமை பெறப்பட்டு உள்ளது. தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து வரும் நிலையில், இந்தத் தொழில்நுட்பம் மிகவும் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. ஏன் தெரியுமா..?

காலம் காலமாக இந்தியாவில் தங்க நகை தயாரிக்கும் நடைமுறை பெரிய அளவில் மாறியிருந்தாலும், லைட்வெயிட் நகைகள் மீது மக்களுக்கு இருக்கும் ஒரு குற்றச்சாட்டு, மிகவும் மெல்லியதாக இருப்பதால் நகைகள் எளிதில் வளைந்து அல்லது சேதமடையும் என்பது தான்.

இந்த பிரச்சனையை சரி செய்கிறது சீனாவின் 5D Hard Gold தொழில்நுட்பம். Electroforming முறை என்பது தங்க நகைக்கான அச்சு முதலில் மெழுகில் தயாரிக்கப்பட்டு இயந்திரத்திற்குள் வைக்கப்படும். இதன் மீது மின்சாரத்தைப் பயன்படுத்தி தங்கத் துகள்கள் படிப்படியாக அதன் மீது படிய வைக்கப்பட்டு நகை உருவாக்கப்படும்.

நகை தயாரிக்கும் பணிகள் முடிந்த பின்பு நகைகளை சூடாக்கி உள்ளே இருக்கும் மெழுகை உருக்கி வெளியேற்றப்படும். இந்த முறையில் தயாரிக்கப்படும் தங்க நகைகள் லைட் வெயிட் நகைகளை விட 4 மடங்கு வரை அதிக கடினமானதாக இருக்கும் என கூறப்படுகிறது.

இதேபோல் இந்த முறையில் தயாரிக்கப்படும் தங்க நகைகள் இயல்பாக தேவைப்படும் தங்கத்தை காட்டிலும் 60% வரை குறைவான தங்கத்தை கொண்டு தயாரிக்க முடியும் எனவும் கூறப்படுகிறது.

குறைவான தங்கம், அதிக கடினமான தன்மை என பல சாதகமான விஷயங்கள் இருந்தாலும் இதில் தங்கத்தின் தரத்தை பெரிய அளவில் கன்ட்ரோல் செய்ய முடியும் எனவும் கூறப்படுகிறது. 24 கேரட் தங்கத்தில் கூட லைட் வெயிட் முறையில் கடினமான நகைகளை உருவாக்க முடியும் என்றும் கூறப்படுகிறது.

இந்தியாவுக்கு வந்த 5D தங்க நகைகள்.. சீனாவில் இருந்து இறக்கப்பட்ட புது டெக்னாலஜி.. மக்களே உஷார்..!!

ஆனால் இதில் இருக்கும் பிரச்சனை என்னவென்றால் நகை பழுதானால் சரி செய்ய முடியாது என கூறப்படுகிறது. பொதுவாக இந்தியாவில் காலம் காலமாக தயாரிக்கப்படும் தங்க நகைகள் அனைத்தும் அருகில் இருக்கும் நகை கடைக்காரரிடம் கொடுத்தால் சரி செய்ய முடியும். ஆனால் இந்த நகைகள் தங்க துகள்களால் தயாரிக்கப்படுவதால் சரி செய்வது என்பது கடினமாகும்.

இந்தியாவில் நகை கடைக்காரர்கள், தயாரிப்பாளர்கள் என பல தரப்பினர் இந்த Electroforming நகை தயாரிப்பு இயந்திரங்கள் 2026-ல் அதிகப்படியானோர் வாங்கியுள்ளதாகவும், இதற்காக பல்வேறு உற்பத்தியாளர்கள் மற்றும் சப்ளையர்கள் சந்தையில் உள்ளதாகவும் கூறப்படுகிறது.

சீனாவின் 5D Hard Gold தொழில்நுட்பம் மூலம் தயாரிக்கப்படும் நகைகளை நீங்கள் வாங்குவீர்களா..?

Share This Article

English summary

China’s 5D Hard Gold Enters Indian Market: How Electroforming Tech Creates 60% Lighter, Bolder Jewelry

China’s 5D Hard Gold Enters Indian Market: How Electroforming Tech Creates 60% Lighter, Bolder Jewelry — இந்தியாவுக்கு வந்த 5D தங்க நகைகள்.. சீனாவில் இருந்து இறக்கப்பட்ட புது டெக்னாலஜி.. மக்களே உஷார்..!!

Story first published: Sunday, September 27, 2026, 20:23 [IST]

Other articles published on Sep 27, 2026

Read More

Previous Post

பணப் பிரச்சனையில் மனைவிக்கு நடந்த கொடூரம்.. கணவன் செய்த வெறிச்செயல்.. என்ன நடந்தது? | India News (இந்தியா செய்திகள்)

Next Post

மாணவர் வன்கொடுமைகளைக் கையாள அனைவருக்கும் பொதுவான ஒரே விதிமுறைகளைக் கொண்டு வரத் திட்டம் – Malaysiakini

Next Post

மாணவர் வன்கொடுமைகளைக் கையாள அனைவருக்கும் பொதுவான ஒரே விதிமுறைகளைக் கொண்டு வரத் திட்டம் – Malaysiakini

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin