Last Updated:
ஆசிய விளையாட்டு: ஆடவர் ஸ்குவாஷில் வெள்ளி வென்ற அபய் சிங்கிற்கு முதல்வர் விஜய் 50 லட்சம் ரூபாய் ஊக்கத்தொகை அறிவித்துள்ளார்.
ஆசிய விளையாட்டு போட்டியில் ஆடவர் ஸ்குவாஷ் பிரிவில் வெள்ளி வென்ற தமிழ்நாட்டு வீரர் அபய் சிங்க்கு முதலமைச்சர் விஜய் 50 லட்ச ரூபாய் ஊக்கத் தொகை அறிவித்துள்ளார்.
ஜப்பானில் நடைபெற்று வரும் ஆசிய விளையாட்டுப் போட்டியின், ஆடவர் ஸ்குவாஷ் இறுதிப் போட்டியில், இந்தியாவின் அபய் சிங், மலேசியாவின் இங் இயான் யோவை (Eain Yow Ng) எதிர்கொண்டார். சிறப்பாக விளையாடிய மலேசிய வீரர், 3-0 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று தங்கப் பதகத்தை தட்டிச் சென்றார். இந்திய வீரருக்கு வெள்ளி கிடைத்தது.
இந்நிலையில், அபய் சிங்-க்கு வாழ்த்து தெரிவித்துள்ள முதலமைச்சர் விஜய், அவரது சிறப்பான சாதனையைப் பாராட்டும் வகையில், தமிழ்நாடு அரசு சார்பில் 50 லட்ச ரூபாய் ஊக்கத்தொகை வழங்கப்படும் என தெரிவித்துள்ளார். அபய் சிங்-கின் வெற்றி, தமிழ்நாட்டின் இளம் விளையாட்டு வீரர், வீராங்கனைகளுக்குப் புதிய உத்வேகத்தை அளிக்கும் என்றும் முதலமைச்சர் கூறியுள்ளார்.
மகளிர் ஒற்றையர் பிரிவு ஸ்குவாஷ் போட்டியில் மலேசியாவின் சிவசங்கரி இந்திய இளம் வீராங்கனை அனஹத் சிங்கை நேர் செட்டில் வீழ்த்தி தங்கப்பதக்கம் வென்றார். இந்திய வீராங்கனைக்கு வெள்ளிப் பதக்கம் கிடைத்தது. பேட்மிண்டனை பொருத்தவரையில், மகளிர் ஒற்றையர் பிரிவில் பி.வி.சிந்தும், இரட்டையர் பிரிவில் திரிஷா-காயத்ரி இணை கால் இறுதிப் போட்டியில் தோல்வியடைந்தனர். அதேநேரத்தில் நம்பிக்கை அளிக்கும் வகையில் தமிழ்நாட்டைச் சேர்ந்த சந்தோஷ் குமார் 400 மீட்டர் தடை ஓட்டப் பிரிவில் இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளார்.


