வளைகுடாப் பிராந்தியத்தில் அமைதியை நிலைநாட்ட ரஷ்யா தனது இராஜதந்திர முன்னெடுப்பை தொடங்கியுள்ளதாக அந்நாட்டு வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் தெரிவித்துள்ளார்.
ஐ.நா. பொதுச் சபையில் கருத்து தெரிவித்த அவர் இந்த கருத்தை வெளியிட்டுள்ளார்.
ஹோர்முஸ் நீரிணையை சுற்றியுள்ள நெருக்கடியைத் தீர்க்கவும் ரஷ்யா ஒரு முன்னெடுப்பைத் தொடங்கியுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
ஆயுத மோதல்கள்
மேலும், வளைகுடாவில் ஏற்படும் மோதல் அலைகளுக்குத் தீர்வு காணப்பட வேண்டும் என்றும் ரஷ்ய வெளியுறவு அமைச்சர் ஐ.நா. பொதுச் சபையில் தெரிவித்துள்ளார்.

வளைகுடா மற்றும் ஹோர்முஸ் நீரிணையில் தொடர்ச்சியாக நிகழும் ஆயுத மோதல்கள் உலகளாவிய கப்பல் போக்குவரத்து மற்றும் வர்த்தகத்திற்குத் தொடர்ந்து பாதிப்பை ஏற்படுத்துவதாகவும், இந்த நெருக்கடியைத் தீர்க்க வளைகுடா நாடுகள், அரபு நாடுகள் மற்றும் ஈரான் இடையே நம்பிக்கையை வளர்க்க வேண்டியது அவசியம் என்றும் செர்ஜி லாவ்ரோவ் கூறியுள்ளார்.
மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த மத்திய கிழக்கு பிராந்தியத்தை நிலைப்படுத்துவதற்கு ஆக்கப்பூர்வமாகப் பங்களிக்க ரஷ்யா மற்ற நாடுகளுடன் இணைந்து தயாராக உள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…! |

