• Login
Sunday, September 27, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

பணப் பிரச்சனையில் மனைவிக்கு நடந்த கொடூரம்.. கணவன் செய்த வெறிச்செயல்.. என்ன நடந்தது? | India News (இந்தியா செய்திகள்)

GenevaTimes by GenevaTimes
September 27, 2026
in இந்தியா
Reading Time: 1 min read
0
பணப் பிரச்சனையில் மனைவிக்கு நடந்த கொடூரம்.. கணவன் செய்த வெறிச்செயல்.. என்ன நடந்தது? | India News (இந்தியா செய்திகள்)
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:Sep 27, 2026 7:34 PM IST

பெங்களூருவில் மனைவியை கொன்று காலி இடத்தில் வீசிய நபரை போலீசார் நீண்ட தேடுதலுக்குப் பின் கைது செய்துள்ளனர்.

சாகர் சந்திர ராவத் - அனுசுயா
சாகர் சந்திர ராவத் – அனுசுயா

கர்நாடகா மாநிலம் பெங்களூருவின் சம்பிகேஹள்ளி அருகே உள்ள ஒரு காலி இடத்தில், உள்ளூர் தொழிலாளர்கள் சிலர் முட்புதர்களை வெட்டும் வேலையில் இறங்கினர். அப்போது பேரதிர்ச்சியாக அழுகிய நிலையில் முகம் சிதைக்கப்பட்ட பெண் ஒருவர், சடலமாகக் கிடந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உடனே போலீசாருக்கு தகவல் கொடுத்து சம்பவ இடத்தை பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டு வந்தனர்.

தெரு நாய்கள் கடித்துக் குதறி, முகத்தைச் சிதைத்திருந்ததால் பெண்ணின் அடையாளத்தைக் கண்டுபிடிப்பதில் போலீசாருக்கு சிரமம் ஏற்பட்டுள்ளது. அப்போது ஆடையிலிருந்த துணிக்கடை ஒன்றின் டேக்கை, தடயமாக வைத்து ட்ராக் செய்து போலீசார் விசாரித்தனர்.  அதில் கொலை செய்யப்பட்ட பெண் ஒடிசாவைச் சேர்ந்த அனுசுயா என்பதைக் கண்டுபிடித்தனர்.

32 வயதான சாகர் சந்திர ராவத் என்பவரை இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு அனுசுயா திருமணம் செய்து, பெங்களூருவில் வசித்து வந்தார். குடும்பத்தினருக்கு தெரியாமல் திருமணம் செய்தவர்கள், பெங்களூருவில் வெவ்வேறு ஹோட்டல்களில் பணிபுரிந்து வந்ததாகவும் கூறப்படுகிறது.

இதையும் படிங்க: ஜெம் வீரமணி வழக்கு: முக்கிய குற்றவாளி சாந்தியை 3 நாட்கள் காவலில் விசாரிக்க உத்தரவு

சாகர் ஒரு ஹோட்டலில் kitchen supervisor – ஆக பணிபுரிந்து வந்தார். பணப் பிரச்சனைகள் காரணமாக இத்தம்பதியினரிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. ஆகஸ்ட் 11 அன்று, அனுசுயா சாகர் பணிபுரிந்த ஹோட்டலுக்குச் சென்று, அவரது சம்பளம் குறித்து கணவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். வீட்டிற்குத் திரும்பிய பிறகும் அந்த வாக்குவாதம் தொடர்ந்ததாகத் தெரிகிறது. அந்த வாக்குவாதத்தின்போது ஆத்திரம் அடைந்த சாகர், அனுசுயாவைக் கழுத்தை நெரித்துக் கொன்றுள்ளார்.

மனைவி அனுசுயாவின் உடலை மூன்று நாட்கள் வீட்டிலேயே வைத்திருந்து, பின்னர் அதை ஒரு bedsheet – ல் சுற்றி காலி இடத்தில் வீசி விட்டுத் தப்பித்துள்ளார். போலீசில் பிடிபடாமல் இருக்கவே சாகர் அந்த ஒதுக்குப்புறமான இடத்தைத் தேர்ந்தெடுத்தார். மனைவியின் உடல் போலீசாரால் கண்டுபிடிக்கப்பட்டதா என்பதை அறிய, அடுத்தடுத்த நாட்களுக்கு அந்த இடத்திற்குச் சென்று, நோட்டமிட்டுள்ளார்.

மறுபுறம் தனது குற்றச் செயலை மறைக்க முயன்ற சாகர் எப்போதும் போல ஹோட்டலில் தொடர்ந்து பணிபுரிந்து நாடகம் போட்டுள்ளார். இதனையடுத்து சாகரை அதிரடியாக கைது செய்த போலீசார் மனைவியை கொண்ற குற்றத்திற்காக அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சிறையில் அடைத்தனர்.

Read More

Previous Post

தியாகதீபம் திலீபனின் உருவச்சிலை அகற்றம் : சீமான் கடும் கண்டனம்

Next Post

இந்தியாவுக்கு வந்த 5D தங்க நகைகள்.. சீனாவில் இருந்து இறக்கப்பட்ட புது டெக்னாலஜி.. மக்களே உஷார்..!! | China’s 5D Hard Gold Enters Indian Market: How Electroforming Tech Creates 60% Lighter, Bolder Jewelry

Next Post
இந்தியாவுக்கு வந்த 5D தங்க நகைகள்.. சீனாவில் இருந்து இறக்கப்பட்ட புது டெக்னாலஜி.. மக்களே உஷார்..!! | China’s 5D Hard Gold Enters Indian Market: How Electroforming Tech Creates 60% Lighter, Bolder Jewelry

இந்தியாவுக்கு வந்த 5D தங்க நகைகள்.. சீனாவில் இருந்து இறக்கப்பட்ட புது டெக்னாலஜி.. மக்களே உஷார்..!! | China’s 5D Hard Gold Enters Indian Market: How Electroforming Tech Creates 60% Lighter, Bolder Jewelry

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin