• Login
Saturday, September 26, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

உங்க மொபைலில் இந்த 5 கவர்மெண்ட் ஆப்-ஐ கட்டாயம் வச்சுக்கோங்க! காசும் மிச்சம்! நேரமும் மிச்சம்! | Have These 5 Government Apps on Your Phone to Access Important Services Easily

GenevaTimes by GenevaTimes
September 26, 2026
in வணிகம்
Reading Time: 1 min read
0
உங்க மொபைலில் இந்த 5 கவர்மெண்ட் ஆப்-ஐ கட்டாயம் வச்சுக்கோங்க! காசும் மிச்சம்! நேரமும் மிச்சம்! | Have These 5 Government Apps on Your Phone to Access Important Services Easily
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


உங்க மொபைலில் இந்த 5 கவர்மெண்ட் ஆப்-ஐ கட்டாயம் வச்சுக்கோங்க! காசும் மிச்சம்! நேரமும் மிச்சம்!

இன்றைய நவீன உலகில் பெரும்பாலானவர்களிடம் ஸ்மார்ட் போன் இருக்கிறது. இந்திய அரசு நாட்டு மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு சில ஆப்-களை அறிமுகம் செய்துள்ளது. இவை நம் எல்லோரிடமும் இருக்க வேண்டியவை. இந்தியக் குடிமகன் ஒவ்வொருவரும் தங்கள் ஸ்மார்ட் போனில் வைத்திருக்க வேண்டிய 5 முக்கியமான அரசு ஆப்-களை தான் இந்தப் பதிவில் பார்க்கவுள்ளோம்.

ஆர்பிஐ ரீடைல் டைரக்ட்: இது ரிசர்வ் பேங்க் ஆஃப் இந்தியா அறிமுகப்படுத்திய தளம். இந்தத் தளத்தில் நீங்கள் பாதுகாப்பான முறையில் முதலீடு செய்து லாபம் பார்க்க முடியும். மத்திய அரசின் பாண்டு, ட்ரெஸ்ஸரி பில் போன்றவற்றில் பொதுமக்கள் நேரடியாக முதலீடு செய்து எந்த புரோக்கரும் இல்லாமல் வருமானம் பார்க்க இந்த தளம் உதவிகரமானதாக இருக்கும்.

உங்க மொபைலில் இந்த 5 கவர்மெண்ட் ஆப்-ஐ கட்டாயம் வச்சுக்கோங்க! காசும் மிச்சம்! நேரமும் மிச்சம்!

நெக்ஸ்ட் ஜென் எம்-பரிவாஹன்: இந்த ஆப்பை மத்திய போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை உருவாக்கியுள்ளது. இதில் வாகனம் தொடர்பான எல்லா ஆவணங்களையும் டிஜிட்டல் முறையில் எடுத்துக் கொள்ளலாம். உதாரணமாக உங்களுடைய RC புக், இன்சூரன்ஸ், டிரைவிங் லைசன்ஸ் போன்றவற்றை டிஜிட்டல் முறையில் பாதுகாப்பாக எடுக்க முடியும்.

இதனால் நீங்கள் எங்கு சென்றாலும் உங்களுடைய ஆவணங்களை எல்லாம் எடுத்துச் செல்ல வேண்டிய அவசியம் இல்லை. அப்படி எடுத்துச் சென்றாலும் அது தற்செயலாக தொலைந்து விடும் அபாயம் இருக்கிறது. இனிமேல் வெளியில் போகும் போது இது போன்ற ஆவணங்கள் தேவைப்பட்டால் நெக்ஸ்ட் ஜென் எம்-பரிவாஹன் ஆப் மூலம் உங்களுடைய டிஜிட்டல் ஆவணங்களை காட்டினால் போதுமானது.

ஆனுவல் இன்ஃபர்மேஷன் ஸ்டேட்மெண்ட் (AIS) ஆப்: இது வருமானவரி துறையின் அதிகாரப்பூர்வ ஆப் ஆகும். இந்த ஒரு ஆப்-பில் உங்களுடைய ஒட்டுமொத்த பைனான்சியல் ஆக்டிவிட்டியும் என்னென்ன என்பதை தெரிந்து கொள்ளலாம். உங்களுடைய சம்பள விவரங்கள், முதலீடு, வட்டி வருமானம், டிடிஎஸ், கடன் போன்ற எல்லா விவரங்களும் இதில் துல்லியமாக இருக்கும், இதில் ஏதாவது முரண்பாடு இருந்தால் அதை தெரிந்து கொண்டு நீங்கள் உடனடியாக சரி செய்யவும் உதவிகரமானதாக இருக்கும்.

டிஜிலாக்கர்: உங்களுடைய பான் கார்டு, ஆதார் கார்டு, பர்த் சர்டிபிகேட், பள்ளி, கல்லூரி சான்றிதழ்கள் குறிப்பாக 10-ஆம் வகுப்பு, 12-ஆம் வகுப்பு மற்றும் நீங்கள் கல்லூரியில் படித்து முடித்த பிறகு வழங்கப்படும் கன்சாலிடேட் மார்க் சீட் போன்ற எல்லாவற்றையும் இந்த ஒரு தளத்தில் நீங்கள் சேமித்து வைக்கலாம்.

இந்த ஆவணங்கள் எல்லாம் கண்டிப்பாக நமக்கு பயன்படக்கூடியவை. எங்கு சென்றாலும் அவற்றை எடுத்துக் கொண்டும் போக முடியாது. எனவே டிஜிட்டல் வடிவில் வைத்திருந்தால் எப்போது வேண்டுமானாலும் எங்கு வேண்டுமானாலும் சட்டபூர்வமாக பயன்படுத்திக் கொள்ள முடியும். நீங்கள் அப்லோட் செய்யும் ஆவணங்கள் அனைத்தும் கிளவுட் ஸ்டோரேஜில் சேமிக்கப்படுகிறது. அதோடு இது ஒரு அரசு ஆப் என்பதால் நீங்கள் எந்தவித தயக்கமும் இன்றி சேமித்து வைக்கலாம்.

டிஜியாத்ரா: டிஜியாத்ரா இந்திய அரசால் அறிமுகப்படுத்தப்பட்ட ஆப் ஆகும். இது முழுக்க முழுக்க பேசியல் ரெகக்னிஷன் டெக்னாலஜியை கொண்டு இயங்குகிறது. இந்த ஒரு ஆப் இருந்தால் போதும் விமான நிலையங்களில் காகிதமின்றி பயணத்தை மேற்கொள்வதற்கு உதவிகரமானதாக இருக்கும்.

விமான நிலையங்களில் நுழையும் போது மற்றும் பாதுகாப்பு சோதனைகளின் போது நீங்கள் நீண்ட நேரம் செலவழிக்க தேவையில்லை. போர்டிங் பாஸ் மற்றும் பிற காகித வடிவிலான ஆவணங்கள் அனைத்தையும் மீண்டும் மீண்டும் காண்பிக்கவும் அவசியமில்லை.

Share This Article

Story first published: Saturday, September 26, 2026, 10:34 [IST]

Other articles published on Sep 26, 2026

Read More

Previous Post

ஹோர்முஸ் நீரிணை விவகாரத்தில் ஆரம்பமாகும் ரஷ்யாவின் காய் நகர்த்தல்

Next Post

ஈப்போவில் வீதிச் சோதனையின் போது கொடூரம்: போக்குவரத்துப் போலீசாரைக் காரால் மோதித் தள்ளிய நபருக்கு 5 நாட்கள் தடுப்புக் காவல்!

Next Post
ஈப்போவில் வீதிச் சோதனையின் போது கொடூரம்: போக்குவரத்துப் போலீசாரைக் காரால் மோதித் தள்ளிய நபருக்கு 5 நாட்கள் தடுப்புக் காவல்!

ஈப்போவில் வீதிச் சோதனையின் போது கொடூரம்: போக்குவரத்துப் போலீசாரைக் காரால் மோதித் தள்ளிய நபருக்கு 5 நாட்கள் தடுப்புக் காவல்!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin